Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௨

Qur'an Surah Al-Kahf Verse 2

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَيِّمًا لِّيُنْذِرَ بَأْسًا شَدِيْدًا مِّنْ لَّدُنْهُ وَيُبَشِّرَ الْمُؤْمِنِيْنَ الَّذِيْنَ يَعْمَلُوْنَ الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ اَجْرًا حَسَنًاۙ (الكهف : ١٨)

qayyiman
قَيِّمًا
Straight
நீதமிகுந்ததாக, நேர்மை நிறைந்ததாக, பாதுகாக்கக்கூடியதாக
liyundhira
لِّيُنذِرَ
to warn
அது எச்சரிப்பதற்காக
basan
بَأْسًا
(of) a punishment
வேதனையை
shadīdan
شَدِيدًا
severe
கடுமையான(து)
min ladun'hu
مِّن لَّدُنْهُ
from near Him
அவன் புறத்திலிருந்து
wayubashira
وَيُبَشِّرَ
and give glad tidings
இன்னும் நற்செய்தி கூறுவதற்காக
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
(to) the believers
நம்பிக்கையாளர்களுக்கு
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
yaʿmalūna
يَعْمَلُونَ
do
செய்கின்றார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
righteous deeds
நன்மைகளை
anna
أَنَّ
that
நிச்சயமாக
lahum
لَهُمْ
for them
அவர்களுக்கு
ajran
أَجْرًا
(is) a good reward
கூலி
ḥasanan
حَسَنًا
(is) a good reward
அழகிய(து)

Transliteration:

Qaiyimal liyunzira baasan shadeedam mil ladunhu wa yubashshiral mu'mineenal lazeena ya'maloonas saalihaati anna lahum ajran hasanaa (QS. al-Kahf:2)

English Sahih International:

[He has made it] straight, to warn of severe punishment from Him and to give good tidings to the believers who do righteous deeds that they will have a good reward [i.e., Paradise]. (QS. Al-Kahf, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

இது உறுதியான அடிப்படையின் மீதுள்ளது. அல்லாஹ் வுடைய கடினமான வேதனையைப் பற்றி (நிராகரிப்பவர் களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், எவர்கள் இதனை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு (அழகான) நற்கூலி(யாகிய சுவனபதி) நிச்சயமாக உண்டென்று நற்செய்தி கூறுவதற்காகவும் (இதனை இறக்கி வைத்தான்.) (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௨)

Jan Trust Foundation

அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு - நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீதமிகுந்ததாக, நேர்மை நிறைந்ததாக, (முந்திய வேதங்களில் உள்ள சத்தியத்தை) பாதுகாக்கக்கூடியதாக (அந்த வேதத்தை அவன் இறக்கினான்). (அந்த வேதத்தை மறுப்பவர்களுக்கு) அவன் புறத்திலிருந்து கடுமையான வேதனையை அது எச்சரிப்பதற்காகவும் நன்மைகளை செய்கின்ற நம்பிக்கையாளர்களுக்கு - நிச்சயமாக அவர்களுக்கு அழகிய கூலி உண்டு - என்று நற்செய்தி கூறுவதற்காகவும் (அதை இறக்கினான்).