Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௧௦௧

Qur'an Surah Al-Kahf Verse 101

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௧௦௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ۨالَّذِيْنَ كَانَتْ اَعْيُنُهُمْ فِيْ غِطَاۤءٍ عَنْ ذِكْرِيْ وَكَانُوْا لَا يَسْتَطِيْعُوْنَ سَمْعًا ࣖ (الكهف : ١٨)

alladhīna
ٱلَّذِينَ
Those
எவர்கள்
kānat
كَانَتْ
had been
இருந்தன
aʿyunuhum
أَعْيُنُهُمْ
their eyes
அவர்களுடைய கண்கள்
fī ghiṭāin
فِى غِطَآءٍ
within a cover
திரைக்குள்
ʿan dhik'rī
عَن ذِكْرِى
from My remembrance
என் நல்லுப தேசங்களை விட்டு
wakānū
وَكَانُوا۟
and were
இன்னும் இருந்தனர்
lā yastaṭīʿūna
لَا يَسْتَطِيعُونَ
not able
இயலாதவர்களாக
samʿan
سَمْعًا
(to) hear
செவியுற

Transliteration:

Allazeena kaanat a'yunuhum fee ghitaaa'in 'an zikree wa kaanoo la yastatee'oona sam'aa (QS. al-Kahf:101)

English Sahih International:

Those whose eyes had been within a cover [removed] from My remembrance, and they were not able to hear. (QS. Al-Kahf, Ayah ௧௦௧)

Abdul Hameed Baqavi:

(அவர்கள் எத்தகையவரென்றால் நம்முடைய) நல்லுபதேசங்களைப் பார்க்காது அவர்களுடைய கண்களுக்குத் திரையிடப்பட்டுவிட்டன; ஆகவே, அவர்கள் (நல்லுபதேசங்களைச்) செவியுற சக்தியற்று விட்டனர். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௧௦௧)

Jan Trust Foundation

அவர்கள் எத்தகையோர் (என்றால்) என் நினைவை விட்டும் அவர்களுடைய கண்களில் திரையிடப் பட்டிருந்தன; இன்னும் (நல்லுபதேசங்களைச்) செவிமடுக்கவும் அவர்கள் சக்தியற்றுப் போயினர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுடைய கண்கள் என் நல்லுபதேசங்களை (பார்ப்பதை) விட்டு திரைக்குள் இருந்தன (அந்த திரை அவர்களுடைய கண்களை மறைத்துக் கொண்டிருந்தது); (நல்லுபதேசங்களைச்) செவியுற(வும்) இயலாதவர்களாக இருந்தனர்.