Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௨௪

Qur'an Surah Al-Kahf Verse 24

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَّآ اَنْ يَّشَاۤءَ اللّٰهُ ۖوَاذْكُرْ رَّبَّكَ اِذَا نَسِيْتَ وَقُلْ عَسٰٓى اَنْ يَّهْدِيَنِ رَبِّيْ لِاَقْرَبَ مِنْ هٰذَا رَشَدًا (الكهف : ١٨)

illā
إِلَّآ
Except
தவிர
an yashāa
أَن يَشَآءَ
"If Allah wills"
நாடினால்
l-lahu
ٱللَّهُۚ
Allah wills"
அல்லாஹ்
wa-udh'kur
وَٱذْكُر
And remember
நினைவு கூருவீராக
rabbaka
رَّبَّكَ
your Lord
உம் இறைவனை
idhā nasīta
إِذَا نَسِيتَ
when you forget
நீர் மறந்து விட்டால்
waqul
وَقُلْ
and say
இன்னும் கூறுவீராக
ʿasā
عَسَىٰٓ
"Perhaps
கூடும்
an yahdiyani
أَن يَهْدِيَنِ
[that] will guide me
அவன் நேர்வழி காட்ட/எனக்கு
rabbī
رَبِّى
my Lord
என் இறைவன்
li-aqraba
لِأَقْرَبَ
to a nearer (way)
மிக நெருக்கமானதன் பக்கம்
min hādhā
مِنْ هَٰذَا
than this
இதைவிட
rashadan
رَشَدًا
right way"
தெளிவான அறிவிற்கு

Transliteration:

Illaaa any yashaaa'al laah; wazkur Rabbaka izaa naseeta wa qul 'asaaa any yahdiyani Rabbee li aqraba min haazaa rashadaa (QS. al-Kahf:24)

English Sahih International:

Except [when adding], "If Allah wills." And remember your Lord when you forget [it] and say, "Perhaps my Lord will guide me to what is nearer than this to right conduct." (QS. Al-Kahf, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

ஆயினும், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால் நாளைக்குச் செய்வேன்) என்று கூறுங்கள். நீங்கள் இதனை மறந்து விட்டால் (ஞாபகம் வந்ததும் இவ்வாறு) உங்கள் இறைவனின் பெயரைக் கூறுங்கள். தவிர, (நன்மைக்கு) இதைவிட இன்னும் நெருங்கிய பல விஷயங்களையும் என் இறைவன் எனக்கு அறிவிக்கக் கூடும்" என்றும் கூறுங்கள். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௨௪)

Jan Trust Foundation

“இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்” என்று சேர்த்துச் சொன்னால்) அன்றி; தவிர, (இதை) நீர் மறந்து விடுங்கால் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக; இன்னும், “என்னுடைய இறைவன், நேர் வழியில் இதை விட இன்னும் நெருங்கிய (விஷயத்)தை எனக்கு அறிவிக்கக்கூடும்” என்றும் கூறுவீராக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் நாடினால் (என்று கூறியே) தவிர (எதையும் செய்வேன் என்று கூறாதீர்). நீர் மறந்து விட்டால் (பிறகு நினைவு வந்தவுடன்) உம் இறைவனை நினைவு கூருவீராக! இன்னும், என் இறைவன் இதைவிட (மிக சரியான) தெளிவான அறிவிற்கு மிக நெருக்கமானதன் பக்கம் எனக்கு அவன் நேர்வழி காட்டக்கூடும் என்று (ஆதரவுடன்) கூறுவீராக!