குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௧௪
Qur'an Surah Al-Kahf Verse 14
ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّرَبَطْنَا عَلٰى قُلُوْبِهِمْ اِذْ قَامُوْا فَقَالُوْا رَبُّنَا رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَنْ نَّدْعُوَا۟ مِنْ دُوْنِهٖٓ اِلٰهًا لَّقَدْ قُلْنَآ اِذًا شَطَطًا (الكهف : ١٨)
- warabaṭnā
- وَرَبَطْنَا
- And We made firm
- இன்னும் உறுதிபடுத்தினோம்
- ʿalā qulūbihim
- عَلَىٰ قُلُوبِهِمْ
- [on] their hearts
- அவர்களுடைய உள்ளங்களை
- idh qāmū
- إِذْ قَامُوا۟
- when they stood up
- போது/நின்றனர்
- faqālū
- فَقَالُوا۟
- and said
- இன்னும் கூறினர்
- rabbunā
- رَبُّنَا
- "Our Lord
- எங்கள் இறைவன்
- rabbu
- رَبُّ
- (is) the Lord
- இறைவன்
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- (of) the heavens
- வானங்களின்
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- and the earth
- இன்னும் பூமி
- lan nadʿuwā
- لَن نَّدْعُوَا۟
- Never we will invoke
- அழைக்கவே மாட்டோம்
- min dūnihi
- مِن دُونِهِۦٓ
- besides Him besides Him
- அவனையன்றி
- ilāhan
- إِلَٰهًاۖ
- any god
- (வேறு) ஒரு கடவுளை
- laqad qul'nā
- لَّقَدْ قُلْنَآ
- Certainly we would have said
- திட்டமாக கூறி விடுவோம்
- idhan
- إِذًا
- then
- அப்போது
- shaṭaṭan
- شَطَطًا
- an enormity
- எல்லை மீறிய பொய்யை
Transliteration:
Wa rabatnaa 'alaa quloo bihim iz qaamoo faqaaloo Rabbunaa Rabbus samaawaati wal ardi lan nad'uwa min dooniheee ilaahal laqad qulnaaa izan shatataa(QS. al-Kahf:14)
English Sahih International:
And We bound [i.e., made firm] their hearts when they stood up and said, "Our Lord is the Lord of the heavens and the earth. Never will we invoke besides Him any deity. We would have certainly spoken, then, an excessive transgression. (QS. Al-Kahf, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
அன்றி, அவர்களுடைய உள்ளங்களையும் (நேரான வழியில்) நாம் உறுதியாக்கி விட்டோம். (அவர்கள் காலத்திலிருந்த அரசன் அவர்களை சிலைவணக்கம் செய்யும்படி நிர்ப்பந்தித்த சமயத்தில்) அவர்கள் எழுந்து நின்று "வானங்களையும் பூமியையும் படைத்தவன்தான் எங்கள் வணக்கத்திற்குரிய இறைவன். அவனையன்றி (வேறொருவரையும் வணக்கத்திற்குரியவன் என)நாங்கள் நிச்சயமாக அழைக்க மாட்டோம். (அழைத்தால்) நிச்சயமாக நாங்கள் அடாத வார்த்தையைக் கூறியவர்களாவோம்" என்றார்கள். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௧௪)
Jan Trust Foundation
அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று “வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்” என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் (தங்கள் சமுதாயத்தின் முன்) நின்று “எங்கள் இறைவன்தான் வானங்கள் இன்னும் பூமியின் இறைவன். அவனையன்றி வேறு ஒரு கடவுளை அழைக்கவே மாட்டோம். (அவ்வாறு அழைத்து விட்டால்) அப்போது, (அநியாயமான) எல்லை மீறிய பொய்யை திட்டவட்டமாக கூறி விடுவோம்”என்று கூறியபோது அவர்களுடைய உள்ளங்களை உறுதிபடுத்தினோம்.