குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௧௧௦
Qur'an Surah Al-Kahf Verse 110
ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௧௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ اِنَّمَآ اَنَا۠ بَشَرٌ مِّثْلُكُمْ يُوْحٰٓى اِلَيَّ اَنَّمَآ اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌۚ فَمَنْ كَانَ يَرْجُوْا لِقَاۤءَ رَبِّهٖ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَّلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهٖٓ اَحَدًا ࣖ (الكهف : ١٨)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- innamā anā
- إِنَّمَآ أَنَا۠
- "Only I
- நானெல்லாம்
- basharun
- بَشَرٌ
- (am) a man
- ஒரு மனிதன்தான்
- mith'lukum
- مِّثْلُكُمْ
- like you
- உங்களைப் போன்ற
- yūḥā
- يُوحَىٰٓ
- Has been revealed
- வஹீ அறிவிக்கப்படுகிறது
- ilayya
- إِلَىَّ
- to me
- எனக்கு
- annamā
- أَنَّمَآ
- that
- எல்லாம்
- ilāhukum
- إِلَٰهُكُمْ
- your God
- உங்கள் கடவுள்
- ilāhun
- إِلَٰهٌ
- (is) God
- கடவுள்
- wāḥidun
- وَٰحِدٌۖ
- One
- ஒரே ஒரு
- faman
- فَمَن
- So whoever
- ஆகவே, எவர்
- kāna
- كَانَ
- is
- இருக்கிறார்
- yarjū
- يَرْجُوا۟
- hoping
- ஆதரவு வைப்பார்
- liqāa
- لِقَآءَ
- (for the) meeting
- சந்திப்பை
- rabbihi
- رَبِّهِۦ
- (with) his Lord
- தன் இறைவனின்
- falyaʿmal
- فَلْيَعْمَلْ
- let him do
- அவர் செய்யட்டும்
- ʿamalan
- عَمَلًا
- deeds
- செயலை
- ṣāliḥan
- صَٰلِحًا
- righteous
- நல்லது
- walā yush'rik
- وَلَا يُشْرِكْ
- and not associate
- இன்னும் இணையாக்க வேண்டாம்
- biʿibādati
- بِعِبَادَةِ
- in (the) worship
- வணங்குவதில்
- rabbihi
- رَبِّهِۦٓ
- (of) his Lord
- தன் இறைவனை
- aḥadan
- أَحَدًۢا
- anyone"
- ஒருவரை
Transliteration:
Qul innamaaa ana basharum mislukum yoohaaa ilaiya annamaa ilaahukum Ilaahunw Waahid; faman kaana yarjoo liqaaa'a Rabbihee falya'mal 'amalan saalihanw wa laa yushrik bi'ibaadati Rabbiheee ahadaa(QS. al-Kahf:110)
English Sahih International:
Say, "I am only a man like you, to whom has been revealed that your god is one God. So whoever would hope for the meeting with his Lord – let him do righteous work and not associate in the worship of his Lord anyone." (QS. Al-Kahf, Ayah ௧௧௦)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நிச்சயமாக உங்களுடைய இறைவன் ஒரே இறைவன்தான் என்று எனக்கு வஹீ மூலம் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆகவே, எவர் தன் இறைவனைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் நற்செயல்களைச் செய்து தன் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது (அவனையே) வணங்கி வருவாராக!" (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௧௧௦)
Jan Trust Foundation
(நபியே!) நீர் சொல்வீராக| “நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது; எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே) கூறுவீராக!: “நிச்சயமாக நானெல்லாம் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான், உங்கள் கடவுள் (நீங்கள் வணங்குவதற்கு தகுதியானவன்) எல்லாம் ஒரே ஒரு கடவுள்தான் என்று எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுகிறது. ஆகவே, எவர் தன் இறைவனின் சந்திப்பை ஆதரவுவைப்பாரோ அவர் நல்ல செயலைச் செய்யட்டும்! தன் இறைவனை வணங்குவதில் ஒருவரையும் (அவனுக்கு) இணையாக்க வேண்டாம்!”