اَوْ يُصْبِحَ مَاۤؤُهَا غَوْرًا فَلَنْ تَسْتَطِيْعَ لَهٗ طَلَبًا ٤١
- aw
- أَوْ
- அல்லது
- yuṣ'biḥa
- يُصْبِحَ
- ஆகிவிடக் கூடும்
- māuhā
- مَآؤُهَا
- அதன் தண்ணீர்
- ghawran
- غَوْرًا
- ஆழத்தில்
- falan tastaṭīʿa
- فَلَن تَسْتَطِيعَ
- ஆகவே, அறவே நீ இயலமாட்டாய்
- lahu
- لَهُۥ
- அதை
- ṭalaban
- طَلَبًا
- தேட
அல்லது அதன் நீர் முழுதும் பூமிக்குள் வற்றி(யிருப்பதை) நீ தேடிக் காண முடியாமலும் (ஆக்கிவிடக் கூடும்" என்றும் கூறினார்.) ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௪௧)Tafseer
وَاُحِيْطَ بِثَمَرِهٖ فَاَصْبَحَ يُقَلِّبُ كَفَّيْهِ عَلٰى مَآ اَنْفَقَ فِيْهَا وَهِيَ خَاوِيَةٌ عَلٰى عُرُوْشِهَا وَيَقُوْلُ يٰلَيْتَنِيْ لَمْ اُشْرِكْ بِرَبِّيْٓ اَحَدًا ٤٢
- wa-uḥīṭa
- وَأُحِيطَ
- அழிந்தன
- bithamarihi
- بِثَمَرِهِۦ
- அவனுடைய கனிகள்
- fa-aṣbaḥa
- فَأَصْبَحَ
- ஆரம்பித்தான்
- yuqallibu
- يُقَلِّبُ
- புரட்ட
- kaffayhi
- كَفَّيْهِ
- தன் இரு கைகளை
- ʿalā mā anfaqa
- عَلَىٰ مَآ أَنفَقَ
- செலவழித்ததின் மீது
- fīhā
- فِيهَا
- அதில்
- wahiya
- وَهِىَ
- அது
- khāwiyatun
- خَاوِيَةٌ
- வெறுமையாகிவிட்டது
- ʿalā
- عَلَىٰ
- விட்டு
- ʿurūshihā
- عُرُوشِهَا
- அதன் செடி கொடிகளை
- wayaqūlu
- وَيَقُولُ
- இன்னும் கூறுவான்
- yālaytanī
- يَٰلَيْتَنِى
- நான் இருந்திருக்க வேண்டுமே
- lam ush'rik
- لَمْ أُشْرِكْ
- நான்இணையாக்காமல்
- birabbī
- بِرَبِّىٓ
- என் இறைவனுக்கு
- aḥadan
- أَحَدًا
- ஒருவரை
(அந்நண்பர் கூறியவாறே) அவனுடைய விளைபொருள் அனைத்தும் அழிந்து அதற்காக அவன் செலவு செய்ததைப் பற்றி தன் இரு கைகளைப் பிசைந்துகொண்டு அத்தோட்டத்தின் மரங்கள், செடிகள் (ஆகிய அனைத்தும்) அடியுடன் சாய்ந்துவிட்டதைப் பற்றி (துக்கித்துக் கவலைகொண்டு) "என் இறைவனுக்கு நான் எவரையும் இணையாக்காமல் இருந்திருக்க வேண்டுமே?" என்று அவனே சொல்லும்படியும் நேர்ந்தது. ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௪௨)Tafseer
وَلَمْ تَكُنْ لَّهٗ فِئَةٌ يَّنْصُرُوْنَهٗ مِنْ دُوْنِ اللّٰهِ وَمَا كَانَ مُنْتَصِرًاۗ ٤٣
- walam takun
- وَلَمْ تَكُن
- இருக்கவில்லை
- lahu
- لَّهُۥ
- அவனுக்கு
- fi-atun
- فِئَةٌ
- கூட்டம்
- yanṣurūnahu
- يَنصُرُونَهُۥ
- அவனுக்கு உதவுவார்கள்
- min dūni
- مِن دُونِ
- அன்றி
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வை
- wamā kāna
- وَمَا كَانَ
- இன்னும் இருக்கவில்லை
- muntaṣiran
- مُنتَصِرًا
- பாதுகாப்பவனாக
அச்சமயம் அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யக்கூடிய யாதொரு சேனையும் அவனுக்கு இருக்கவில்லை. அவனும் (இதற்காக அல்லாஹ்விடம்) பழிவாங்க முடியாது போயிற்று. ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௪௩)Tafseer
هُنَالِكَ الْوَلَايَةُ لِلّٰهِ الْحَقِّۗ هُوَ خَيْرٌ ثَوَابًا وَّخَيْرٌ عُقْبًا ࣖ ٤٤
- hunālika
- هُنَالِكَ
- அந்நேரத்தில்
- l-walāyatu
- ٱلْوَلَٰيَةُ
- உதவி
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்விற்கே
- l-ḥaqi
- ٱلْحَقِّۚ
- உண்மையானவன்
- huwa khayrun
- هُوَ خَيْرٌ
- அவன் சிறந்தவன்
- thawāban
- ثَوَابًا
- நன்மையாலும்
- wakhayrun
- وَخَيْرٌ
- இன்னும் சிறந்தவன்
- ʿuq'ban
- عُقْبًا
- முடிவாலும்
அத்தகைய நிலைமையில் எல்லா அதிகாரங்களும் உண்மையான அல்லாஹ்வுக்கு உரியனவே. அவனே கூலி கொடுப்பவர்களில் மிக்க மேலானவன்; முடிவு செய்வதிலும் மிக்க மேலானவன் (என்பதையும் அவன் அறிந்து கொண்டான்). ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௪௪)Tafseer
وَاضْرِبْ لَهُمْ مَّثَلَ الْحَيٰوةِ الدُّنْيَا كَمَاۤءٍ اَنْزَلْنٰهُ مِنَ السَّمَاۤءِ فَاخْتَلَطَ بِهٖ نَبَاتُ الْاَرْضِ فَاَصْبَحَ هَشِيْمًا تَذْرُوْهُ الرِّيٰحُ ۗوَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ مُّقْتَدِرًا ٤٥
- wa-iḍ'rib
- وَٱضْرِبْ
- விவரிப்பீராக
- lahum
- لَهُم
- அவர்களுக்கு
- mathala
- مَّثَلَ
- தன்மையை
- l-ḥayati
- ٱلْحَيَوٰةِ
- வாழ்க்கை
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- உலகம்
- kamāin
- كَمَآءٍ
- மழை நீரைப்போன்று
- anzalnāhu
- أَنزَلْنَٰهُ
- அதை இறக்கினோம்
- mina l-samāi
- مِنَ ٱلسَّمَآءِ
- வானத்திலிருந்து
- fa-ikh'talaṭa
- فَٱخْتَلَطَ
- அது கலந்தது
- bihi
- بِهِۦ
- அதனுடன்
- nabātu
- نَبَاتُ
- தாவரம்
- l-arḍi
- ٱلْأَرْضِ
- பூமியின்
- fa-aṣbaḥa
- فَأَصْبَحَ
- அது ஆகிவிட்டது
- hashīman
- هَشِيمًا
- காய்ந்த சருகாக
- tadhrūhu
- تَذْرُوهُ
- அடித்து வீசும்படியான/அதை
- l-riyāḥu
- ٱلرِّيَٰحُۗ
- காற்றுகள்
- wakāna
- وَكَانَ
- இருக்கிறான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalā kulli shayin
- عَلَىٰ كُلِّ شَىْءٍ
- எல்லாவற்றின் மீது
- muq'tadiran
- مُّقْتَدِرًا
- பேராற்றலுடையவனாக
(நபியே!) இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணத்தை அவர்களுக்குக் கூறுங்கள்: அது மேகத்திலிருந்து நாம் இறக்கி வைக்கும் (மழை) நீருக்கு ஒப்பாக இருக்கிறது. பூமியிலுள்ள புற்பூண்டுகள் (அதைக் குடித்து) அதனுடன் கலந்து (நல்ல பயிராயிற்று. எனினும், அது பலன் தருவதற்குப் பதிலாக) காற்றடித்துக் கொண்டு போகக்கூடிய காய்ந்த சருகாகிவிட்டது. (இதுவே இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணமாகும்.) அனைத்தின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௪௫)Tafseer
اَلْمَالُ وَالْبَنُوْنَ زِيْنَةُ الْحَيٰوةِ الدُّنْيَاۚ وَالْبٰقِيٰتُ الصّٰلِحٰتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَيْرٌ اَمَلًا ٤٦
- al-mālu
- ٱلْمَالُ
- செல்வம்
- wal-banūna
- وَٱلْبَنُونَ
- இன்னும் ஆண்பிள்ளைகள்
- zīnatu
- زِينَةُ
- அலங்காரமாகும்
- l-ḥayati l-dun'yā
- ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَاۖ
- உலக வாழ்க்கையின்
- wal-bāqiyātu
- وَٱلْبَٰقِيَٰتُ
- இன்னும் நிலையாக இருப்பவை
- l-ṣāliḥātu
- ٱلصَّٰلِحَٰتُ
- நற்செயல்கள்
- khayrun
- خَيْرٌ
- சிறந்தவை
- ʿinda rabbika
- عِندَ رَبِّكَ
- உம் இறைவனிடம்
- thawāban
- ثَوَابًا
- நன்மையிலும்
- wakhayrun
- وَخَيْرٌ
- சிறந்தவை
- amalan
- أَمَلًا
- ஆசையிலும்
(ஆகவே) பொருளும் மக்களும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய அலங்காரங்களே (அன்றி நிலையானவையல்ல.) என்றுமே நிலையான நற்செயல்கள் தாம் உங்கள் இறைவனிடத்தில் நற்கூலி கிடைப்பதற்கு மிக சிறந்ததும், நல்ஆதரவு வைப்பதற்கு மிக சிறந்ததும் ஆகும். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௪௬)Tafseer
وَيَوْمَ نُسَيِّرُ الْجِبَالَ وَتَرَى الْاَرْضَ بَارِزَةًۙ وَّحَشَرْنٰهُمْ فَلَمْ نُغَادِرْ مِنْهُمْ اَحَدًاۚ ٤٧
- wayawma
- وَيَوْمَ
- இன்னும் நாளில்
- nusayyiru
- نُسَيِّرُ
- பெயர்த்துவிடுவோம்
- l-jibāla
- ٱلْجِبَالَ
- மலைகளை
- watarā
- وَتَرَى
- இன்னும் பார்ப்பீர்
- l-arḍa
- ٱلْأَرْضَ
- பூமியை
- bārizatan
- بَارِزَةً
- வெளிப்பட்டதாக
- waḥasharnāhum
- وَحَشَرْنَٰهُمْ
- ஒன்று திரட்டுவோம்/ அவர்களை
- falam nughādir
- فَلَمْ نُغَادِرْ
- விடமாட்டோம்
- min'hum
- مِنْهُمْ
- அவர்களில்
- aḥadan
- أَحَدًا
- ஒருவரை
(நபியே!) நாம் மலைகள் (மரங்கள், செடிகள், போன்ற பூமியிலுள்ள) அனைத்தையும் அகற்றிவிடும் நாளில், நீங்கள் பூமியைச் சமமான வெட்ட வெளியாகக் காண்பீர்கள். (அந்நாளில்) மனிதர்களில் ஒருவரையுமே விட்டு விடாது அனைவரையும் ஒன்று சேர்ப்போம். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௪௭)Tafseer
وَعُرِضُوْا عَلٰى رَبِّكَ صَفًّاۗ لَقَدْ جِئْتُمُوْنَا كَمَا خَلَقْنٰكُمْ اَوَّلَ مَرَّةٍۢ ۖبَلْ زَعَمْتُمْ اَلَّنْ نَّجْعَلَ لَكُمْ مَّوْعِدًا ٤٨
- waʿuriḍū
- وَعُرِضُوا۟
- இன்னும் சமர்ப்பிக்கப்படுவார்கள்
- ʿalā rabbika
- عَلَىٰ رَبِّكَ
- உம் இறைவன் முன்
- ṣaffan
- صَفًّا
- வரிசையாக
- laqad ji'tumūnā
- لَّقَدْ جِئْتُمُونَا
- எங்களிடம் வந்துவிட்டீர்கள்
- kamā khalaqnākum
- كَمَا خَلَقْنَٰكُمْ
- நாம் படைத்தவாறே/உங்களை
- awwala
- أَوَّلَ
- முதல்
- marratin
- مَرَّةٍۭۚ
- முறை
- bal
- بَلْ
- மாறாக
- zaʿamtum
- زَعَمْتُمْ
- பிதற்றினீர்கள்
- allan najʿala
- أَلَّن نَّجْعَلَ
- ஆக்கவே மாட்டோம்
- lakum
- لَكُم
- உங்களுக்கு
- mawʿidan
- مَّوْعِدًا
- வாக்களிக்கப்பட்ட நேரத்தை
உங்கள் இறைவன் முன் அவர்கள் கொண்டு வரப்பட்டு, அணி அணியாக நிறுத்தப்பட்டு "நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே இப்பொழுதும் (உங்களுக்கு நாம் உயிர் கொடுத்து) நீங்கள் நம்மிடம் வந்திருக்கிறீர்கள். (எனினும், நீங்களோ நம்மிடம் வரக்கூடிய) இந்நாளை உங்களுக்கு ஏற்படுத்தவே இல்லை என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்" (என்று கூறப்படுவார்கள்). ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௪௮)Tafseer
وَوُضِعَ الْكِتٰبُ فَتَرَى الْمُجْرِمِيْنَ مُشْفِقِيْنَ مِمَّا فِيْهِ وَيَقُوْلُوْنَ يٰوَيْلَتَنَا مَالِ هٰذَا الْكِتٰبِ لَا يُغَادِرُ صَغِيْرَةً وَّلَا كَبِيْرَةً اِلَّآ اَحْصٰىهَاۚ وَوَجَدُوْا مَا عَمِلُوْا حَاضِرًاۗ وَلَا يَظْلِمُ رَبُّكَ اَحَدًا ࣖ ٤٩
- wawuḍiʿa
- وَوُضِعَ
- வைக்கப்படும்
- l-kitābu
- ٱلْكِتَٰبُ
- புத்தகம்
- fatarā
- فَتَرَى
- பார்ப்பீர்
- l-muj'rimīna
- ٱلْمُجْرِمِينَ
- குற்றவாளிகளை
- mush'fiqīna
- مُشْفِقِينَ
- பயந்தவர்களாக
- mimmā
- مِمَّا
- எவற்றினால்
- fīhi
- فِيهِ
- அதில்
- wayaqūlūna
- وَيَقُولُونَ
- இன்னும் கூறுவார்கள்
- yāwaylatanā
- يَٰوَيْلَتَنَا
- எங்கள் நாசமே
- māli
- مَالِ
- என்ன?/க்கு
- hādhā
- هَٰذَا
- இந்த
- l-kitābi
- ٱلْكِتَٰبِ
- புத்தகம்
- lā yughādiru
- لَا يُغَادِرُ
- அது விடவில்லை
- ṣaghīratan
- صَغِيرَةً
- சிறியதை
- walā kabīratan
- وَلَا كَبِيرَةً
- இன்னும் பெரியதை
- illā
- إِلَّآ
- தவிர
- aḥṣāhā
- أَحْصَىٰهَاۚ
- கணக்கிட்டது/ அவற்றின்
- wawajadū
- وَوَجَدُوا۟
- இன்னும் காண்பார்கள்
- mā ʿamilū
- مَا عَمِلُوا۟
- எதை/செய்தார்கள்
- ḥāḍiran
- حَاضِرًاۗ
- முன்னால்
- walā yaẓlimu
- وَلَا يَظْلِمُ
- இன்னும் தீங்கிழைக்க மாட்டான்
- rabbuka
- رَبُّكَ
- உம் இறைவன்
- aḥadan
- أَحَدًا
- ஒருவருக்கும்
(அவர்களுடைய தினசரிக் குறிப்புப் புத்தகம் அவர்கள் முன் வைக்கப்பட்டால் குற்றவாளிகள் (தாங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் அதில் இருப்பதைக் கண்டு) பயந்து "எங்களுடைய கேடே! இதென்ன புத்தகம்! (எங்களுடைய பாவங்கள்) சிறிதோ பெரிதோ ஒன்றையும்விடாது இதில் வரையப்பட்டிருக்கின்றதே" என்று அவர்கள் (புலம்பிக்) கூறுவதை நீங்கள் காண்பீர்கள். (நன்மையோ தீமையோ) அவர்கள் செய்த அனைத்தும் (அதில்) இருக்கக் காண்பார்கள். உங்கள் இறைவன் எவனுக்கும் (அவனுடைய தண்டனையைக் கூட்டியோ, நன்மையைக் குறைத்தோ) அநியாயம் செய்ய மாட்டான். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௪௯)Tafseer
وَاِذْ قُلْنَا لِلْمَلٰۤىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْٓا اِلَّآ اِبْلِيْسَۗ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ اَمْرِ رَبِّهٖۗ اَفَتَتَّخِذُوْنَهٗ وَذُرِّيَّتَهٗٓ اَوْلِيَاۤءَ مِنْ دُوْنِيْ وَهُمْ لَكُمْ عَدُوٌّۗ بِئْسَ لِلظّٰلِمِيْنَ بَدَلًا ٥٠
- wa-idh qul'nā
- وَإِذْ قُلْنَا
- நாம் கூறிய சமயம்
- lil'malāikati
- لِلْمَلَٰٓئِكَةِ
- வானவர்களுக்கு
- us'judū
- ٱسْجُدُوا۟
- சிரம் பணியுங்கள்
- liādama
- لِءَادَمَ
- ஆதமுக்கு
- fasajadū
- فَسَجَدُوٓا۟
- ஆகவே சிரம் பணிந்தனர்
- illā
- إِلَّآ
- தவிர
- ib'līsa
- إِبْلِيسَ
- இப்லீஸ்
- kāna
- كَانَ
- இருந்தான்
- mina l-jini
- مِنَ ٱلْجِنِّ
- ஜின்களில் ஒருவனாக
- fafasaqa
- فَفَسَقَ
- மீறினான்
- ʿan amri
- عَنْ أَمْرِ
- கட்டளையை
- rabbihi
- رَبِّهِۦٓۗ
- தன் இறைவனின்
- afatattakhidhūnahu
- أَفَتَتَّخِذُونَهُۥ
- எடுத்துக் கொள்கிறீர்களா?/அவனை
- wadhurriyyatahu
- وَذُرِّيَّتَهُۥٓ
- இன்னும் அவனது சந்ததியை
- awliyāa
- أَوْلِيَآءَ
- நண்பர்களாக
- min dūnī
- مِن دُونِى
- என்னையன்றி
- wahum
- وَهُمْ
- அவர்களோ
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- ʿaduwwun
- عَدُوٌّۢۚ
- எதிரிகள்
- bi'sa
- بِئْسَ
- மிக கெட்டவன்
- lilẓẓālimīna
- لِلظَّٰلِمِينَ
- தீயவர்களுக்கு
- badalan
- بَدَلًا
- மாற்றம்
மலக்குகளை நோக்கி "ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்" என்று நாம் கூறிய சமயத்தில், இப்லீஸைத் தவிர அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தார்கள். அவனோ ஜின்களின் இனத்தைச் சார்ந்தவன். அவன் தன் இறைவனுடைய கட்டளைக்கு மாறு செய்து பாவியானான். ஆகவே (மனிதர்களே!) நீங்கள் என்னையன்றி அவனையும், அவனுடைய சந்ததிகளையும் பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குக் கொடிய எதிரிகளாக இருக்கிறார்கள். அநியாயக்காரர்கள் (என்னை விட்டு விட்டு அவர்களைத் தங்களுக்குப் பாதுகாவலர்களாக) மாற்றிக் கொண்டது மகா கெட்டது. ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௫௦)Tafseer