குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௨௯
Qur'an Surah Al-Kahf Verse 29
ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقُلِ الْحَقُّ مِنْ رَّبِّكُمْۗ فَمَنْ شَاۤءَ فَلْيُؤْمِنْ وَّمَنْ شَاۤءَ فَلْيَكْفُرْۚ اِنَّآ اَعْتَدْنَا لِلظّٰلِمِيْنَ نَارًاۙ اَحَاطَ بِهِمْ سُرَادِقُهَاۗ وَاِنْ يَّسْتَغِيْثُوْا يُغَاثُوْا بِمَاۤءٍ كَالْمُهْلِ يَشْوِى الْوُجُوْهَۗ بِئْسَ الشَّرَابُۗ وَسَاۤءَتْ مُرْتَفَقًا (الكهف : ١٨)
- waquli
- وَقُلِ
- And say
- இன்னும் கூறுவீராக
- l-ḥaqu
- ٱلْحَقُّ
- "The truth
- உண்மை
- min rabbikum
- مِن رَّبِّكُمْۖ
- (is) from your Lord
- உங்கள் இறைவனிடமிருந்து
- faman shāa
- فَمَن شَآءَ
- so whoever wills -
- எவர்/விரும்பினார்
- falyu'min
- فَلْيُؤْمِن
- let him believe
- நம்பிக்கை கொள்ளலாம்
- waman
- وَمَن
- and whoever
- இன்னும் எவர்
- shāa
- شَآءَ
- wills -
- விரும்பினார்
- falyakfur
- فَلْيَكْفُرْۚ
- let him disbelieve"
- நிராகரித்து விடலாம்
- innā
- إِنَّآ
- Indeed We
- நிச்சயமாக நாம்
- aʿtadnā
- أَعْتَدْنَا
- have prepared
- ஏற்படுத்தியுள்ளோம்
- lilẓẓālimīna
- لِلظَّٰلِمِينَ
- for the wrongdoers
- தீயவர்களுக்கு
- nāran
- نَارًا
- a Fire
- நரக நெருப்பை
- aḥāṭa
- أَحَاطَ
- will surround
- சூழ்ந்துள்ளது
- bihim
- بِهِمْ
- them
- அவர்களை
- surādiquhā
- سُرَادِقُهَاۚ
- its walls
- அதன் சுவர்
- wa-in yastaghīthū
- وَإِن يَسْتَغِيثُوا۟
- And if they call for relief
- அவர்கள் உதவி தேடினால்
- yughāthū
- يُغَاثُوا۟
- they will be relieved
- உதவப்படுவார்கள்
- bimāin
- بِمَآءٍ
- with water
- நீரைக் கொண்டு
- kal-muh'li
- كَٱلْمُهْلِ
- like molten brass
- முற்றிலும் சூடேறி உருகிப்போன உலோக திராவத்தைப் போன்ற
- yashwī
- يَشْوِى
- (which) scalds
- பொசுக்கக் கூடியது
- l-wujūha
- ٱلْوُجُوهَۚ
- the faces
- முகங்களை
- bi'sa
- بِئْسَ
- Wretched
- மகா கெட்டது
- l-sharābu
- ٱلشَّرَابُ
- (is) the drink
- பானம்
- wasāat
- وَسَآءَتْ
- and evil
- இன்னும் அது தீயது
- mur'tafaqan
- مُرْتَفَقًا
- (is) the resting place
- ஓய்விடம்
Transliteration:
Wa qulil haqqu mir Rabbikum faman shaaa'a falyu minw wa man shaaa'a falyakfur; innaaa a'tadnaa lizzaalimeena Naaran ahaata bihim suraadiquhaa; wa iny yastagheesoo yaghaasoo bimaaa'in kalmuhli yashwil wujooh' bi'sash-sharaab; wa saaa'at murtafaqaa(QS. al-Kahf:29)
English Sahih International:
And say, "The truth is from your Lord, so whoever wills – let him believe; and whoever wills – let him disbelieve." Indeed, We have prepared for the wrongdoers a fire whose walls will surround them. And if they call for relief, they will be relieved with water like murky oil, which scalds [their] faces. Wretched is the drink, and evil is the resting place. (QS. Al-Kahf, Ayah ௨௯)
Abdul Hameed Baqavi:
(நபியே!) உங்கள் இறைவனால் அருளப்பட்ட (இவ்வேதமான)து முற்றிலும் உண்மையானது. விரும்பியவர் (இதை) நம்பிக்கை கொள்ளலாம்; விரும்பியவர் (இதை) நிராகரித்துவிடலாம். (அதனால்) நமக்கொன்றும் நஷ்டமில்லை. (ஆனால் இதை நிராகரிக்கும்) அநியாயக்காரர்களுக்கு நிச்சயமாக நாம் நரகத்தைத் தான் தயார்படுத்தி உள்ளோம். அந்நரகத்தின் ஜுவாலைகள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) அபயமிட்டால் காய்ந்து உருகிய செம்பைப் போலுள்ள நீரே அவர்களுக்குக் கொடுக்கப்படும். (அவர் அதனைக் குடிப்பதற்கு முன்னதாகவே) அது அவர்களுடைய முகத்தைச் சுட்டுக் கருக்கிவிடும். அன்றி அது மிக்க (அருவருப்பான) கெட்ட குடிபானமாகும். அவர்கள் இளைப்பாறும் இடம் மிகக் கெட்டது. (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௨௯)
Jan Trust Foundation
(நபியே!) இன்னும் நீர் கூறுவீராக| “இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது;” ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) உங்கள் இறைவனிடமிருந்து உண்மை(யான இந்த வேதம்) வந்துவிட்டது. விரும்பியவர்கள் (இதை) நம்பிக்கை கொள்ளலாம். விரும்பியவர்கள் (இதை) நிராகரித்து விடலாம். நிச்சயமாக நாம் (இதை நிராகரிக்கின்ற) தீயவர்களுக்கு நரக நெருப்பை ஏற்படுத்தியுள்ளோம். அதன் சுவர் அவர்களை சூழ்ந்துள்ளது. அவர்கள் உதவி தேடினால் முகங்களை பொசுக்கக்கூடிய முற்றிலும் சூடேறி உருகிப்போன உலோக திராவத்தைப் போன்ற நீரைக் கொண்டே உதவப்படுவார்கள். (அது ஒரு) மகா கெட்ட பானம். அது ஒரு தீய ஓய்விடம் (சாயுமிடம்) ஆகும்.