Skip to content

ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு - Page: 8

Al-Kahf

(al-Kahf)

௭௧

فَانْطَلَقَاۗ حَتّٰٓى اِذَا رَكِبَا فِى السَّفِيْنَةِ خَرَقَهَاۗ قَالَ اَخَرَقْتَهَا لِتُغْرِقَ اَهْلَهَاۚ لَقَدْ جِئْتَ شَيْـًٔا اِمْرًا ٧١

fa-inṭalaqā
فَٱنطَلَقَا
ஆகவே, இருவரும் சென்றனர்
ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā rakibā
إِذَا رَكِبَا
இருவரும் பயணித்தபோது
fī l-safīnati
فِى ٱلسَّفِينَةِ
கப்பலில்
kharaqahā
خَرَقَهَاۖ
ஓட்டையாக்கினார்/அதை
qāla
قَالَ
கூறினார்
akharaqtahā
أَخَرَقْتَهَا
அதை ஓட்டையாக்கினீரா?
litugh'riqa
لِتُغْرِقَ
நீர் மூழ்கடிக்க
ahlahā
أَهْلَهَا
இதில் உள்ளவர்களை
laqad
لَقَدْ
திட்டவட்டமாக
ji'ta
جِئْتَ
செய்தீர்
shayan
شَيْـًٔا
காரியத்தை
im'ran
إِمْرًا
மிக கெட்டது
(இவ்வாறு முடிவு செய்துகொண்டு) அவ்விருவரும் சென்றவழியில் குறுக்கிட்ட ஒரு கடலைக் கடக்க கப்பலில் ஏறி, அவர் அதன் (ஒரு) பலகையைப் பெயர்த்து அதனை ஓட்டையாக்கி விட்டார். அதற்கு மூஸா "இதில் உள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் துவாரமிட்டீர்கள்? நிச்சயமாக நீங்கள் மிக்க அபாயகரமானதொரு காரியத்தைச் செய்துவிட்டீர்கள்" என்று கூறினார். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௭௧)
Tafseer
௭௨

قَالَ اَلَمْ اَقُلْ اِنَّكَ لَنْ تَسْتَطِيْعَ مَعِيَ صَبْرًا ٧٢

qāla
قَالَ
கூறினார்
alam aqul
أَلَمْ أَقُلْ
நான் கூறவில்லையா?
innaka
إِنَّكَ
நிச்சயமாக நீர்
lan tastaṭīʿa
لَن تَسْتَطِيعَ
இயலவே மாட்டீர்
maʿiya
مَعِىَ
என்னுடன்
ṣabran
صَبْرًا
பொறுப்பதற்கு
அதற்கு அவர் (மூஸாவை நோக்கி) "நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க நிச்சயமாக உங்களால் முடியாது என்று நான் கூறவில்லையா?" என்றார். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௭௨)
Tafseer
௭௩

قَالَ لَا تُؤَاخِذْنِيْ بِمَا نَسِيْتُ وَلَا تُرْهِقْنِيْ مِنْ اَمْرِيْ عُسْرًا ٧٣

qāla
قَالَ
கூறினார்
lā tuākhidh'nī
لَا تُؤَاخِذْنِى
குற்றம் பிடிக்காதீர்/என்னை
bimā nasītu
بِمَا نَسِيتُ
நான் மறந்ததினால்
walā tur'hiq'nī
وَلَا تُرْهِقْنِى
இன்னும் என்னை கட்டாயப்படுத்தாதீர்
min amrī
مِنْ أَمْرِى
என் காரியத்தில்
ʿus'ran
عُسْرًا
சிரமத்திற்கு
(அதற்கு) மூஸா "நான் மறந்துவிட்டதைப் பற்றி நீங்கள் என்னைக் குற்றம் பிடிக்காதீர்கள். என் விஷயத்தில் நீங்கள் இவ்வளவு கண்டிப்பும் செய்யாதீர்கள்" என்று கேட்டுக் கொண்டார். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௭௩)
Tafseer
௭௪

فَانْطَلَقَا ۗحَتّٰٓى اِذَا لَقِيَا غُلٰمًا فَقَتَلَهٗ ۙقَالَ اَقَتَلْتَ نَفْسًا زَكِيَّةً؈ۢبِغَيْرِ نَفْسٍۗ لَقَدْ جِئْتَ شَيْـًٔا نُكْرًا ۔ ٧٤

fa-inṭalaqā
فَٱنطَلَقَا
ஆகவே, இருவரும் சென்றனர்
ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā laqiyā
إِذَا لَقِيَا
இருவரும் சந்தித்தபோது
ghulāman
غُلَٰمًا
ஒரு சிறுவனை
faqatalahu
فَقَتَلَهُۥ
கொன்றார்/அவனை
qāla
قَالَ
கூறினார்
aqatalta
أَقَتَلْتَ
கொன்றீரா?
nafsan
نَفْسًا
ஓர் உயிரை
zakiyyatan
زَكِيَّةًۢ
பரிசுத்தமானது
bighayri nafsin
بِغَيْرِ نَفْسٍ
ஓர் உயிரைக் கொன்ற குற்றமின்றி
laqad
لَّقَدْ
திட்டவட்டமாக
ji'ta
جِئْتَ
செய்தீர்
shayan
شَيْـًٔا
செயலை
nuk'ran
نُّكْرًا
மகா கொடியது
பின்னர் இருவரும் நடந்தனர். (வழியில் விளையாடிக் கொண்டிருந்த) ஒரு சிறுவனைச் சந்திக்கவே அவர் அவனைக் கொலை செய்து விட்டார். அதற்கு மூஸா "கொலை குற்றமின்றி ஒரு பரிசுத்தமான ஆத்மாவை நீங்கள் கொலை செய்து விட்டீர்கள்! நிச்சயமாக நீங்கள் ஒரு தகாத காரியத்தையே செய்து விட்டீர்கள்" என்று கூறினார். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௭௪)
Tafseer
௭௫

۞ قَالَ اَلَمْ اَقُلْ لَّكَ اِنَّكَ لَنْ تَسْتَطِيْعَ مَعِيَ صَبْرًا ٧٥

qāla
قَالَ
கூறினார்
alam aqul
أَلَمْ أَقُل
நான் கூறவில்லையா?
laka
لَّكَ
உமக்கு
innaka
إِنَّكَ
நிச்சயமாக நீர்
lan tastaṭīʿa
لَن تَسْتَطِيعَ
இயலவே மாட்டீர்
maʿiya
مَعِىَ
என்னுடன்
ṣabran
صَبْرًا
பொறுப்பதற்கு
அதற்கவர் (மூஸாவை நோக்கி) "நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க நிச்சயமாக உங்களால் முடியாது" என்று நான் உங்களுக்கு (முன்னர்) கூறவில்லையா? என்று கேட்டார். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௭௫)
Tafseer
௭௬

قَالَ اِنْ سَاَلْتُكَ عَنْ شَيْءٍۢ بَعْدَهَا فَلَا تُصٰحِبْنِيْۚ قَدْ بَلَغْتَ مِنْ لَّدُنِّيْ عُذْرًا ٧٦

qāla
قَالَ
கூறினார்
in sa-altuka
إِن سَأَلْتُكَ
கேட்டால்/உம்மிடம்
ʿan shayin
عَن شَىْءٍۭ
ஒரு விஷயத்தைப் பற்றி
baʿdahā
بَعْدَهَا
இதன் பின்னர்
falā tuṣāḥib'nī
فَلَا تُصَٰحِبْنِىۖ
சேர்க்காதீர்/என்னை
qad balaghta
قَدْ بَلَغْتَ
திட்டமாக அடைந்தீர்
min ladunnī
مِن لَّدُنِّى
என்னிடம்
ʿudh'ran
عُذْرًا
ஒரு காரணத்தை
அதற்கு (மூஸா) "இதன் பின்னர் நான் யாதொரு விஷயத்தைப் பற்றியும் உங்களிடம் கேட்பேனாயின் நீங்கள்என்னை உங்களுடன் வைத்திருக்க வேண்டாம். என்னை மன்னிக்கும் எல்லையை நிச்சயமாக நீங்கள் கடந்து விட்டீர்கள்" என்று கூறினார். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௭௬)
Tafseer
௭௭

فَانْطَلَقَا ۗحَتّٰىٓ اِذَآ اَتَيَآ اَهْلَ قَرْيَةِ ِۨاسْتَطْعَمَآ اَهْلَهَا فَاَبَوْا اَنْ يُّضَيِّفُوْهُمَا فَوَجَدَا فِيْهَا جِدَارًا يُّرِيْدُ اَنْ يَّنْقَضَّ فَاَقَامَهٗ ۗقَالَ لَوْ شِئْتَ لَتَّخَذْتَ عَلَيْهِ اَجْرًا ٧٧

fa-inṭalaqā
فَٱنطَلَقَا
ஆகவே, இருவரும் சென்றனர்
ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā atayā
إِذَآ أَتَيَآ
அவ்விருவரும்வரவே
ahla qaryatin
أَهْلَ قَرْيَةٍ
ஓர் ஊராரிடம்
is'taṭʿamā
ٱسْتَطْعَمَآ
அவ்விருவரும் உணவு கேட்டார்கள்
ahlahā
أَهْلَهَا
அவ்வூராரிடம்
fa-abaw
فَأَبَوْا۟
அவர்கள் மறுத்தனர்
an
أَن
அவர்கள் விருந்தளிக்க
yuḍayyifūhumā
يُضَيِّفُوهُمَا
அவர்கள் விருந்தளிக்க அவ்விருவருக்கும்
fawajadā
فَوَجَدَا
அவ்விருவரும் கண்டனர்
fīhā
فِيهَا
அங்கு
jidāran
جِدَارًا
ஒரு சுவற்றை
yurīdu an yanqaḍḍa
يُرِيدُ أَن يَنقَضَّ
விழ இருக்கும்
fa-aqāmahu
فَأَقَامَهُۥۖ
அவர் நிறுத்தினார்/அதை
qāla
قَالَ
கூறினார்
law shi'ta
لَوْ شِئْتَ
நீ நாடியிருந்தால்
lattakhadhta
لَتَّخَذْتَ
எடுத்திருக்கலாமே
ʿalayhi
عَلَيْهِ
அதற்காக
ajran
أَجْرًا
ஒரு கூலியை
பின்னர் இருவரும் நடந்தனர். அவர்கள் ஓர் ஊராரிடம் வரவே தங்கள் இருவருக்கும் உணவளிக்கும்படி அவ்வூராரை வேண்டினார்கள். ஆனால், அவர்கள் இவ்விருவருக்கும் விருந்தளிக்காது விலகிக் கொண்டனர். பிறகு, அவர் அங்கு விழுந்து விடக்கூடிய நிலையில் இருந்த ஒரு சுவற்றைக் கண்டார். ஆகவே, அவர் (அதற்கு மண் அப்பி செப்பனிட்டு) அதனை (விழாது) நிலை நிறுத்தி வைத்தார். (அதற்கு மூஸா அவரை நோக்கி) "நீங்கள் விரும்பி (கேட்டு) இருந்தால் (இவ்வூராரிடம்) இதற்குரிய கூலியை நீங்கள் வாங்கியிருக்கலாமே" என்று கூறினார். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௭௭)
Tafseer
௭௮

قَالَ هٰذَا فِرَاقُ بَيْنِيْ وَبَيْنِكَۚ سَاُنَبِّئُكَ بِتَأْوِيْلِ مَا لَمْ تَسْتَطِعْ عَّلَيْهِ صَبْرًا ٧٨

qāla
قَالَ
கூறினார்
hādhā firāqu
هَٰذَا فِرَاقُ
இதுவே/பிரிவினை
baynī
بَيْنِى
எனக்கிடையில்
wabaynika
وَبَيْنِكَۚ
இன்னும் உமக்கிடையில்
sa-unabbi-uka
سَأُنَبِّئُكَ
அறிவிப்பேன்/உமக்கு
bitawīli
بِتَأْوِيلِ
விளக்கத்தை
mā lam tastaṭiʿ
مَا لَمْ تَسْتَطِع
நீர் இயலாதவற்றின்
ʿalayhi ṣabran
عَّلَيْهِ صَبْرًا
அதன் மீது/பொறுக்க
அதற்கவர், "எனக்கும் உங்களுக்கும் இடையில் இதுவே பிரிவினை(க் குரிய நேரம்). நீங்கள் பொறுத்துக்கொள்ள முடியாமல் போன விஷயங்களின் உண்மையை (இதோ) நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௭௮)
Tafseer
௭௯

اَمَّا السَّفِيْنَةُ فَكَانَتْ لِمَسٰكِيْنَ يَعْمَلُوْنَ فِى الْبَحْرِ فَاَرَدْتُّ اَنْ اَعِيْبَهَاۗ وَكَانَ وَرَاۤءَهُمْ مَّلِكٌ يَّأْخُذُ كُلَّ سَفِيْنَةٍ غَصْبًا ٧٩

ammā
أَمَّا
ஆக
l-safīnatu
ٱلسَّفِينَةُ
அக்கப்பல்
fakānat
فَكَانَتْ
இருக்கிறது
limasākīna
لِمَسَٰكِينَ
ஏழைகளுக்கு
yaʿmalūna
يَعْمَلُونَ
வேலை செய்கிற
fī l-baḥri
فِى ٱلْبَحْرِ
கடலில்
fa-aradttu
فَأَرَدتُّ
நாடினேன்
an aʿībahā
أَنْ أَعِيبَهَا
நான் குறைபடுத்த/அதை
wakāna
وَكَانَ
இருக்கிறான்
warāahum
وَرَآءَهُم
அவர்களுக்கு முன்
malikun
مَّلِكٌ
ஓர் அரசன்
yakhudhu
يَأْخُذُ
எடுத்துக்கொள்கிறான்
kulla
كُلَّ
எல்லாம்
safīnatin
سَفِينَةٍ
கப்பல்களை
ghaṣban
غَصْبًا
அபகரித்து
"அக்கப்பல் கடலில் (கூலி) வேலை செய்து கொண்டிருந்த ஏழைகள் சிலருடையது. அதனை குறைபடுத்தவே நான் கருதினேன். (ஏனென்றால், இது செல்லும் வழியில்) இவர்களுக்கு முன் ஓர் (அநியாயக்கார) அரசன் இருக்கின்றான். அவன் (காணும் நல்ல) கப்பல்கள் அனைத்தையும் அநியாயமாக அபகரித்துக் கொள்கின்றான். (அவனிடமிருந்து காப்பாற்றுவதற்காகவே அதனை குறைப்படுத்தினேன்.) ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௭௯)
Tafseer
௮௦

وَاَمَّا الْغُلٰمُ فَكَانَ اَبَوَاهُ مُؤْمِنَيْنِ فَخَشِيْنَآ اَنْ يُّرْهِقَهُمَا طُغْيَانًا وَّكُفْرًا ۚ ٨٠

wa-ammā l-ghulāmu
وَأَمَّا ٱلْغُلَٰمُ
ஆக,அந்தச் சிறுவன்
fakāna
فَكَانَ
இருக்கிறார்(கள்)
abawāhu
أَبَوَاهُ
அவனுடைய தாய் தந்தை
mu'minayni
مُؤْمِنَيْنِ
நம்பிக்கையாளர்களாக
fakhashīnā
فَخَشِينَآ
பயந்தோம்
an yur'hiqahumā
أَن يُرْهِقَهُمَا
கட்டாயப்படுத்தி விடுவான் என்று/அவ்விருவரையும்
ṭugh'yānan
طُغْيَٰنًا
அட்டூழியம் செய்வதற்கு
wakuf'ran
وَكُفْرًا
இன்னும் நிராகரிப்பதற்கு
(கொலையுண்ட) அந்தச் சிறுவனோ அவனுடைய தாயும் தந்தையும் நல்ல நம்பிக்கையாளர்களாக இருக்கிறார்கள். அவன் (வாலிபத்தை அடைந்து) அவ்விருவரையும் அநியாயம் செய்யும்படியும், (இறைவனை) நிராகரிக்கும்படியும் செய்து விடுவானோ என்று நாம் பயந்(து அவ்வாறு செய்)தோம். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௮௦)
Tafseer