Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௪௨

Qur'an Surah Al-Kahf Verse 42

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاُحِيْطَ بِثَمَرِهٖ فَاَصْبَحَ يُقَلِّبُ كَفَّيْهِ عَلٰى مَآ اَنْفَقَ فِيْهَا وَهِيَ خَاوِيَةٌ عَلٰى عُرُوْشِهَا وَيَقُوْلُ يٰلَيْتَنِيْ لَمْ اُشْرِكْ بِرَبِّيْٓ اَحَدًا (الكهف : ١٨)

wa-uḥīṭa
وَأُحِيطَ
And were surrounded
அழிந்தன
bithamarihi
بِثَمَرِهِۦ
his fruits
அவனுடைய கனிகள்
fa-aṣbaḥa
فَأَصْبَحَ
so he began
ஆரம்பித்தான்
yuqallibu
يُقَلِّبُ
twisting
புரட்ட
kaffayhi
كَفَّيْهِ
his hands
தன் இரு கைகளை
ʿalā mā anfaqa
عَلَىٰ مَآ أَنفَقَ
over what he (had) spent
செலவழித்ததின் மீது
fīhā
فِيهَا
on it
அதில்
wahiya
وَهِىَ
while it (had)
அது
khāwiyatun
خَاوِيَةٌ
collapsed
வெறுமையாகிவிட்டது
ʿalā
عَلَىٰ
on
விட்டு
ʿurūshihā
عُرُوشِهَا
its trellises
அதன் செடி கொடிகளை
wayaqūlu
وَيَقُولُ
and he said
இன்னும் கூறுவான்
yālaytanī
يَٰلَيْتَنِى
"Oh! I wish
நான் இருந்திருக்க வேண்டுமே
lam ush'rik
لَمْ أُشْرِكْ
I had not associated I had not associated
நான்இணையாக்காமல்
birabbī
بِرَبِّىٓ
with my Lord
என் இறைவனுக்கு
aḥadan
أَحَدًا
anyone"
ஒருவரை

Transliteration:

Wa uheeta bisamarihee faasbaha yuqallibu kaffaihi 'alaa maaa anfaqa feehaa wa hiya khaawiyatun 'alaa 'urooshihaa wa yaqoolu yaalaitanee lam ushrik bi Rabbeee ahadaa (QS. al-Kahf:42)

English Sahih International:

And his fruits were encompassed [by ruin], so he began to turn his hands about [in dismay] over what he had spent on it, while it had collapsed upon its trellises, and said, "Oh, I wish I had not associated with my Lord anyone." (QS. Al-Kahf, Ayah ௪௨)

Abdul Hameed Baqavi:

(அந்நண்பர் கூறியவாறே) அவனுடைய விளைபொருள் அனைத்தும் அழிந்து அதற்காக அவன் செலவு செய்ததைப் பற்றி தன் இரு கைகளைப் பிசைந்துகொண்டு அத்தோட்டத்தின் மரங்கள், செடிகள் (ஆகிய அனைத்தும்) அடியுடன் சாய்ந்துவிட்டதைப் பற்றி (துக்கித்துக் கவலைகொண்டு) "என் இறைவனுக்கு நான் எவரையும் இணையாக்காமல் இருந்திருக்க வேண்டுமே?" என்று அவனே சொல்லும்படியும் நேர்ந்தது. (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௪௨)

Jan Trust Foundation

அவனுடைய விளைபொருட்கள் அழிக்கப்பட்டன. அதற்காக தான் செலவு செய்ததைக் குறித்து (வருந்தியவனாக) இரு கைகளையும் பிசைந்து கொண்டிருந்தான். அ(த்தோட்டமான)து வேரோடு சாய்ந்து கிடக்கின்றது. (இதனைப் பார்த்த) அவன் “என் இறைவனுக்கு எவரையும் நான் இணை வைக்காமல் இருந்திருக்க வேண்டுமே!” என்று கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவனுடைய கனிகள் (இன்னும் அவனது இதர செல்வங்கள் எல்லாம்) அழிந்தன. தான் அதில் செலவழித்ததின் மீது (அதை எண்ணி வருந்தி) தன் இரு கைகளையும் புரட்ட ஆரம்பித்தான். அதன் செடி கொடிகளைவிட்டு அது வெறுமையாகிவிட்டது. (அவன் மறுமையில்) கூறுவான், “என் இறைவனுக்கு ஒருவரையும் நான் இணையாக்காமல் இருந்திருக்க வேண்டுமே!”