Skip to content

ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு - Page: 6

Al-Kahf

(al-Kahf)

௫௧

۞ مَآ اَشْهَدْتُّهُمْ خَلْقَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلَا خَلْقَ اَنْفُسِهِمْۖ وَمَا كُنْتُ مُتَّخِذَ الْمُضِلِّيْنَ عَضُدًا ٥١

mā ashhadttuhum
مَّآ أَشْهَدتُّهُمْ
நான் ஆஜராக்கவில்லை/அவர்களை
khalqa
خَلْقَ
படைத்ததிலும்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
walā khalqa
وَلَا خَلْقَ
இன்னும் படைத்ததிலும்
anfusihim
أَنفُسِهِمْ
அவர்களையே
wamā kuntu
وَمَا كُنتُ
இன்னும் நான் இருக்கவில்லை
muttakhidha
مُتَّخِذَ
எடுத்துக் கொள்பவனாக
l-muḍilīna
ٱلْمُضِلِّينَ
வழிகெடுப்பவர்களை
ʿaḍudan
عَضُدًا
உதவியாளர்களாக
நாம் வானங்களையும் பூமியையும் படைத்தபொழுது அவர்களை (உதவியாக) அழைக்கவில்லை. அன்றி, அந்த ஷைத்தான்களை (நாம்) படைத்தபொழுதும் (அவர்களில் சிலரை படைக்க சிலரை உதவியாக) நாம் அவர்களை அழைக்கவில்லை. வழி கெடுக்கும் இந்த ஷைத்தான்களை (எவ்விஷயத்திலும்) நாம் நம்முடைய சகாக்களாக ஆக்கிக் கொள்ளவில்லை. ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௫௧)
Tafseer
௫௨

وَيَوْمَ يَقُوْلُ نَادُوْا شُرَكَاۤءِيَ الَّذِيْنَ زَعَمْتُمْ فَدَعَوْهُمْ فَلَمْ يَسْتَجِيْبُوْا لَهُمْ وَجَعَلْنَا بَيْنَهُمْ مَّوْبِقًا ٥٢

wayawma
وَيَوْمَ
நாளை
yaqūlu
يَقُولُ
கூறுவான்
nādū
نَادُوا۟
அழையுங்கள்
shurakāiya
شُرَكَآءِىَ
என் இணைகளை
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
zaʿamtum
زَعَمْتُمْ
பிதற்றினீர்கள்
fadaʿawhum
فَدَعَوْهُمْ
அவற்றை அவர்கள் அழைப்பார்கள்
falam yastajībū
فَلَمْ يَسْتَجِيبُوا۟
பதிலளிக்கமாட்டாது
lahum
لَهُمْ
அவர்களுக்கு
wajaʿalnā
وَجَعَلْنَا
இன்னும் ஆக்குவோம்
baynahum
بَيْنَهُم
அவர்களுக்கு மத்தியில்
mawbiqan
مَّوْبِقًا
ஓர் அழிவிடத்தை
(இறைவன், இணைவைத்து வணங்குபவர்களை நோக்கி) "நீங்கள் எனக்குத் துணையானவை என எவைகளை எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவைகளை நீங்கள் அழையுங்கள்" என்று கூறும் ஒரு நாளை (நபியே! நீங்கள் அவர்களுக்கு) ஞாபக மூட்டுங்கள். அவர்கள் அவைகளை அழைப்பார்கள். எனினும், அவை அவர்களுக்குப் பதில் கொடுக்கா. அன்றி, நாம் (அவை களுக்கும்) அவர்களுக்கும் இடையில் சந்திக்க முடியாத ஒரு தடையை ஏற்படுத்தி விடுவோம். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௫௨)
Tafseer
௫௩

وَرَاَ الْمُجْرِمُوْنَ النَّارَ فَظَنُّوْٓا اَنَّهُمْ مُّوَاقِعُوْهَا وَلَمْ يَجِدُوْا عَنْهَا مَصْرِفًا ࣖ ٥٣

waraā
وَرَءَا
பார்ப்பார்(கள்)
l-muj'rimūna
ٱلْمُجْرِمُونَ
குற்றவாளிகள்
l-nāra
ٱلنَّارَ
நரகத்தை
faẓannū
فَظَنُّوٓا۟
இன்னும் உறுதி கொள்வார்கள்
annahum
أَنَّهُم
நிச்சயம் தாங்கள்
muwāqiʿūhā
مُّوَاقِعُوهَا
விழக்கூடியவர்கள்தான்/அதில்
walam yajidū
وَلَمْ يَجِدُوا۟
இன்னும் காணமாட்டார்கள்
ʿanhā
عَنْهَا
அதை விட்டு
maṣrifan
مَصْرِفًا
விலகுமிடத்தை
குற்றவாளிகள் நரகத்தைக் காணும் சமயத்தில் "நிச்சயமாக அதில் விழுந்து விடுவோம்" என்று உறுதியாக எண்ணுவார்கள். அவர்கள் அதில் இருந்து தப்ப எந்த ஒரு வழியையும் காண மாட்டார்கள். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௫௩)
Tafseer
௫௪

وَلَقَدْ صَرَّفْنَا فِيْ هٰذَا الْقُرْاٰنِ لِلنَّاسِ مِنْ كُلِّ مَثَلٍۗ وَكَانَ الْاِنْسَانُ اَكْثَرَ شَيْءٍ جَدَلًا ٥٤

walaqad ṣarrafnā
وَلَقَدْ صَرَّفْنَا
விவரித்துவிட்டோம்
fī hādhā
فِى هَٰذَا
இல்/இந்த
l-qur'āni
ٱلْقُرْءَانِ
குர்ஆன்
lilnnāsi
لِلنَّاسِ
மக்களுக்கு
min kulli
مِن كُلِّ
இருந்து/எல்லா
mathalin
مَثَلٍۚ
உதாரணம்
wakāna
وَكَانَ
இருக்கிறான்
l-insānu
ٱلْإِنسَٰنُ
மனிதன்
akthara shayin
أَكْثَرَ شَىْءٍ
மிக அதிகம்
jadalan
جَدَلًا
வாதம்
மனிதர்களுக்கு இந்தக் குர்ஆனில் ஒவ்வொரு உதாரணத்தையும் விவரித்திருக்கிறோம். எனினும், மனிதன்தான் அதிகமாக (வீண்) தர்க்கம் செய்பவனாக இருக்கிறான். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௫௪)
Tafseer
௫௫

وَمَا مَنَعَ النَّاسَ اَنْ يُّؤْمِنُوْٓا اِذْ جَاۤءَهُمُ الْهُدٰى وَيَسْتَغْفِرُوْا رَبَّهُمْ اِلَّآ اَنْ تَأْتِيَهُمْ سُنَّةُ الْاَوَّلِيْنَ اَوْ يَأْتِيَهُمُ الْعَذَابُ قُبُلًا ٥٥

wamā manaʿa
وَمَا مَنَعَ
இன்னும் தடுக்கவில்லை
l-nāsa
ٱلنَّاسَ
மக்களை
an yu'minū
أَن يُؤْمِنُوٓا۟
அவர்கள் நம்பிக்கைகொள்வது
idh
إِذْ
வந்த போது
jāahumu
جَآءَهُمُ
அவர்களுக்கு
l-hudā
ٱلْهُدَىٰ
நேர்வழி
wayastaghfirū
وَيَسْتَغْفِرُوا۟
இன்னும் பாவமன்னிப்புக் கோருவதை
rabbahum
رَبَّهُمْ
அவர்களுடைய இறைவனிடம்
illā an tatiyahum
إِلَّآ أَن تَأْتِيَهُمْ
தவிர/வருவதை/அவர்களுக்கு
sunnatu
سُنَّةُ
நடைமுறை
l-awalīna
ٱلْأَوَّلِينَ
முன்னோரின்
aw yatiyahumu
أَوْ يَأْتِيَهُمُ
அல்லது/வருவதை/அவர்களுக்கு
l-ʿadhābu
ٱلْعَذَابُ
வேதனை
qubulan
قُبُلًا
கண்முன்
மனிதர்களிடம் நேரான வழி வந்ததன் பின்னர் அவர்கள் அதனை நம்பிக்கை கொண்டு தங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருவதைத் தடை செய்வதெல்லாம் முன் சென்றவர்களுக்கு நிகழ்ந்த(தைப் போன்ற அபாயகரமான) சம்பவம் இவர்களுக்கு நிகழவேண்டும் என்பதற்காக அல்லது இவர்கள் (கண்) முன் நம்முடைய வேதனை வரவேண்டும் என்பதற்காகவும் தான். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௫௫)
Tafseer
௫௬

وَمَا نُرْسِلُ الْمُرْسَلِيْنَ اِلَّا مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَۚ وَيُجَادِلُ الَّذِيْنَ كَفَرُوْا بِالْبَاطِلِ لِيُدْحِضُوْا بِهِ الْحَقَّ وَاتَّخَذُوْٓا اٰيٰتِيْ وَمَآ اُنْذِرُوْا هُزُوًا ٥٦

wamā nur'silu
وَمَا نُرْسِلُ
அனுப்ப மாட்டோம்
l-mur'salīna
ٱلْمُرْسَلِينَ
தூதர்களை
illā mubashirīna
إِلَّا مُبَشِّرِينَ
தவிர/நற்செய்தி கூறுபவர்களாக
wamundhirīna
وَمُنذِرِينَۚ
இன்னும் எச்சரிப்பவர்களாக
wayujādilu
وَيُجَٰدِلُ
இன்னும் வாதிடுகிறார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
bil-bāṭili
بِٱلْبَٰطِلِ
அசத்தியத்தைக் கொண்டு
liyud'ḥiḍū
لِيُدْحِضُوا۟
அவர்கள் அழிப்பதற்காக
bihi
بِهِ
அதைக் கொண்டு
l-ḥaqa
ٱلْحَقَّۖ
சத்தியத்தை
wa-ittakhadhū
وَٱتَّخَذُوٓا۟
இன்னும் எடுத்துக்கொண்டனர்
āyātī
ءَايَٰتِى
என் வசனங்களை
wamā undhirū
وَمَآ أُنذِرُوا۟
இன்னும் எச்சரிக்கப்பட்டவற்றை
huzuwan
هُزُوًا
கேலியாக
நற்செய்தி கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவுமே நாம் நம்முடைய தூதர்களை அனுப்பி வைத்திருக்கிறோம். எனினும், நிராகரிப்பவர்களோ (நம் தூதர்கள் கொண்டு வந்த) சத்தியத்தை அழித்துவிடக் கருதி வீணான தர்க்கங்கள் செய்ய ஆரம்பித்து நம்முடைய வசனங்களையும் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட (தண்டனை வருவ)தையும் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறார்கள். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௫௬)
Tafseer
௫௭

وَمَنْ اَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِاٰيٰتِ رَبِّهٖ فَاَعْرَضَ عَنْهَا وَنَسِيَ مَا قَدَّمَتْ يَدَاهُۗ اِنَّا جَعَلْنَا عَلٰى قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ يَّفْقَهُوْهُ وَفِيْٓ اٰذَانِهِمْ وَقْرًاۗ وَاِنْ تَدْعُهُمْ اِلَى الْهُدٰى فَلَنْ يَّهْتَدُوْٓا اِذًا اَبَدًا ٥٧

waman
وَمَنْ
யார்?
aẓlamu
أَظْلَمُ
மகா தீயவன்
mimman dhukkira
مِمَّن ذُكِّرَ
எவனைவிட/அறிவுரை கூறப்பட்டான்
biāyāti
بِـَٔايَٰتِ
வசனங்களைக் கொண்டு
rabbihi
رَبِّهِۦ
தன் இறைவனின்
fa-aʿraḍa
فَأَعْرَضَ
புறக்கணித்தான்
ʿanhā
عَنْهَا
அவற்றை
wanasiya
وَنَسِىَ
இன்னும் மறந்தான்
mā qaddamat
مَا قَدَّمَتْ
எவற்றை/முற்படுத்தின
yadāhu
يَدَاهُۚ
தன் இரு கரங்கள்
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
jaʿalnā
جَعَلْنَا
ஆக்கினோம்
ʿalā qulūbihim
عَلَىٰ قُلُوبِهِمْ
அவர்களின் உள்ளங்கள் மீது
akinnatan
أَكِنَّةً
தடுக்கும் மூடிகளை
an yafqahūhu
أَن يَفْقَهُوهُ
அவர்கள் புரிவதை/அதை
wafī ādhānihim
وَفِىٓ ءَاذَانِهِمْ
இன்னும் அவர்களுடைய காதுகள் மீது
waqran
وَقْرًاۖ
கனத்தை
wa-in tadʿuhum
وَإِن تَدْعُهُمْ
அழைத்தால்/நீர் அவர்களை
ilā l-hudā
إِلَى ٱلْهُدَىٰ
நேர்வழிக்கு
falan yahtadū
فَلَن يَهْتَدُوٓا۟
நேர்வழி பெறவே மாட்டார்கள்
idhan abadan
إِذًا أَبَدًا
அப்போது/ஒருபோதும்
எவன் தன் இறைவனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்ட சமயத்தில் அவற்றைப் புறக்கணித்து, தன் கைகளால் செய்த குற்றங்களை (முற்றிலும்) மறந்து விடுகின்றானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? (இந்த அநியாயக்காரர்கள்) யாதொன்றையும் அறிந்து கொள்ளாதவாறு நாம் அவர்களுடைய உள்ளங்களில் திரையையும், அவர்களுடைய காதுகளில் மந்தத்தையும் நிச்சயமாக ஆக்கிவிட்டோம். ஆதலால், (நபியே!) நீங்கள் அவர்களை நேரான வழியில் (எவ்வளவு வருந்தி) அழைத்தபோதிலும் ஒரு காலத்திலும் அவர்கள் நேரான வழிக்கு வரவே மாட்டார்கள். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௫௭)
Tafseer
௫௮

وَرَبُّكَ الْغَفُوْرُ ذُو الرَّحْمَةِۗ لَوْ يُؤَاخِذُهُمْ بِمَا كَسَبُوْا لَعَجَّلَ لَهُمُ الْعَذَابَۗ بَلْ لَّهُمْ مَّوْعِدٌ لَّنْ يَّجِدُوْا مِنْ دُوْنِهٖ مَوْىِٕلًا ٥٨

warabbuka
وَرَبُّكَ
உம் இறைவன்
l-ghafūru
ٱلْغَفُورُ
மகா மன்னிப்பாளன்
dhū l-raḥmati
ذُو ٱلرَّحْمَةِۖ
கருணையுடையவன்
law yuākhidhuhum
لَوْ يُؤَاخِذُهُم
பிடித்தால்/அவர்களை
bimā kasabū
بِمَا كَسَبُوا۟
அவர்கள் செய்தவற்றுக்காக
laʿajjala
لَعَجَّلَ
தீவிரப்படுத்தியிருப்பான்
lahumu
لَهُمُ
அவர்களுக்கு
l-ʿadhāba
ٱلْعَذَابَۚ
வேதனையை
bal lahum
بَل لَّهُم
மாறாக/அவர்களுக்கு
mawʿidun
مَّوْعِدٌ
வாக்களிக்கப்பட்ட ஒரு நேரம்
lan yajidū
لَّن يَجِدُوا۟
பெறவே மாட்டார்கள்
min dūnihi
مِن دُونِهِۦ
அதிலிருந்து
mawilan
مَوْئِلًا
ஒதுங்குமிடத்தை
ஆனால், (நபியே!) உங்கள் இறைவன் மிக்க மன்னிப்பவனும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான். அவர்கள் செய்யும் (தீய) செயலின் காரணமாக அவன் அவர்களை (உடனுக்குடன்) பிடிப்பதாக இருந்தால் இது வரையில் அவர்களை வேதனை செய்தேயிருப்பான். எனினும், (அவர்களைத் தண்டிக்க) அவர் களுக்கு ஒரு தவணை உண்டு. அதற்குப் பின்னர் அவர்கள் தப்ப வழி காணமாட்டார்கள். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௫௮)
Tafseer
௫௯

وَتِلْكَ الْقُرٰٓى اَهْلَكْنٰهُمْ لَمَّا ظَلَمُوْا وَجَعَلْنَا لِمَهْلِكِهِمْ مَّوْعِدًا ࣖ ٥٩

watil'ka
وَتِلْكَ
அந்த
l-qurā
ٱلْقُرَىٰٓ
ஊர்கள்
ahlaknāhum
أَهْلَكْنَٰهُمْ
அழித்தோம்/அவர்களை
lammā ẓalamū
لَمَّا ظَلَمُوا۟
அவர்கள் தீங்கிழைத்தபோது
wajaʿalnā
وَجَعَلْنَا
இன்னும் ஆக்கினோம்
limahlikihim
لِمَهْلِكِهِم
அவர்கள் அழிவதற்கு
mawʿidan
مَّوْعِدًا
ஒரு தவணையை
பாவம் செய்துகொண்டிருந்த இத்தகைய ஊர்வாசிகள் அனைவரையும் நாம் அழித்துவிட்டோம். எனினும், அவர்களை அழிப்பதற்கும் நாம் ஒரு தவணையை ஏற்படுத்தி இருந்தோம். (அத்தவணை வந்த பின்னரே நாம் அவர்களை அழித்தோம்.) ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௫௯)
Tafseer
௬௦

وَاِذْ قَالَ مُوْسٰى لِفَتٰىهُ لَآ اَبْرَحُ حَتّٰٓى اَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ اَوْ اَمْضِيَ حُقُبًا ٦٠

wa-idh qāla mūsā
وَإِذْ قَالَ مُوسَىٰ
சமயம்/கூறினார்/மூஸா
lifatāhu
لِفَتَىٰهُ
தன் வாலிபரை நோக்கி
lā abraḥu
لَآ أَبْرَحُ
சென்று கொண்டே இருப்பேன்
ḥattā
حَتَّىٰٓ
வரை
ablugha
أَبْلُغَ
அடைவேன்
majmaʿa
مَجْمَعَ
இணைகின்ற இடத்தை
l-baḥrayni
ٱلْبَحْرَيْنِ
இரு கடல்களும்
aw
أَوْ
அல்லது
amḍiya
أَمْضِىَ
நடந்து கொண்டே இருப்பேன்
ḥuquban
حُقُبًا
நீண்டதொரு காலம்
மூஸா தன்னுடன் இருந்த வாலிபனை நோக்கி "இரு கடல்களும் சந்திக்கும் இடத்தை நான் அடையும் வரையில் செல்வேன் அல்லது வருடக்கணக்கில் (இப்படியே) நான் நடந்துகொண்டே இருப்பேன்" என்று கூறியதை (நபியே! அவர் களுக்கு) நீங்கள் ஞாபகமூட்டுங்கள். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௬௦)
Tafseer