Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௧௦௨

Qur'an Surah Al-Kahf Verse 102

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௧௦௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَحَسِبَ الَّذِيْنَ كَفَرُوْٓا اَنْ يَّتَّخِذُوْا عِبَادِيْ مِنْ دُوْنِيْٓ اَوْلِيَاۤءَ ۗاِنَّآ اَعْتَدْنَا جَهَنَّمَ لِلْكٰفِرِيْنَ نُزُلًا (الكهف : ١٨)

afaḥasiba
أَفَحَسِبَ
Do then think
எண்ணினார்களா?
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
kafarū
كَفَرُوٓا۟
disbelieve
நிராகரித்தார்கள்
an yattakhidhū
أَن يَتَّخِذُوا۟
that they (can) take
அவர்கள் எடுத்துக்கொள்ள
ʿibādī
عِبَادِى
My servants
என் அடியார்களை
min dūnī
مِن دُونِىٓ
besides Me besides Me
என்னையன்றி
awliyāa
أَوْلِيَآءَۚ
(as) protectors?
பாதுகாவலர்களாக
innā
إِنَّآ
Indeed, We
நிச்சயமாக நாம்
aʿtadnā
أَعْتَدْنَا
We have prepared
தயார்படுத்தினோம்
jahannama
جَهَنَّمَ
Hell
நரகத்தை
lil'kāfirīna
لِلْكَٰفِرِينَ
for the disbelievers
நிராகரிப்பவர்களுக்கு
nuzulan
نُزُلًا
(as) a lodging
தங்குமிடங்களாக

Transliteration:

Afahasibal lazeena kafarooo any yattakhizoo 'ibaadee min dooneee awliyaaa'; innaaa a'tadnaa jahannama lilkaafi reena nuzulaa (QS. al-Kahf:102)

English Sahih International:

Then do those who disbelieve think that they can take My servants instead of Me as allies? Indeed, We have prepared Hell for the disbelievers as a lodging. (QS. Al-Kahf, Ayah ௧௦௨)

Abdul Hameed Baqavi:

இந்நிராகரிப்பவர்கள் நம்மை விட்டுவிட்டு நம்முடைய அடியார்களை(த் தங்களுக்கு) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? நிச்சயமாக இந்நிராகரிப்பவர்களுக்கு விருந்தளிப்பதற்காக நரகத்தையேதயார்படுத்தி வைத்திருக்கிறோம். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௧௦௨)

Jan Trust Foundation

நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம் ) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிராகரிப்பவர்கள் என்னை அன்றி என் அடியார்களை(த் தங்களுக்கு) பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்ள எண்ணினார்களா? நிச்சயமாக நாம் நிராகரிப்பவர்களுக்கு தங்குமிடங்களாக நரகத்தை தயார்படுத்தினோம்.