Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௧௬

Qur'an Surah Al-Kahf Verse 16

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذِ اعْتَزَلْتُمُوْهُمْ وَمَا يَعْبُدُوْنَ اِلَّا اللّٰهَ فَأْوٗٓا اِلَى الْكَهْفِ يَنْشُرْ لَكُمْ رَبُّكُمْ مِّنْ رَّحْمَتِهٖ وَيُهَيِّئْ لَكُمْ مِّنْ اَمْرِكُمْ مِّرْفَقًا (الكهف : ١٨)

wa-idhi iʿ'tazaltumūhum
وَإِذِ ٱعْتَزَلْتُمُوهُمْ
And when you withdraw from them
நீங்கள் விலகியபோது/அவர்களை
wamā yaʿbudūna
وَمَا يَعْبُدُونَ
and what they worship
இன்னும் எவை/வணங்குகின்றார்கள்
illā
إِلَّا
except
தவிர
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
fawū
فَأْوُۥٓا۟
then retreat
ஒதுங்குங்கள்
ilā l-kahfi
إِلَى ٱلْكَهْفِ
to the cave
குகையில்
yanshur
يَنشُرْ
Will spread
விரிப்பான்
lakum
لَكُمْ
for you
உங்களுக்கு
rabbukum
رَبُّكُم
your Lord
உங்கள் இறைவன்
min raḥmatihi
مِّن رَّحْمَتِهِۦ
of His Mercy
தன் அருளில்
wayuhayyi
وَيُهَيِّئْ
and will facilitate
இன்னும் ஏற்படுத்துவான்
lakum
لَكُم
for you
உங்களுக்கு
min amrikum
مِّنْ أَمْرِكُم
[from] your affair
உங்கள் காரியத்தில்
mir'faqan
مِّرْفَقًا
(in) ease"
இலகுவை

Transliteration:

Wa izi'tazal tumoohum wa maa ya'budoona illal laaha faawooo ilal kahfi yanshur lakum Rabbukum mir rahmatihee wa yuhaiyi' lakum min amrikum mirfaqa (QS. al-Kahf:16)

English Sahih International:

[The youths said to one another], "And when you have withdrawn from them and that which they worship other than Allah, retreat to the cave. Your Lord will spread out for you of His mercy and will prepare for you from your affair facility." (QS. Al-Kahf, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

அவர்களிலிருந்தும் அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவைகளிலிருந்தும் நீங்கள் விலகிக்கொண்ட பின்னர் நீங்கள் (அவர்களை விட்டுத் தப்ப) இக்குகைக்குள் சென்றுவிடுங்கள். உங்கள் இறைவன் உங்கள் மீது தன் அருளைச் சொரிந்து, (வாழ்வதற்குரிய) உங்கள் காரியங்களை எளிதாகவும் உங்களுக்கு அமைத்து விடுவான் (என்றும் தங்களுக்குள் கூறிக்கொண்டனர்.) (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௧௬)

Jan Trust Foundation

அவர்களையும், அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றையும் விட்டு விலகி நீங்கள், குகையின்பால் ஒதுங்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய இறைவன் தன்னுடைய ரஹ்மத்திலிருந்து உங்களுக்கு விசாலமாகக் கொடுத்து, உங்கள் காரியத்தில் உணவு பிரச்சனையை உங்களுக்கு எளிதாக்கித் தருவான் (என்று அவர்களில் ஓர் இளைஞர் சொன்னார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவர்களில் சிலர் மற்றவர்களை நோக்கி கூறினர்:) “(சிலை வணங்கும்) அவர்களையும் அல்லாஹ்வைத் தவிர அவர்கள் வணங்குகின்றவற்றையும் விட்டு நீங்கள் விலகியபோது குகையில் ஒதுங்குங்கள். உங்கள் இறைவன் உங்களுக்கு தன் அருளிலிருந்து (தேவையான வாழ்வாதாரத்தை) விரிப்பான். இன்னும் உங்கள் காரியத்தில் இலகுவை உங்களுக்கு ஏற்படுத்துவான்.