குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௧௦௯
Qur'an Surah Al-Kahf Verse 109
ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௧௦௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمٰتِ رَبِّيْ لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ اَنْ تَنْفَدَ كَلِمٰتُ رَبِّيْ وَلَوْ جِئْنَا بِمِثْلِهٖ مَدَدًا (الكهف : ١٨)
- qul
- قُل
- Say
- கூறுவீராக
- law kāna
- لَّوْ كَانَ
- "If were
- மாறினால்
- l-baḥru
- ٱلْبَحْرُ
- the sea
- கடல்
- midādan
- مِدَادًا
- ink
- மையாக
- likalimāti
- لِّكَلِمَٰتِ
- for (the) Words
- வாக்கியங்களுக்கு
- rabbī
- رَبِّى
- (of) my Lord
- என் இறைவனின்
- lanafida
- لَنَفِدَ
- surely (would be) exhausted
- நிச்சயமாக தீர்ந்துவிடும்
- l-baḥru
- ٱلْبَحْرُ
- the sea
- கடல்
- qabla
- قَبْلَ
- before
- முன்னதாகவே
- an tanfada
- أَن تَنفَدَ
- [that] (were) exhausted
- தீர்ந்துவிடுவதற்கு
- kalimātu
- كَلِمَٰتُ
- (the) Words
- வாக்கியங்கள்
- rabbī
- رَبِّى
- (of) my Lord
- என் இறைவனின்
- walaw ji'nā
- وَلَوْ جِئْنَا
- even if We brought
- நாம் வந்தாலும்
- bimith'lihi
- بِمِثْلِهِۦ
- (the) like (of) it
- அது போன்றதைக் கொண்டு
- madadan
- مَدَدًا
- (as) a supplement"
- அதிகமாக
Transliteration:
Qul law kaanal bahru midaadal lik Kalimaati Rabbee lanafidal bahru qabla an tanfada Kalimaatu Rabbee wa law ji'naa bimislihee madadaa(QS. al-Kahf:109)
English Sahih International:
Say, "If the sea were ink for [writing] the words of my Lord, the sea would be exhausted before the words of my Lord were exhausted, even if We brought the like of it in [continual] supplement." (QS. Al-Kahf, Ayah ௧௦௯)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: கடல் நீர் அனைத்தும் மையாக இருந்து என் இறைவனின் வாக்கியங்களை எழுத ஆரம்பித்தால், என் இறைவனின் வாக்கியங்கள் முடிவதற்கு முன்னதாகவே இந்தக் கடல் மை அனைத்தும் செலவாகிவிடும். அதைப் போல் இன்னொரு பங்கு (கடலைச்) சேர்த்துக் கொண்டபோதிலும் கூட! (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௧௦௯)
Jan Trust Foundation
(நபியே!) நீர் கூறுவீராக| “என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும், என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்; அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி!”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக: என் இறைவனின் (ஞானத்தையும் அறிவையும் விவரிக்கும்) வாக்கியங்களுக்கு கடல் (நீர்) மையாக மாறினால், என் இறைவனின் வாக்கியங்கள் தீர்ந்துவிடுவதற்கு முன்னதாகவே கடல் (நீர்) தீர்ந்துவிடும். (இன்னும்) அதிகமாக அது போன்றதைக் கொண்டு வந்தாலும் (என் இறைவனின் வாக்கியங்கள் தீர்ந்து விடாது)!