குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௧௦
Qur'an Surah Al-Kahf Verse 10
ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِذْ اَوَى الْفِتْيَةُ اِلَى الْكَهْفِ فَقَالُوْا رَبَّنَآ اٰتِنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً وَّهَيِّئْ لَنَا مِنْ اَمْرِنَا رَشَدًا (الكهف : ١٨)
- idh awā
- إِذْ أَوَى
- When retreated
- சமயம்/ ஒதுங்கினார்(கள்)
- l-fit'yatu
- ٱلْفِتْيَةُ
- the youths
- அவ்வாலிபர்கள்
- ilā l-kahfi
- إِلَى ٱلْكَهْفِ
- to the cave
- குகைக்கு
- faqālū
- فَقَالُوا۟
- and they said
- கூறினர்
- rabbanā
- رَبَّنَآ
- "Our Lord!
- எங்கள் இறைவா
- ātinā
- ءَاتِنَا
- Grant us
- எங்களுக்குத் தா
- min ladunka
- مِن لَّدُنكَ
- from Yourself
- உன் புறத்திலிருந்து
- raḥmatan
- رَحْمَةً
- Mercy
- அருளை
- wahayyi
- وَهَيِّئْ
- and facilitate
- இன்னும் ஏற்படுத்து
- lanā
- لَنَا
- for us
- எங்களுக்கு
- min amrinā
- مِنْ أَمْرِنَا
- [from] our affair
- எங்கள் காரியத்தில்
- rashadan
- رَشَدًا
- (in the) right way"
- நல்வழியை
Transliteration:
Iz awal fityatu ilal Kahfi faqaaloo Rabbanaaa aatinaa mil ladunka rahmatanw wa haiyi' lanaa min amrinaa rashadaa(QS. al-Kahf:10)
English Sahih International:
[Mention] when the youths retreated to the cave and said, "Our Lord, grant us from Yourself mercy and prepare for us from our affair right guidance." (QS. Al-Kahf, Ayah ௧௦)
Abdul Hameed Baqavi:
(அவர்கள்) ஒரு சில வாலிபர்கள் அவர்கள் குகையினுள் சென்றபொழுது "எங்கள் இறைவனே! உன் அருளை எங்களுக்கு அளிப்பாயாக! நீ எங்களுக்கு நேரான வழியையும் சுலபமாக்கி விடுவாயாக!" என்று பிரார்த்தனை செய்தார்கள். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௧௦)
Jan Trust Foundation
அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் “எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” என்று கூறினார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவ்வாலிபர்கள் குகைக்கு ஒதுங்கிய சமயத்தை (நினைவு கூர்வீராக!) “எங்கள் இறைவா உன் புறத்திலிருந்து எங்களுக்கு அருளைத் தா! எங்கள் காரியத்தில் எங்களுக்கு நல்வழியை ஏற்படுத்து”என்று கூறினார்கள்.