Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௩௧

Qur'an Surah Al-Kahf Verse 31

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اُولٰۤىِٕكَ لَهُمْ جَنّٰتُ عَدْنٍ تَجْرِيْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُ يُحَلَّوْنَ فِيْهَا مِنْ اَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَّيَلْبَسُوْنَ ثِيَابًا خُضْرًا مِّنْ سُنْدُسٍ وَّاِسْتَبْرَقٍ مُّتَّكِىِٕيْنَ فِيْهَا عَلَى الْاَرَاۤىِٕكِۗ نِعْمَ الثَّوَابُۗ وَحَسُنَتْ مُرْتَفَقًا (الكهف : ١٨)

ulāika
أُو۟لَٰٓئِكَ
Those
அவர்கள்
lahum
لَهُمْ
for them
அவர்களுக்கு உண்டு
jannātu ʿadnin
جَنَّٰتُ عَدْنٍ
(are) Gardens of Eden
சொர்க்கங்கள்/அத்ன்
tajrī
تَجْرِى
flows
ஓடும்
min taḥtihimu
مِن تَحْتِهِمُ
from underneath them
அவர்களின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
the rivers
நதிகள்
yuḥallawna
يُحَلَّوْنَ
They will be adorned
அலங்காரம் செய்யப்படுவார்கள்
fīhā
فِيهَا
therein
அவற்றில்
min asāwira
مِنْ أَسَاوِرَ
[of] (with) bracelets
வளையல்களினால்
min dhahabin
مِن ذَهَبٍ
of gold
தங்கத்திலிருந்து
wayalbasūna
وَيَلْبَسُونَ
and will wear
இன்னும் அணிவார்கள்
thiyāban
ثِيَابًا
garments
ஆடைகளை
khuḍ'ran
خُضْرًا
green
பச்சை நிற
min sundusin
مِّن سُندُسٍ
of fine silk
மென்மையான பட்டுகளிலிருந்து
wa-is'tabraqin
وَإِسْتَبْرَقٍ
and heavy brocade
தடிப்பமான பட்டு
muttakiīna
مُّتَّكِـِٔينَ
reclining
சாய்ந்தவர்களாக
fīhā
فِيهَا
therein
அவற்றில்
ʿalā l-arāiki
عَلَى ٱلْأَرَآئِكِۚ
on adorned couches
கட்டில்கள் மீது
niʿ'ma
نِعْمَ
Excellent
சிறந்த
l-thawābu
ٱلثَّوَابُ
(is) the reward
கூலி
waḥasunat
وَحَسُنَتْ
and good
இன்னும் அழகியது
mur'tafaqan
مُرْتَفَقًا
(is) the resting place
ஓய்விடம்

Transliteration:

Ulaaa'ika lahum Jannaatu 'Adnin tajree min tahtihimul anhaaru yuhallawna feehaa min asaawira min zahabinw wa yalbasoona siyaaban khudram min sundusinw wa istabraqim muttaki'eena feehaa 'alal araaa'ik; ni'mas sawaab; wa hasunat murtafaqaa (QS. al-Kahf:31)

English Sahih International:

Those will have gardens of perpetual residence; beneath them rivers will flow. They will be adorned therein with bracelets of gold and will wear green garments of fine silk and brocade, reclining therein on adorned couches. Excellent is the reward, and good is the resting place. (QS. Al-Kahf, Ayah ௩௧)

Abdul Hameed Baqavi:

இவர்களுக்கு நிலையான சுவனபதிகள் உண்டு. அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். அவர்களுக்குப் (பரிசாகப்) பொற்கடகம் அணிவிக்கப்படும். மெல்லியதாகவோ அழுத்தமானதாகவோ (அவர்கள் விரும்பிய) பசுமையான பட்டாடைகளை அணிவார்கள். ஆசனங்களிலுள்ள தலையணைகள் மீது சாய்ந்து (மிக்க உல்லாசமாக) இருப்பார்கள். இவர்களுடைய கூலி மிக்க நன்றே! இவர்கள் இன்பம் சுவைக்கும் இடமும் மிக்க அழகானது. (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௩௧)

Jan Trust Foundation

அ(த்தகைய)வர்களுக்கு என்றென்றும் தங்கியிருக்கக் கூடிய சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கு பொன்னாலாகிய கடகங்கள் அணிவிக்கப் படும், ஸுன்துஸ், இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகளை அவர்கள் அணிந்திருப்பார்கள்; அங்குள்ள உயர்ந்த ஆசனங்களின் மீது சாய்(ந்து மகிழ்)ந்து இருப்பார்கள் - (அவர்களுடைய) நற் கூலி மிகவும் பாக்கியமிக்கதாயிற்று; (அவர்கள்) இளைப்பாறுமிடமும் மிக அழகியதாற்று.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள்: ‘அத்ன்’சொர்க்கங்கள் அவர்களுக்கு உண்டு. அவர்களின் கீழ் நதிகள் ஓடும். அவற்றில் தங்க வளையல்களினால் அலங்காரம் செய்யப்படுவார்கள். இன்னும் மென்மையான, தடிப்பமான பட்டுகளிலிருந்து (விரும்பிய) பச்சை நிற ஆடைகளை அணிவார்கள். அவற்றில் கட்டில்கள் மீது(ள்ள தலையணைகளில்) சாய்ந்தவர்களாக (ஒருவர் மற்றவரிடம் பேசுவார்கள்). இதுவே சிறந்த கூலி. இதுவே அழகிய ஓய்விடம்.