குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௩௯
Qur'an Surah Al-Kahf Verse 39
ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَوْلَآ اِذْ دَخَلْتَ جَنَّتَكَ قُلْتَ مَا شَاۤءَ اللّٰهُ ۙ لَا قُوَّةَ اِلَّا بِاللّٰهِ ۚاِنْ تَرَنِ اَنَا۠ اَقَلَّ مِنْكَ مَالًا وَّوَلَدًاۚ (الكهف : ١٨)
- walawlā
- وَلَوْلَآ
- And why (did you) not
- வேண்டாமா?
- idh dakhalta
- إِذْ دَخَلْتَ
- when you entered
- நீ நுழைந்த போது
- jannataka
- جَنَّتَكَ
- your garden
- உன் தோட்டத்தில்
- qul'ta
- قُلْتَ
- say
- நீ கூறியிருக்க
- mā shāa
- مَا شَآءَ
- "What wills
- எது/நாடினான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- lā quwwata
- لَا قُوَّةَ
- (there is) no power
- அறவே ஆற்றல் இல்லை
- illā bil-lahi
- إِلَّا بِٱللَّهِۚ
- except with Allah"
- தவிர/அல்லாஹ்வைக் கொண்டே
- in tarani
- إِن تَرَنِ
- If you see
- என்னை நீ பார்த்தால்
- anā
- أَنَا۠
- me
- நான்
- aqalla
- أَقَلَّ
- lesser
- குறைவானவனாக
- minka
- مِنكَ
- than you
- உன்னைவிட
- mālan
- مَالًا
- (in) wealth
- செல்வத்திலும்
- wawaladan
- وَوَلَدًا
- and children
- சந்ததியிலும்
Transliteration:
Wa law laaa iz dakhalta jannataka qulta maa shaaa'al laahu laa quwwata illaa billaah; in tarani ana aqalla minka maalanw wa waladaa(QS. al-Kahf:39)
English Sahih International:
And why did you, when you entered your garden, not say, 'What Allah willed [has occurred]; there is no power except in Allah'? Although you see me less than you in wealth and children, (QS. Al-Kahf, Ayah ௩௯)
Abdul Hameed Baqavi:
அன்றி, நீ உன் தோட்டத்தில் நுழைந்தபொழுது (இவை அனைத்தும்) அல்லாஹ் (தன் அருளால்) எனக்குத் தந்தவையே! அல்லாஹ்வின் உதவியின்றி (நாம்) ஒன்றும் (செய்து) விட முடியாது? என்று நீ கூறியிருக்க வேண்டாமா? பொருளிலும் சந்ததியிலும் நான் உனக்குக் குறைவாக இருப்பதை நீ கண்டபோதிலும், (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௩௯)
Jan Trust Foundation
“மேலும், நீ உன் தோட்டத்தில் நுழைந்தபோது “மாஷா அல்லாஹு; லா குவ்வத்த இல்லா பில்லாஹ்” - அல்லாஹ் நாடியதே நடக்கும்; அனைத்து சக்தியும் அல்லாஹ்வுக்கேயன்றி வேறில்லை - என்று கூறியிருக்க வேண்டாமா? செல்வத்திலும், பிள்ளையிலும் நான் உன்னைவிடக் குறைந்தவனாக இருப்பதாய் நீ கண்ட போதிலும் -
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உன் தோட்டத்தில் நீ நுழைந்தபோது “இது அல்லாஹ் நாடியது, அல்லாஹ்வைக் கொண்டே தவிர (நன்மை செய்ய நமக்கு) அறவே ஆற்றல் இல்லை”என்று நீ கூறியிருக்க வேண்டாமா? நான் உன்னைவிட செல்வத்திலும் சந்ததியிலும் குறைவானவனாக என்னை நீ பார்த்தால்...