குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௨௭
Qur'an Surah Al-Kahf Verse 27
ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاتْلُ مَآ اُوْحِيَ اِلَيْكَ مِنْ كِتَابِ رَبِّكَۗ لَا مُبَدِّلَ لِكَلِمٰتِهٖۗ وَلَنْ تَجِدَ مِنْ دُوْنِهٖ مُلْتَحَدًا (الكهف : ١٨)
- wa-ut'lu
- وَٱتْلُ
- And recite
- இன்னும் ஓதுவீராக
- mā ūḥiya
- مَآ أُوحِىَ
- what has been revealed
- எது/வஹீ அறிவிக்கப்பட்டது
- ilayka
- إِلَيْكَ
- to you
- உமக்கு
- min kitābi
- مِن كِتَابِ
- of the Book
- வேதத்தில்
- rabbika
- رَبِّكَۖ
- (of) your Lord
- உம் இறைவனின்
- lā mubaddila
- لَا مُبَدِّلَ
- None can change
- அறவே இல்லை/மாற்றுபவர்
- likalimātihi
- لِكَلِمَٰتِهِۦ
- His Words
- அவனுடைய வாக்கியங்களை
- walan tajida
- وَلَن تَجِدَ
- and never you will find
- காணமாட்டீர்
- min dūnihi
- مِن دُونِهِۦ
- besides Him besides Him
- அவனையன்றி
- mul'taḥadan
- مُلْتَحَدًا
- a refuge
- அடைக்கலம் பெறுமிடத்தை
Transliteration:
Watlu maaa oohiya ilaika min Kitaabi Rabbika laa mubaddila li Kalimaatihee wa lan tajida min doonihee multahadaa(QS. al-Kahf:27)
English Sahih International:
And recite, [O Muhammad], what has been revealed to you of the Book of your Lord. There is no changer of His words, and never will you find in other than Him a refuge. (QS. Al-Kahf, Ayah ௨௭)
Abdul Hameed Baqavi:
(நபியே!) வஹீ மூலம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட உங்கள் இறைவனின் வேதத்தை நீங்கள் (தொடர்ந்து) ஓதிக் கொண்டே இருங்கள்! அவனுடைய கட்டளைகளை எவராலும் மாற்றிவிட முடியாது. அவனையன்றி உங்களுக்கு பாதுகாக்கும் எந்த ஒரு இடத்தையும் நீங்கள் காணமாட்டீர்கள். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௨௭)
Jan Trust Foundation
இன்னும் (நபியே!) உம்முடைய இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு வஹீ மூலம் அருளப்பட்டதை நீர் ஓதி வருவீராக - அவனுடைய வார்த்தைகளை மாற்றக் கூடியவர் எவருமில்லை; இன்னும் அவனையன்றி புகலிடம் எதையும் நீர் காணமாட்டீர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(ஒவ்வொரு நாளும்) உம் இறைவனின் வேதத்தில் உமக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டதை (இயன்றளவு) ஓதுவீராக! (அதன்படி செயல்படுவீராக!) அவனுடைய வாக்கியங்களை மாற்றுபவர் அறவே இல்லை. இன்னும் அவனையன்றி அடைக்கலம் பெறுமிடத்தை காணவே மாட்டீர்