Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௪௦

Qur'an Surah Al-Kahf Verse 40

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَعَسٰى رَبِّيْٓ اَنْ يُّؤْتِيَنِ خَيْرًا مِّنْ جَنَّتِكَ وَيُرْسِلَ عَلَيْهَا حُسْبَانًا مِّنَ السَّمَاۤءِ فَتُصْبِحَ صَعِيْدًا زَلَقًاۙ (الكهف : ١٨)

faʿasā
فَعَسَىٰ
It may be
கூடும்
rabbī
رَبِّىٓ
that my Lord
என் இறைவன்
an yu'tiyani
أَن يُؤْتِيَنِ
that my Lord will give me
அவர்கள் எனக்குத் தந்து
khayran
خَيْرًا
better
சிறந்ததை
min jannatika
مِّن جَنَّتِكَ
than your garden
உன்தோட்டத்தைவிட
wayur'sila
وَيُرْسِلَ
and will send
இன்னும் அனுப்ப
ʿalayhā
عَلَيْهَا
upon it
அதன் மீது
ḥus'bānan
حُسْبَانًا
a calamity
வேதனையை,அழிவை
mina l-samāi
مِّنَ ٱلسَّمَآءِ
from the sky
வானத்திலிருந்து
fatuṣ'biḥa
فَتُصْبِحَ
then it will become
அது ஆகிவிடும்
ṣaʿīdan
صَعِيدًا
ground
வழுவழுப்பான
zalaqan
زَلَقًا
slippery
வெறும் தரையாக

Transliteration:

Fa'asaa Rabeee any yu'tiyani khairam min jannatika wa yursila 'alaihaa husbaanam minas samaaa'i fatusbiha sa'eedan zalaqaa (QS. al-Kahf:40)

English Sahih International:

It may be that my Lord will give me [something] better than your garden and will send upon it a [disastrous] penalty from the sky, and it will become a smooth, dusty ground, (QS. Al-Kahf, Ayah ௪௦)

Abdul Hameed Baqavi:

உன்னுடைய தோட்டத்தைவிட மிக்க மேலானதை என் இறைவன் எனக்குக் கொடுக்கவும் (உன் நன்றிகெட்ட தன்மையின் காரணமாக) உன் தோப்பின் மீது யாதொரு ஆபத்தை வானத்தில் இருந்து இறக்கி (அதிலுள்ள மரம், செடிகளையெல்லாம் அழித்து) அதனை வெட்டவெளியாக (என் இறைவன்) செய்து விடவும் கூடும். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௪௦)

Jan Trust Foundation

“உன்னுடைய தோட்டத்தைவிட மேலானதை என் இறைவன் எனக்குத் தரவும் (உன் தோட்டத்தின் மீது) வானத்திலிருந்தும் இடிகளை அனுப்பி அதை அதனால் மழுமட்டையான திடலாக ஆக்கி விடவும் போதும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உன் தோட்டத்தை விட சிறந்ததை என் இறைவன் எனக்குத் தந்து, அ(ந்)த (உன் தோட்டத்தி)ன் மீது அழிவை வானத்திலிருந்து அவன் அனுப்பக்கூடும். (அப்போது அத்தோட்டம்) வழுவழுப்பான வெறும் தரையாக ஆகிவிடும்.