Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௧௫

Qur'an Surah Al-Kahf Verse 15

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هٰٓؤُلَاۤءِ قَوْمُنَا اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖٓ اٰلِهَةًۗ لَوْلَا يَأْتُوْنَ عَلَيْهِمْ بِسُلْطٰنٍۢ بَيِّنٍۗ فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًاۗ (الكهف : ١٨)

hāulāi
هَٰٓؤُلَآءِ
These
இவர்கள்
qawmunā
قَوْمُنَا
our people
மக்கள்/எங்கள்
ittakhadhū
ٱتَّخَذُوا۟
have taken
எடுத்துக் கொண்டனர்
min dūnihi
مِن دُونِهِۦٓ
besides Him besides Him
அவனையன்றி
ālihatan
ءَالِهَةًۖ
gods
பல கடவுள்களை
lawlā yatūna
لَّوْلَا يَأْتُونَ
Why not they come
அவர்கள் வரவேண்டாமா?
ʿalayhim
عَلَيْهِم
to them
அவற்றின் மீது
bisul'ṭānin
بِسُلْطَٰنٍۭ
with an authority
ஆதாரத்தைக் கொண்டு
bayyinin
بَيِّنٍۖ
clear?
தெளிவானது
faman
فَمَنْ
And who
ஆகவே, யார்
aẓlamu
أَظْلَمُ
(is) more wrong
மகா தீயவன்
mimmani
مِمَّنِ
than (one) who
எவனைவிட
if'tarā
ٱفْتَرَىٰ
invents
இட்டுக்கட்டினான்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
against Allah
அல்லாஹ்வின் மீது
kadhiban
كَذِبًا
a lie?
பொய்யை

Transliteration:

Haaa'ulaaa'i qawmunat takhazoo min dooniheee aalihatal law laa yaatoona 'alaihim bisultaanim baiyin; faman azlamu mimmaniftaraa 'alal laahi kazibaa (QS. al-Kahf:15)

English Sahih International:

These, our people, have taken besides Him deities. Why do they not bring for [worship of] them a clear evidence? And who is more unjust than one who invents about Allah a lie?" (QS. Al-Kahf, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

அன்றி, "நம்முடைய இந்த மக்கள் அவனையன்றி வேறு இறைவனை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்குத் தெளிவான அத்தாட்சியை இவர்கள் கொண்டு வரவேண்டாமா? அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவனை விட அநியாயக்காரன் யார்?" (என்றார்கள்.) (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௧௫)

Jan Trust Foundation

எங்கள் சமூகத்தாராகிய அவர்கள் அவனையன்றி வேறு நாயனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் அவற்றின் மீது தெளிவான அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா? ஆகவே அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டுபவனை விட அநியாயக்காரன் யார்? (என்றும் கூறினார்கள்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“இவர்கள் எங்கள் மக்கள். அவனையன்றி பல கடவுள்களை எடுத்துக் கொண்டனர். (அவற்றை அவர்கள் வணங்குவதற்கு) தெளிவான ஆதாரத்தை அவர்கள் கொண்டு வர வேண்டாமா? அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனை விட மகா தீயவன் யார்?”