Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௩௬

Qur'an Surah Al-Kahf Verse 36

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّمَآ اَظُنُّ السَّاعَةَ قَاۤىِٕمَةً وَّلَىِٕنْ رُّدِدْتُّ اِلٰى رَبِّيْ لَاَجِدَنَّ خَيْرًا مِّنْهَا مُنْقَلَبًا (الكهف : ١٨)

wamā aẓunnu
وَمَآ أَظُنُّ
And not I think
இன்னும் நான்எண்ணவில்லை
l-sāʿata qāimatan
ٱلسَّاعَةَ قَآئِمَةً
the Hour will occur
மறுமை/நிகழும்
wala-in rudidttu
وَلَئِن رُّدِدتُّ
And if I am brought back
நான் திரும்பக் கொண்டுவரப்பட்டாலும்
ilā rabbī
إِلَىٰ رَبِّى
to my Lord
என் இறைவனிடம்
la-ajidanna
لَأَجِدَنَّ
I will surely find
நிச்சயம் பெறுவேன்
khayran
خَيْرًا
better
சிறந்த ஒன்றை
min'hā
مِّنْهَا
than this
இதைவிட
munqalaban
مُنقَلَبًا
(as) a return"
மீளுமிடமாக

Transliteration:

Wa maaa azunnus Saa'ata qaaa'imatanw wa la'ir rudittu ilaa Rabbee la ajidanna khairam minhaa munqalabaa (QS. al-Kahf:36)

English Sahih International:

And I do not think the Hour will occur. And even if I should be brought back to my Lord, I will surely find better than this as a return." (QS. Al-Kahf, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

"மறுமை ஏற்படும் என்றும் நான் நம்பவேயில்லை. ஒருகால் (மறுமை ஏற்பட்டு) நான் என் இறைவனிடம் கொண்டு போகப்பட்டாலும் இங்கிருப்பதைவிட அங்கு நான் மேலானவனாக இருப்பதையே காண்பேன்" என்றும் கூறினான். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௩௬)

Jan Trust Foundation

(நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை ஏற்படும் என்றும் நான் எண்ணவில்லை. (அப்படி ஏதும் நிகழ்ந்து) நான் என் இறைவனிடம் மீண்டும் கொண்டு செல்லப்படுவேனாயின், நிச்சயமாக இங்கிருப்பதைவிட மேலான இடத்தையே நான் காண்பேன்” என்றும் கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“மறுமை நிகழும் என்றும் நான் எண்ணவில்லை. அப்படி நான் என் இறைவனிடம் திரும்பக் கொண்டுவரப்பட்டாலும் இதைவிட சிறந்த ஒன்றை (எனக்கு) மீளுமிடமாக நிச்சயம் பெறுவேன்.”