Skip to content

ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு - Page: 9

Al-Kahf

(al-Kahf)

௮௧

فَاَرَدْنَآ اَنْ يُّبْدِلَهُمَا رَبُّهُمَا خَيْرًا مِّنْهُ زَكٰوةً وَّاَقْرَبَ رُحْمًا ٨١

fa-aradnā
فَأَرَدْنَآ
ஆகவே, நாடினோம்
an
أَن
கொடுப்பதை/பகரமாக
yub'dilahumā rabbuhumā
يُبْدِلَهُمَا رَبُّهُمَا
அவ்விருவருக்கும்/அவ்விருவரின் இறைவன்
khayran min'hu
خَيْرًا مِّنْهُ
சிறந்த/அவனை விட
zakatan
زَكَوٰةً
பரிசுத்தமான
wa-aqraba
وَأَقْرَبَ
இன்னும் அதிக நெருக்கமான
ruḥ'man
رُحْمًا
கருணையுடையவரை
அவனுடைய தாய் தந்தைக்கு இறைவன் இவனை விட மேலானவனையும், பரிசுத்தமானவனையும் (தாய் தந்தைமீது) அன்பு கொள்ளக் கூடியவனையும் மாற்றிக் கொடுப்பதை நாம் விரும்பினோம். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௮௧)
Tafseer
௮௨

وَاَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلٰمَيْنِ يَتِيْمَيْنِ فِى الْمَدِيْنَةِ وَكَانَ تَحْتَهٗ كَنْزٌ لَّهُمَا وَكَانَ اَبُوْهُمَا صَالِحًا ۚفَاَرَادَ رَبُّكَ اَنْ يَّبْلُغَآ اَشُدَّهُمَا وَيَسْتَخْرِجَا كَنْزَهُمَا رَحْمَةً مِّنْ رَّبِّكَۚ وَمَا فَعَلْتُهٗ عَنْ اَمْرِيْۗ ذٰلِكَ تَأْوِيْلُ مَا لَمْ تَسْطِعْ عَّلَيْهِ صَبْرًاۗ ࣖ ٨٢

wa-ammā
وَأَمَّا
ஆக
l-jidāru
ٱلْجِدَارُ
சுவரோ
fakāna
فَكَانَ
இருந்தது
lighulāmayni
لِغُلَٰمَيْنِ
இரு குழந்தைகளுக்கு
yatīmayni
يَتِيمَيْنِ
இரு அனாதைகள்
fī l-madīnati
فِى ٱلْمَدِينَةِ
பட்டிணத்தில்
wakāna
وَكَانَ
இன்னும் இருக்கிறது
taḥtahu
تَحْتَهُۥ
அதற்குக் கீழ்
kanzun
كَنزٌ
ஒரு புதையல்
lahumā
لَّهُمَا
அவ்விருவருக்குரிய
wakāna
وَكَانَ
இருந்தார்
abūhumā
أَبُوهُمَا
அவ்விருவரின் தந்தை
ṣāliḥan
صَٰلِحًا
நல்லவராக
fa-arāda
فَأَرَادَ
ஆகவே நாடினான்
rabbuka
رَبُّكَ
உம் இறைவன்
an yablughā
أَن يَبْلُغَآ
அவ்விருவரும் அடைந்து
ashuddahumā
أَشُدَّهُمَا
வாலிபத்தை அவ்விருவரின்
wayastakhrijā
وَيَسْتَخْرِجَا
இன்னும் அவ்விருவரும் வெளியே எடுத்துக்கொள்வதற்கு
kanzahumā
كَنزَهُمَا
தங்கள் (இருவரின்) புதையலை
raḥmatan
رَحْمَةً
அருளினால்
min rabbika
مِّن رَّبِّكَۚ
உம் இறைவனின்
wamā faʿaltuhu
وَمَا فَعَلْتُهُۥ
நான் செய்யவில்லை/இவற்றை
ʿan amrī
عَنْ أَمْرِىۚ
என் இஷ்டப்படி
dhālika
ذَٰلِكَ
இதுதான்
tawīlu
تَأْوِيلُ
விளக்கம்
mā lam tasṭiʿ
مَا لَمْ تَسْطِع
எவை/ நீர் இயலவில்லை
ʿalayhi
عَّلَيْهِ
அவற்றின் மீது
ṣabran
صَبْرًا
பொறு(த்திரு)ப்பதற்கு
அந்தச் சுவரோ அப்பட்டினத்திலுள்ள இரு அனாதைக் குழந்தைகளுக்குரியது. அதற்குக் கீழ் அவர்களுக்குச் சொந்தமான புதையல் ஒன்று இருக்கிறது. அவ்விருவரின் தந்தை மிக்க நல்ல மனிதராக இருந்தார். ஆகவே, உங்கள் இறைவன் அவ்விருவரும் வாலிபத்தை அடைந்த பின்னர் தங்களுடைய புதையலை எடுத்துக் கொள்ளும்படிச் செய்ய நாடினான். (எனவே, அதுவரையில் அச்சுவர் விழுந்து விடாதிருக்கும்படி அதனைச் செப்பனிட்டேன். இது) உங்கள் இறைவனின் அருள்தான். (இம்மூன்றில்) எதனையும் நான் என் இஷ்டப்படி செய்துவிடவில்லை. நீங்கள் பொறுத்துக்கொள்ள முடியாமல் போன (என்) செய்கைகளின் கருத்து இதுதான்" என்று கூறினார். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௮௨)
Tafseer
௮௩

وَيَسْـَٔلُوْنَكَ عَنْ ذِى الْقَرْنَيْنِۗ قُلْ سَاَتْلُوْا عَلَيْكُمْ مِّنْهُ ذِكْرًا ۗ ٨٣

wayasalūnaka
وَيَسْـَٔلُونَكَ
இன்னும் /கேட்கின்றனர்/உம்மிடம்
ʿan dhī l-qarnayni
عَن ذِى ٱلْقَرْنَيْنِۖ
துல்கர்னைனைப்பற்றி
qul
قُلْ
கூறுவீராக
sa-atlū
سَأَتْلُوا۟
ஓதுவேன்
ʿalaykum
عَلَيْكُم
உங்களுக்கு
min'hu
مِّنْهُ
அவரைப் பற்றி
dhik'ran
ذِكْرًا
நல்லுபதேசத்தை
(நபியே!) துல்கர்னைனைப் பற்றி (யூதர்களாகிய) அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். "அவருடைய சரித்திரத்தில் சிறிது நான் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறேன்" என்று நீங்கள் கூறுங்கள். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௮௩)
Tafseer
௮௪

اِنَّا مَكَّنَّا لَهٗ فِى الْاَرْضِ وَاٰتَيْنٰهُ مِنْ كُلِّ شَيْءٍ سَبَبًا ۙ ٨٤

innā
إِنَّا
நிச்சயமாக நாம்
makkannā
مَكَّنَّا
ஆதிக்கத்தைக் கொடுத்தோம்
lahu
لَهُۥ
அவருக்கு
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
waātaynāhu
وَءَاتَيْنَٰهُ
இன்னும் அவருக்குக் கொடுத்தோம்
min kulli shayin
مِن كُلِّ شَىْءٍ
ஒவ்வொருபொருளின்
sababan
سَبَبًا
அறிவை
நிச்சயமாக நாம் அவருக்குப் பூமியில் ஆதிக்கத்தைக் கொடுத்து வளமிக்க வசதி வாய்ப்பையும் அளித்திருந்தோம். ஒவ்வொரு பொருளையும் (தமது இஷ்டப்படி) செய்யக்கூடிய வழியையும் நாம் அவருக்கு அளித்திருந்தோம். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௮௪)
Tafseer
௮௫

فَاَتْبَعَ سَبَبًا ٨٥

fa-atbaʿa
فَأَتْبَعَ
பின்தொடர்ந்தார்
sababan
سَبَبًا
ஒரு வழியை
அவர் (பூமியில்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௮௫)
Tafseer
௮௬

حَتّٰىٓ اِذَا بَلَغَ مَغْرِبَ الشَّمْسِ وَجَدَهَا تَغْرُبُ فِيْ عَيْنٍ حَمِئَةٍ وَّوَجَدَ عِنْدَهَا قَوْمًا ەۗ قُلْنَا يٰذَا الْقَرْنَيْنِ اِمَّآ اَنْ تُعَذِّبَ وَاِمَّآ اَنْ تَتَّخِذَ فِيْهِمْ حُسْنًا ٨٦

ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā balagha
إِذَا بَلَغَ
அவர் அடைந்தபோது
maghriba
مَغْرِبَ
மறையும் இடத்தை
l-shamsi
ٱلشَّمْسِ
சூரியன்
wajadahā
وَجَدَهَا
கண்டார்/அதை
taghrubu
تَغْرُبُ
மறைவதாக
fī ʿaynin
فِى عَيْنٍ
கடலில்
ḥami-atin
حَمِئَةٍ
சேறு
wawajada
وَوَجَدَ
கண்டார்
ʿindahā
عِندَهَا
அதனிடத்தில்
qawman
قَوْمًاۗ
சில மக்களை
qul'nā
قُلْنَا
கூறினோம்
yādhā l-qarnayni
يَٰذَا ٱلْقَرْنَيْنِ
துல்கர்னைனே!
immā an tuʿadhiba
إِمَّآ أَن تُعَذِّبَ
ஒன்று வேதனை செய்வீர்
wa-immā an tattakhidha
وَإِمَّآ أَن تَتَّخِذَ
அவர்கள் கடைப்பிடிப்பீர்
fīhim
فِيهِمْ
அவர்களில்
ḥus'nan
حُسْنًا
ஓர் அழகியதை
சூரியன் மறையும் (மேற்குத்) திசையை அவர் அடைந்தபொழுது சேற்றுக் கடலில் சூரியன் மறைவதை(ப் போல்) கண்டார். அவ்விடத்தில் ஒருவகை மக்களையும் கண்டார். (நாம் அவரை நோக்கி) "துல்கர்னைனே! நீங்கள் (இவர்களைத் தண்டித்து) வேதனை செய்ய அல்லது அவர்களுக்கு நன்மை செய்ய (உங்களுக்கு முழு சுதந்தரம் அளித்திருக்கிறோம்)" என்று கூறினோம். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௮௬)
Tafseer
௮௭

قَالَ اَمَّا مَنْ ظَلَمَ فَسَوْفَ نُعَذِّبُهٗ ثُمَّ يُرَدُّ اِلٰى رَبِّهٖ فَيُعَذِّبُهٗ عَذَابًا نُّكْرًا ٨٧

qāla
قَالَ
கூறினார்
ammā
أَمَّا
ஆகவே
man ẓalama
مَن ظَلَمَ
எவன்/அநியாயம் செய்தானோ
fasawfa nuʿadhibuhu
فَسَوْفَ نُعَذِّبُهُۥ
வேதனை செய்வோம்/அவனை
thumma
ثُمَّ
பிறகு
yuraddu
يُرَدُّ
திருப்பப்படுவான்
ilā rabbihi
إِلَىٰ رَبِّهِۦ
தன் இறைவனிடம்
fayuʿadhibuhu
فَيُعَذِّبُهُۥ
வேதனை செய்வான்/அவனை
ʿadhāban nuk'ran
عَذَابًا نُّكْرًا
வேதனை/கொடியது
ஆகவே அவர் (அவர்களை நோக்கி "உங்களில்) எவன் (என் கட்டளையை மீறி) அநியாயம் செய்கிறானோ அவனை நாம் (தண்டித்து) வேதனை செய்வோம். பின்னர், அவன் தன் இறைவனிடம் கொண்டு போகப்பட்டு அவனும் அவனை மிக்க கடினமாக வேதனை செய்வான்" என்றார். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௮௭)
Tafseer
௮௮

وَاَمَّا مَنْ اٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَلَهٗ جَزَاۤءً ۨالْحُسْنٰىۚ وَسَنَقُوْلُ لَهٗ مِنْ اَمْرِنَا يُسْرًا ۗ ٨٨

wa-ammā
وَأَمَّا
ஆகவே
man
مَنْ
எவர்
āmana
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்
waʿamila
وَعَمِلَ
இன்னும் செய்தனர்
ṣāliḥan
صَٰلِحًا
நற்செயலை
falahu
فَلَهُۥ
அவருக்கு இருக்கிறது
jazāan
جَزَآءً
கூலி
l-ḥus'nā
ٱلْحُسْنَىٰۖ
அழகிய
wasanaqūlu
وَسَنَقُولُ
இன்னும் கூறுவோம்
lahu
لَهُۥ
அவருக்கு
min amrinā
مِنْ أَمْرِنَا
நம் காரியத்தில்
yus'ran
يُسْرًا
இலகுவானதை
அன்றி, "எவன் நம்பிக்கை கொண்டு (நாம் கூறுகிறபடி) நற்செயல்கள் செய்கிறானோ அவனுக்கு (இறைவனிடத்திலும்) அழகான நற்கூலி இருக்கிறது. நாமும் நம்முடைய வேலைகளில் சுலபமான வேலைகளையே (செய்யும்படி) அவனுக்குக் கூறுவோம். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௮௮)
Tafseer
௮௯

ثُمَّ اَتْبَعَ سَبَبًا ٨٩

thumma
ثُمَّ
பிறகு
atbaʿa
أَتْبَعَ
பின்தொடர்ந்தார்
sababan
سَبَبًا
ஒரு வழி
பின்னர், அவர் (மற்ற) ஒரு வழியைப் பின்பற்றி நடந்தார். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௮௯)
Tafseer
௯௦

حَتّٰىٓ اِذَا بَلَغَ مَطْلِعَ الشَّمْسِ وَجَدَهَا تَطْلُعُ عَلٰى قَوْمٍ لَّمْ نَجْعَلْ لَّهُمْ مِّنْ دُوْنِهَا سِتْرًا ۙ ٩٠

ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā balagha
إِذَا بَلَغَ
அவர் அடைந்தபோது
maṭliʿa
مَطْلِعَ
உதிக்குமிடத்தை
l-shamsi
ٱلشَّمْسِ
சூரியன்
wajadahā
وَجَدَهَا
கண்டார்/அதை
taṭluʿu
تَطْلُعُ
உதிப்பதாக
ʿalā qawmin
عَلَىٰ قَوْمٍ
மீது/ஒரு சமுதாயம்
lam najʿal
لَّمْ نَجْعَل
நாம் ஆக்கவில்லை
lahum
لَّهُم
அவர்களுக்கு
min dūnihā
مِّن دُونِهَا
அதற்கு முன்னாலிருந்து
sit'ran
سِتْرًا
ஒரு தடுப்பை
அவர் சூரியன் உதிக்கும் (கிழக்குத்) திசையை அடைந்த பொழுது சில மக்களைக் கண்டார். அவர்கள் மீது சூரியன் உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதையும் கண்டார். அவர்களுக்கும் சூரியனுக்கும் இடையில் நாம் யாதொரு தடுப்பையும் ஏற்படுத்தவில்லை. (ஆடையணிந்தோ, வீடு கட்டியோ, சூரிய வெப்பத்தைத் தடுத்துக் கொள்ளக்கூடிய ஞானம் இல்லாத காட்டு மிராண்டிகளாக இருந்தனர்.) ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௯௦)
Tafseer