குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௩௭
Qur'an Surah Al-Kahf Verse 37
ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ لَهٗ صَاحِبُهٗ وَهُوَ يُحَاوِرُهٗٓ اَكَفَرْتَ بِالَّذِيْ خَلَقَكَ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ سَوّٰىكَ رَجُلًاۗ (الكهف : ١٨)
- qāla
- قَالَ
- Said
- கூறினார்
- lahu
- لَهُۥ
- to him
- அவனுக்கு
- ṣāḥibuhu
- صَاحِبُهُۥ
- his companion
- அவரது தோழர்
- wahuwa
- وَهُوَ
- while he
- அவர்
- yuḥāwiruhu
- يُحَاوِرُهُۥٓ
- was talking to him
- அவனிடம் பேசியவராக
- akafarta
- أَكَفَرْتَ
- "Do you disbelieve
- நீ நிராகரித்தாயா?
- bi-alladhī
- بِٱلَّذِى
- in One Who
- எப்படிப்பட்டவனை
- khalaqaka
- خَلَقَكَ
- created you
- உன்னைப் படைத்தான்
- min turābin
- مِن تُرَابٍ
- from dust
- மண்ணிலிருந்து
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- min nuṭ'fatin
- مِن نُّطْفَةٍ
- from a minute quantity of semen
- இந்திரியத்திலிருந்து
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- sawwāka
- سَوَّىٰكَ
- fashioned you
- சீரமைத்தான்
- rajulan
- رَجُلًا
- (into) a man?
- ஓர் ஆடவராக
Transliteration:
Qaala lahoo saahibuhoo wa huwa yuhaawiruhooo akafarta billazee khalaqaka min turaabin summa min nutfatin summa sawwaaka rajulaa(QS. al-Kahf:37)
English Sahih International:
His companion said to him while he was conversing with him, "Have you disbelieved in He who created you from dust and then from a sperm-drop and then proportioned you [as] a man? (QS. Al-Kahf, Ayah ௩௭)
Abdul Hameed Baqavi:
அதற்கு அவனுடன் பேசிக் கொண்டிருந்த அவனுடைய நண்பன் அவனை நோக்கி "உன்னைப் படைத்தவனையே நீ நிராகரிக்கிறாயா? மண்ணிலிருந்து பின்னர் இந்திரியத்தின் ஒரு துளியிலிருந்து உன்னைப் படைத்த அவன், பின்னர் ஒரு முழு மனிதனாகவும் உன்னை அமைத்தான். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௩௭)
Jan Trust Foundation
அவனுடைய தோழன் அவனுடன் (இது பற்றித்) தர்க்கித்தவனாக| “உன்னை மண்ணிலிருந்தும், பின் ஒரு துளி இந்திரியத்திலிருந்தும் படைத்து, பின்பு உன்னைச் சரியான மனிதனாக ஆக்கினானே அவனையா நீ நிராகரிக்கின்றாய்?” என்று அவனிடம் கேட்டான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவனிடம் அவர் பேசியவராக அவனுக்கு அவரது தோழர் கூறினார்: “உன்னை மண்ணிலிருந்து பிறகு இந்திரியத்திலிருந்து படைத்து பிறகு உன்னை ஓர் ஆடவராக சீரமைத்தானே அப்படிப்பட்டவனை நீ நிராகரித்தாயா?