Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௧௨

Qur'an Surah Al-Kahf Verse 12

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ بَعَثْنٰهُمْ لِنَعْلَمَ اَيُّ الْحِزْبَيْنِ اَحْصٰى لِمَا لَبِثُوْٓا اَمَدًا ࣖ (الكهف : ١٨)

thumma
ثُمَّ
Then
பிறகு
baʿathnāhum
بَعَثْنَٰهُمْ
We raised them up
எழுப்பினோம் / அவர்களை
linaʿlama
لِنَعْلَمَ
that We make evident
நாம் அறிவதற்காக
ayyu
أَىُّ
which
எந்த, யார்?
l-ḥiz'bayni
ٱلْحِزْبَيْنِ
(of) the two parties
இரு பிரிவுகளில்
aḥṣā
أَحْصَىٰ
best calculated
மிக சரியாக கணக்கிடுபவர்
limā labithū
لِمَا لَبِثُوٓا۟
for what (they had) remained
அவர்கள் தங்கியதை
amadan
أَمَدًا
(in) time
காலத்தை,எல்லையை

Transliteration:

Summa ba'asnaahum lina'lama ayyul hizbaini ahsaa limaa labisooo amadaa (QS. al-Kahf:12)

English Sahih International:

Then We awakened them that We might show which of the two factions was most precise in calculating what [extent] they had remained in time. (QS. Al-Kahf, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

அவர்கள் அக்குகையில் இருந்த காலத்தை (அவர்களில் உள்ள) இரு வகுப்பாரில் எவர்கள் நன்கறிகிறார்கள் என்பதை நாம் (மனிதர்களுக்கு) அறிவிக்கும் பொருட்டு (நித்திரையிலிருந்து) அவர்களை எழுப்பினோம். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௧௨)

Jan Trust Foundation

பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, இரு பிரிவுகளில் யார் அவர்கள் தங்கிய (கால) எல்லையை மிகச் சரியாக கணக்கிடுபவர் என்று நாம் (மக்களுக்கு தெரியும் விதமாக) அறிவதற்காக நாம் அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்பினோம்.