Skip to content

ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு - Page: 7

Al-Kahf

(al-Kahf)

௬௧

فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوْتَهُمَا فَاتَّخَذَ سَبِيْلَهٗ فِى الْبَحْرِ سَرَبًا ٦١

falammā balaghā
فَلَمَّا بَلَغَا
அவ்விருவரும் அடைந்தபோது
majmaʿa
مَجْمَعَ
இணையும் இடத்தை
baynihimā
بَيْنِهِمَا
அவ்விரண்டும்
nasiyā
نَسِيَا
இருவரும் மறந்தனர்
ḥūtahumā
حُوتَهُمَا
தங்கள் மீனை
fa-ittakhadha
فَٱتَّخَذَ
ஆக்கிக்கொண்டது
sabīlahu fī l-baḥri
سَبِيلَهُۥ فِى ٱلْبَحْرِ
தன் வழியை/கடலில்
saraban
سَرَبًا
சுரங்கம் போல்
அவர்கள் இருவரும் இரு கடல்களும் சந்திக்கும் இடத்தை அடைந்தபொழுது தங்களுடைய மீனை அவர்கள் மறந்துவிட்டனர். அது கடலில் தன்னுடைய வழியைச் சுரங்கம் போல் அமைத்துக்கொண்டு (சென்று) விட்டது. ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௬௧)
Tafseer
௬௨

فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتٰىهُ اٰتِنَا غَدَاۤءَنَاۖ لَقَدْ لَقِيْنَا مِنْ سَفَرِنَا هٰذَا نَصَبًا ٦٢

falammā jāwazā
فَلَمَّا جَاوَزَا
அவ்விருவரும் கடந்தபோது
qāla
قَالَ
கூறினார்
lifatāhu
لِفَتَىٰهُ
தன் வாலிபரை நோக்கி
ātinā
ءَاتِنَا
கொண்டுவா/நம்மிடம்
ghadāanā
غَدَآءَنَا
உணவை/நம்
laqad
لَقَدْ
திட்டவட்டமாக
laqīnā
لَقِينَا
சந்தித்தோம்
min safarinā
مِن سَفَرِنَا
பயணத்தில்/நம்
hādhā
هَٰذَا
இந்த
naṣaban
نَصَبًا
களைப்பை
(தாங்கள் விரும்பிச் சென்ற அவ்விடத்தை அறியாது) அவ்விருவரும் அதைக் கடந்த பின், மூஸா தன் வாலிபனை நோக்கி "நம்முடைய காலை உணவை நீங்கள் கொண்டு வாருங்கள். நிச்சயமாக நாம் இந்த பயணத்தில் மிகவும் களைப்படைந்து விட்டோம்" என்று கூறினார். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௬௨)
Tafseer
௬௩

قَالَ اَرَاَيْتَ اِذْ اَوَيْنَآ اِلَى الصَّخْرَةِ فَاِنِّيْ نَسِيْتُ الْحُوْتَۖ وَمَآ اَنْسٰىنِيْهُ اِلَّا الشَّيْطٰنُ اَنْ اَذْكُرَهٗۚ وَاتَّخَذَ سَبِيْلَهٗ فِى الْبَحْرِ عَجَبًا ٦٣

qāla
قَالَ
கூறினார்
ara-ayta
أَرَءَيْتَ
நீர் பார்த்தீரா?
idh awaynā
إِذْ أَوَيْنَآ
நாம் ஒதுங்கியபோது
ilā
إِلَى
அருகில்
l-ṣakhrati
ٱلصَّخْرَةِ
அந்த கற்பாறை
fa-innī
فَإِنِّى
நிச்சயமாக நான்
nasītu
نَسِيتُ
மறந்தேன்
l-ḥūta
ٱلْحُوتَ
மீனை
wamā ansānīhu
وَمَآ أَنسَىٰنِيهُ
மறக்கடிக்கவில்லை/எனக்கு
illā l-shayṭānu
إِلَّا ٱلشَّيْطَٰنُ
ஷைத்தானைத் தவிர
an adhkurahu
أَنْ أَذْكُرَهُۥۚ
நான்கூறுவதை/அதை
wa-ittakhadha
وَٱتَّخَذَ
இன்னும் ஆக்கிக் கொண்டது
sabīlahu
سَبِيلَهُۥ
தன் வழியை
fī l-baḥri
فِى ٱلْبَحْرِ
கடலில்
ʿajaban
عَجَبًا
ஆச்சரியமான
அதற்கு (அந்த வாலிபன் மூஸாவை நோக்கி) "அந்த கற்பாறையில் நாம் தங்கிய சமயத்தில் (நிகழ்ந்த ஆச்சரியத்தை) நீங்கள் பார்த்தீர்களா? நிச்சயமாக நான் (நம்முடன் கொண்டுவந்த) மீனை மறந்துவிட்டேன். அதனை நான் (உங்களுக்குக்) கூறுவதை ஷைத்தானையன்றி (வேறொருவரும்) எனக்கு மறக்கடிக்கவில்லை. (அவ்விடத்தில்) கடலில் (செல்ல) ஆச்சரியமான விதத்தில் அது தனக்கு வழி செய்துகொண்டு (சென்று) விட்டது" என்று கூறினார். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௬௩)
Tafseer
௬௪

قَالَ ذٰلِكَ مَا كُنَّا نَبْغِۖ فَارْتَدَّا عَلٰٓى اٰثَارِهِمَا قَصَصًاۙ ٦٤

qāla
قَالَ
கூறினார்
dhālika
ذَٰلِكَ
அதுதான்
mā kunnā nabghi
مَا كُنَّا نَبْغِۚ
எது/இருந்தோம்/தேடுவோம்
fa-ir'taddā
فَٱرْتَدَّا
அவ்விருவரும் திரும்பினார்கள்
ʿalā āthārihimā
عَلَىٰٓ ءَاثَارِهِمَا
தங்கள் சுவடுகள் மீதே
qaṣaṣan
قَصَصًا
பின்பற்றி
அதற்கு மூஸா "நாம் தேடிவந்த இடம் அதுதான்" என்று கூறி இவ்விருவரும் (அவ்விடத்தைத் தேடி) தங்கள் காலடியைப் பின்பற்றி வந்த வழியே சென்றார்கள். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௬௪)
Tafseer
௬௫

فَوَجَدَا عَبْدًا مِّنْ عِبَادِنَآ اٰتَيْنٰهُ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَعَلَّمْنٰهُ مِنْ لَّدُنَّا عِلْمًا ٦٥

fawajadā
فَوَجَدَا
அவ்விருவரும் கண்டார்கள்
ʿabdan
عَبْدًا
ஓர் அடியாரை
min ʿibādinā
مِّنْ عِبَادِنَآ
நமது அடியார்களில்
ātaynāhu
ءَاتَيْنَٰهُ
கொடுத்திருந்தோம்/அவருக்கு
raḥmatan
رَحْمَةً
கருணையை
min ʿindinā
مِّنْ عِندِنَا
நம்மிடமிருந்து
waʿallamnāhu
وَعَلَّمْنَٰهُ
இன்னும் /கற்பித்திருந்தோம்/அவருக்கு
min ladunnā
مِن لَّدُنَّا
நம் புறத்திலிருந்து
ʿil'man
عِلْمًا
ஞானத்தை
இவ்விருவரும் அங்கு வந்தபோது (அவ்விடத்தில்) நம் அடியாரில் ஒருவரைக் கண்டார்கள். அவர் மீது நாம் அருள்புரிந்து நமக்குச் சொந்தமானதொரு ஞானத்தையும் நாம் அவருக்குக் கற்பித்திருந்தோம். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௬௫)
Tafseer
௬௬

قَالَ لَهٗ مُوسٰى هَلْ اَتَّبِعُكَ عَلٰٓى اَنْ تُعَلِّمَنِ مِمَّا عُلِّمْتَ رُشْدًا ٦٦

qāla
قَالَ
கூறினார்
lahu
لَهُۥ
அவரை நோக்கி
mūsā
مُوسَىٰ
மூஸா
hal
هَلْ
?
attabiʿuka
أَتَّبِعُكَ
பின்தொடர்வேன்/உம்மை
ʿalā an tuʿallimani
عَلَىٰٓ أَن تُعَلِّمَنِ
நீர் எனக்கு கற்பிப்பதற்காக
mimmā ʿullim'ta
مِمَّا عُلِّمْتَ
நீர் கற்பிக்கப்பட்டதிலிருந்து
rush'dan
رُشْدًا
நல்லறிவை
மூஸா அவரை நோக்கி "உங்களுக்குக் கற்பிக்கப்பட்ட கல்வியில் பயனளிக்கக் கூடியதை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் நிபந்தனை மீது நான் உங்களைப் பின்பற்றலாமா?" என்று கேட்டார். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௬௬)
Tafseer
௬௭

قَالَ اِنَّكَ لَنْ تَسْتَطِيْعَ مَعِيَ صَبْرًا ٦٧

qāla innaka
قَالَ إِنَّكَ
கூறினார்/நிச்சயமாக நீர்
lan tastaṭīʿa
لَن تَسْتَطِيعَ
இயலவே மாட்டீர்
maʿiya
مَعِىَ
என்னுடன்
ṣabran
صَبْرًا
பொறுத்திருக்க
அதற்கவர் "என்னுடன் இருக்க நிச்சயமாக நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௬௭)
Tafseer
௬௮

وَكَيْفَ تَصْبِرُ عَلٰى مَا لَمْ تُحِطْ بِهٖ خُبْرًا ٦٨

wakayfa
وَكَيْفَ
எப்படி
taṣbiru
تَصْبِرُ
பொறு(த்திரு)ப்பீர்
ʿalā
عَلَىٰ
மீது
مَا
எதை
lam tuḥiṭ
لَمْ تُحِطْ
நீர் சூழ்ந்தறியவில்லையோ
bihi
بِهِۦ
அதை
khub'ran
خُبْرًا
ஆழமாக அறிதல்
அவ்வாறிருக்க உங்களுடைய அறிவுக்கு அப்பாற் பட்டவைகளை (நான் செய்யும்போது பார்த்துக் கொண்டு) நீங்கள் எவ்வாறு சகித்துக் கொண்டு இருப்பீர்கள்" என்று கூறினார். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௬௮)
Tafseer
௬௯

قَالَ سَتَجِدُنِيْٓ اِنْ شَاۤءَ اللّٰهُ صَابِرًا وَّلَآ اَعْصِيْ لَكَ اَمْرًا ٦٩

qāla
قَالَ
கூறினார்
satajidunī
سَتَجِدُنِىٓ
காண்பீர்/என்னை
in shāa
إِن شَآءَ
நாடினால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ṣābiran
صَابِرًا
பொறுமையாளனாக
walā aʿṣī
وَلَآ أَعْصِى
இன்னும் மாறுசெய்யமாட்டேன்
laka
لَكَ
உமக்கு
amran
أَمْرًا
எந்த ஒரு காரியத்திலும்
அதற்கு மூஸா "இறைவன் அருளால் (எந்த விஷயத்தையும்) சகித்திருப்பவனாகவே நீங்கள் என்னைக் காண்பீர்கள். எந்த விஷயத்திலும் நான் உங்களுக்கு மாறுசெய்ய மாட்டேன்" என்று கூறினார். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௬௯)
Tafseer
௭௦

قَالَ فَاِنِ اتَّبَعْتَنِيْ فَلَا تَسْـَٔلْنِيْ عَنْ شَيْءٍ حَتّٰٓى اُحْدِثَ لَكَ مِنْهُ ذِكْرًا ࣖ ٧٠

qāla
قَالَ
கூறினார்
fa-ini ittabaʿtanī
فَإِنِ ٱتَّبَعْتَنِى
நீர் பின்தொடர்ந்தால்/என்னை
falā tasalnī
فَلَا تَسْـَٔلْنِى
கேட்காதீர்/என்னிடம்
ʿan shayin
عَن شَىْءٍ
எந்த ஒரு விஷயத்தைப் பற்றி
ḥattā uḥ'ditha
حَتَّىٰٓ أُحْدِثَ
வரை/ஆரம்பிக்கும்
laka min'hu
لَكَ مِنْهُ
உமக்கு/அதில்
dhik'ran
ذِكْرًا
விளக்கத்தை
அதற்கு அவர் "நீங்கள் என்னைப் பின்பற்றுவதாயின் (நான் செய்யும்) எவ்விஷயத்தைப் பற்றியும் நானாகவே உங்களுக்கு அறிவிக்கும் வரையில் நீங்கள் என்னிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்கள்" என்று சொன்னார். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௭௦)
Tafseer