Skip to content

ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு - Page: 4

Al-Kahf

(al-Kahf)

௩௧

اُولٰۤىِٕكَ لَهُمْ جَنّٰتُ عَدْنٍ تَجْرِيْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُ يُحَلَّوْنَ فِيْهَا مِنْ اَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَّيَلْبَسُوْنَ ثِيَابًا خُضْرًا مِّنْ سُنْدُسٍ وَّاِسْتَبْرَقٍ مُّتَّكِىِٕيْنَ فِيْهَا عَلَى الْاَرَاۤىِٕكِۗ نِعْمَ الثَّوَابُۗ وَحَسُنَتْ مُرْتَفَقًا ٣١

ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
lahum
لَهُمْ
அவர்களுக்கு உண்டு
jannātu ʿadnin
جَنَّٰتُ عَدْنٍ
சொர்க்கங்கள்/அத்ன்
tajrī
تَجْرِى
ஓடும்
min taḥtihimu
مِن تَحْتِهِمُ
அவர்களின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
yuḥallawna
يُحَلَّوْنَ
அலங்காரம் செய்யப்படுவார்கள்
fīhā
فِيهَا
அவற்றில்
min asāwira
مِنْ أَسَاوِرَ
வளையல்களினால்
min dhahabin
مِن ذَهَبٍ
தங்கத்திலிருந்து
wayalbasūna
وَيَلْبَسُونَ
இன்னும் அணிவார்கள்
thiyāban
ثِيَابًا
ஆடைகளை
khuḍ'ran
خُضْرًا
பச்சை நிற
min sundusin
مِّن سُندُسٍ
மென்மையான பட்டுகளிலிருந்து
wa-is'tabraqin
وَإِسْتَبْرَقٍ
தடிப்பமான பட்டு
muttakiīna
مُّتَّكِـِٔينَ
சாய்ந்தவர்களாக
fīhā
فِيهَا
அவற்றில்
ʿalā l-arāiki
عَلَى ٱلْأَرَآئِكِۚ
கட்டில்கள் மீது
niʿ'ma
نِعْمَ
சிறந்த
l-thawābu
ٱلثَّوَابُ
கூலி
waḥasunat
وَحَسُنَتْ
இன்னும் அழகியது
mur'tafaqan
مُرْتَفَقًا
ஓய்விடம்
இவர்களுக்கு நிலையான சுவனபதிகள் உண்டு. அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். அவர்களுக்குப் (பரிசாகப்) பொற்கடகம் அணிவிக்கப்படும். மெல்லியதாகவோ அழுத்தமானதாகவோ (அவர்கள் விரும்பிய) பசுமையான பட்டாடைகளை அணிவார்கள். ஆசனங்களிலுள்ள தலையணைகள் மீது சாய்ந்து (மிக்க உல்லாசமாக) இருப்பார்கள். இவர்களுடைய கூலி மிக்க நன்றே! இவர்கள் இன்பம் சுவைக்கும் இடமும் மிக்க அழகானது. ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௩௧)
Tafseer
௩௨

۞ وَاضْرِبْ لَهُمْ مَّثَلًا رَّجُلَيْنِ جَعَلْنَا لِاَحَدِهِمَا جَنَّتَيْنِ مِنْ اَعْنَابٍ وَّحَفَفْنٰهُمَا بِنَخْلٍ وَّجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًاۗ ٣٢

wa-iḍ'rib
وَٱضْرِبْ
இன்னும் விவரிப்பீராக
lahum
لَهُم
அவர்களுக்கு
mathalan
مَّثَلًا
ஓர் உதாரணத்தை
rajulayni
رَّجُلَيْنِ
இரு ஆடவர்கள்
jaʿalnā
جَعَلْنَا
ஆக்கினோம்
li-aḥadihimā
لِأَحَدِهِمَا
அவ்விருவரில் ஒருவருக்கு
jannatayni
جَنَّتَيْنِ
இரு தோட்டங்களை
min aʿnābin
مِنْ أَعْنَٰبٍ
திராட்சைகளினால் (நிரம்பிய)
waḥafafnāhumā
وَحَفَفْنَٰهُمَا
இன்னும் அவ்விரண்டையும் சுற்றினோம்
binakhlin
بِنَخْلٍ
பேரிட்ச மரங்களால்
wajaʿalnā
وَجَعَلْنَا
இன்னும் ஆக்கினோம்
baynahumā
بَيْنَهُمَا
அவ்விரண்டுக்கும் இடையில்
zarʿan
زَرْعًا
விவசாயத்தை
(நபியே!) இரு மனிதர்களை நீங்கள் அவர்களுக்கு உதாரணமாகக் கூறுங்கள்: அவர்களில் ஒருவனுக்கு இரு திராட்சைத் தோட்டங்களைக் கொடுத்தோம். அவ்விரண்டைச் சூழவும் பேரீச்ச மரங்களை ஆக்கினோம். இவ்விரண்டிற்கும் மத்தியில் தானிய வயல்களை அமைத்தோம். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௩௨)
Tafseer
௩௩

كِلْتَا الْجَنَّتَيْنِ اٰتَتْ اُكُلَهَا وَلَمْ تَظْلِمْ مِّنْهُ شَيْـًٔاۙ وَّفَجَّرْنَا خِلٰلَهُمَا نَهَرًاۙ ٣٣

kil'tā l-janatayni
كِلْتَا ٱلْجَنَّتَيْنِ
அவ்விரு தோட்டங்களும்
ātat
ءَاتَتْ
தந்தன
ukulahā
أُكُلَهَا
தத்தமது கனிகளை
walam taẓlim
وَلَمْ تَظْلِم
குறை(வை)க்கவில்லை
min'hu
مِّنْهُ
அவற்றில்
shayan
شَيْـًٔاۚ
எதையும்
wafajjarnā
وَفَجَّرْنَا
இன்னும் பிளந்தோடச் செய்தோம்
khilālahumā
خِلَٰلَهُمَا
அவ்விரண்டுக்கும் இடையில்
naharan
نَهَرًا
ஓர் ஆற்றை
அவ்விரு தோட்டங்களில் ஒவ்வொன்றும் அதன் பலனை யாதொரு குறைவுமின்றி கொடுத்துக் கொண்டிருந்தது. அவ்விரண்டிற்கும் மத்தியில் ஒரு நதியையும் ஓடச்செய்தோம். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௩௩)
Tafseer
௩௪

وَّكَانَ لَهٗ ثَمَرٌۚ فَقَالَ لِصَاحِبِهٖ وَهُوَ يُحَاوِرُهٗٓ اَنَا۠ اَكْثَرُ مِنْكَ مَالًا وَّاَعَزُّ نَفَرًا ٣٤

wakāna
وَكَانَ
இன்னும் இருந்தன
lahu
لَهُۥ
அவனுக்கு
thamarun
ثَمَرٌ
கனிகள்
faqāla
فَقَالَ
கூறினான்
liṣāḥibihi
لِصَٰحِبِهِۦ
தன் தோழருக்கு
wahuwa
وَهُوَ
அவனோ
yuḥāwiruhu
يُحَاوِرُهُۥٓ
அவரிடம் பேசியவனாக
anā aktharu
أَنَا۠ أَكْثَرُ
நான் மிக அதிகமானவன்
minka
مِنكَ
உன்னை விட
mālan
مَالًا
செல்வத்தால்
wa-aʿazzu
وَأَعَزُّ
இன்னும் மிக கண்ணியமுள்ளவன்
nafaran
نَفَرًا
குடும்பத்தால்
அவனிடத்தில் (இவையன்றி) வேறு பல கனி (மரங்)களும் இருந்தன. (இத்தகைய நிலைமையில் ஒரு நாள்) அவன் தன்னுடன் பேசிக் கொண்டிருந்த தன் நண்பனை நோக்கி "நான் உன்னைவிட அதிகப் பொருளுடையவன்" மக்கள் தொகையிலும் நான் (உன்னை) மிகைத்தவன்" என்று (கர்வத்துடன்) கூறினான். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௩௪)
Tafseer
௩௫

وَدَخَلَ جَنَّتَهٗ وَهُوَ ظَالِمٌ لِّنَفْسِهٖۚ قَالَ مَآ اَظُنُّ اَنْ تَبِيْدَ هٰذِهٖٓ اَبَدًاۙ ٣٥

wadakhala
وَدَخَلَ
இன்னும் நுழைந்தான்
jannatahu
جَنَّتَهُۥ
தனது தோட்டத்தில்
wahuwa
وَهُوَ
அவனோ
ẓālimun
ظَالِمٌ
தீங்கிழைத்தவனாக
linafsihi
لِّنَفْسِهِۦ
தனக்குத் தானே
qāla
قَالَ
கூறினான்
mā aẓunnu
مَآ أَظُنُّ
நான் எண்ணவில்லை
an tabīda
أَن تَبِيدَ
அழியும் என்று
hādhihi
هَٰذِهِۦٓ
இது
abadan
أَبَدًا
ஒருபோதும்
பின்னர், அவன் தன் தோப்புக்குள் நுழைந்து (அளவு மீறிய அக மகிழ்ச்சியின் காரணமாக) தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொண்டு "இவை ஒரு காலத்திலும் அழிந்து விடுமென நான் நினைக்கவில்லை" (என்றும்) ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௩௫)
Tafseer
௩௬

وَّمَآ اَظُنُّ السَّاعَةَ قَاۤىِٕمَةً وَّلَىِٕنْ رُّدِدْتُّ اِلٰى رَبِّيْ لَاَجِدَنَّ خَيْرًا مِّنْهَا مُنْقَلَبًا ٣٦

wamā aẓunnu
وَمَآ أَظُنُّ
இன்னும் நான்எண்ணவில்லை
l-sāʿata qāimatan
ٱلسَّاعَةَ قَآئِمَةً
மறுமை/நிகழும்
wala-in rudidttu
وَلَئِن رُّدِدتُّ
நான் திரும்பக் கொண்டுவரப்பட்டாலும்
ilā rabbī
إِلَىٰ رَبِّى
என் இறைவனிடம்
la-ajidanna
لَأَجِدَنَّ
நிச்சயம் பெறுவேன்
khayran
خَيْرًا
சிறந்த ஒன்றை
min'hā
مِّنْهَا
இதைவிட
munqalaban
مُنقَلَبًا
மீளுமிடமாக
"மறுமை ஏற்படும் என்றும் நான் நம்பவேயில்லை. ஒருகால் (மறுமை ஏற்பட்டு) நான் என் இறைவனிடம் கொண்டு போகப்பட்டாலும் இங்கிருப்பதைவிட அங்கு நான் மேலானவனாக இருப்பதையே காண்பேன்" என்றும் கூறினான். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௩௬)
Tafseer
௩௭

قَالَ لَهٗ صَاحِبُهٗ وَهُوَ يُحَاوِرُهٗٓ اَكَفَرْتَ بِالَّذِيْ خَلَقَكَ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ سَوّٰىكَ رَجُلًاۗ ٣٧

qāla
قَالَ
கூறினார்
lahu
لَهُۥ
அவனுக்கு
ṣāḥibuhu
صَاحِبُهُۥ
அவரது தோழர்
wahuwa
وَهُوَ
அவர்
yuḥāwiruhu
يُحَاوِرُهُۥٓ
அவனிடம் பேசியவராக
akafarta
أَكَفَرْتَ
நீ நிராகரித்தாயா?
bi-alladhī
بِٱلَّذِى
எப்படிப்பட்டவனை
khalaqaka
خَلَقَكَ
உன்னைப் படைத்தான்
min turābin
مِن تُرَابٍ
மண்ணிலிருந்து
thumma
ثُمَّ
பிறகு
min nuṭ'fatin
مِن نُّطْفَةٍ
இந்திரியத்திலிருந்து
thumma
ثُمَّ
பிறகு
sawwāka
سَوَّىٰكَ
சீரமைத்தான்
rajulan
رَجُلًا
ஓர் ஆடவராக
அதற்கு அவனுடன் பேசிக் கொண்டிருந்த அவனுடைய நண்பன் அவனை நோக்கி "உன்னைப் படைத்தவனையே நீ நிராகரிக்கிறாயா? மண்ணிலிருந்து பின்னர் இந்திரியத்தின் ஒரு துளியிலிருந்து உன்னைப் படைத்த அவன், பின்னர் ஒரு முழு மனிதனாகவும் உன்னை அமைத்தான். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௩௭)
Tafseer
௩௮

لٰكِنَّا۠ هُوَ اللّٰهُ رَبِّيْ وَلَآ اُشْرِكُ بِرَبِّيْٓ اَحَدًا ٣٨

lākinnā
لَّٰكِنَّا۠
எனினும் நான்
huwa
هُوَ
அவன்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
rabbī
رَبِّى
என் இறைவன்
walā ush'riku
وَلَآ أُشْرِكُ
இணையாக்க மாட்டேன்
birabbī
بِرَبِّىٓ
என் இறைவனுக்கு
aḥadan
أَحَدًا
ஒருவரையும்
நிச்சயமாக அந்த அல்லாஹ்தான் என்னையும் படைத்து வளர்ப்பவன் என்று நான் உறுதியாக நம்பியிருக்கிறேன். ஆகவே, நான் என்னுடைய இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்க மாட்டேன். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௩௮)
Tafseer
௩௯

وَلَوْلَآ اِذْ دَخَلْتَ جَنَّتَكَ قُلْتَ مَا شَاۤءَ اللّٰهُ ۙ لَا قُوَّةَ اِلَّا بِاللّٰهِ ۚاِنْ تَرَنِ اَنَا۠ اَقَلَّ مِنْكَ مَالًا وَّوَلَدًاۚ ٣٩

walawlā
وَلَوْلَآ
வேண்டாமா?
idh dakhalta
إِذْ دَخَلْتَ
நீ நுழைந்த போது
jannataka
جَنَّتَكَ
உன் தோட்டத்தில்
qul'ta
قُلْتَ
நீ கூறியிருக்க
mā shāa
مَا شَآءَ
எது/நாடினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lā quwwata
لَا قُوَّةَ
அறவே ஆற்றல் இல்லை
illā bil-lahi
إِلَّا بِٱللَّهِۚ
தவிர/அல்லாஹ்வைக் கொண்டே
in tarani
إِن تَرَنِ
என்னை நீ பார்த்தால்
anā
أَنَا۠
நான்
aqalla
أَقَلَّ
குறைவானவனாக
minka
مِنكَ
உன்னைவிட
mālan
مَالًا
செல்வத்திலும்
wawaladan
وَوَلَدًا
சந்ததியிலும்
அன்றி, நீ உன் தோட்டத்தில் நுழைந்தபொழுது (இவை அனைத்தும்) அல்லாஹ் (தன் அருளால்) எனக்குத் தந்தவையே! அல்லாஹ்வின் உதவியின்றி (நாம்) ஒன்றும் (செய்து) விட முடியாது? என்று நீ கூறியிருக்க வேண்டாமா? பொருளிலும் சந்ததியிலும் நான் உனக்குக் குறைவாக இருப்பதை நீ கண்டபோதிலும், ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௩௯)
Tafseer
௪௦

فَعَسٰى رَبِّيْٓ اَنْ يُّؤْتِيَنِ خَيْرًا مِّنْ جَنَّتِكَ وَيُرْسِلَ عَلَيْهَا حُسْبَانًا مِّنَ السَّمَاۤءِ فَتُصْبِحَ صَعِيْدًا زَلَقًاۙ ٤٠

faʿasā
فَعَسَىٰ
கூடும்
rabbī
رَبِّىٓ
என் இறைவன்
an yu'tiyani
أَن يُؤْتِيَنِ
அவர்கள் எனக்குத் தந்து
khayran
خَيْرًا
சிறந்ததை
min jannatika
مِّن جَنَّتِكَ
உன்தோட்டத்தைவிட
wayur'sila
وَيُرْسِلَ
இன்னும் அனுப்ப
ʿalayhā
عَلَيْهَا
அதன் மீது
ḥus'bānan
حُسْبَانًا
வேதனையை,அழிவை
mina l-samāi
مِّنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
fatuṣ'biḥa
فَتُصْبِحَ
அது ஆகிவிடும்
ṣaʿīdan
صَعِيدًا
வழுவழுப்பான
zalaqan
زَلَقًا
வெறும் தரையாக
உன்னுடைய தோட்டத்தைவிட மிக்க மேலானதை என் இறைவன் எனக்குக் கொடுக்கவும் (உன் நன்றிகெட்ட தன்மையின் காரணமாக) உன் தோப்பின் மீது யாதொரு ஆபத்தை வானத்தில் இருந்து இறக்கி (அதிலுள்ள மரம், செடிகளையெல்லாம் அழித்து) அதனை வெட்டவெளியாக (என் இறைவன்) செய்து விடவும் கூடும். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௪௦)
Tafseer