Skip to content

ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு - Page: 11

Al-Kahf

(al-Kahf)

௧௦௧

ۨالَّذِيْنَ كَانَتْ اَعْيُنُهُمْ فِيْ غِطَاۤءٍ عَنْ ذِكْرِيْ وَكَانُوْا لَا يَسْتَطِيْعُوْنَ سَمْعًا ࣖ ١٠١

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kānat
كَانَتْ
இருந்தன
aʿyunuhum
أَعْيُنُهُمْ
அவர்களுடைய கண்கள்
fī ghiṭāin
فِى غِطَآءٍ
திரைக்குள்
ʿan dhik'rī
عَن ذِكْرِى
என் நல்லுப தேசங்களை விட்டு
wakānū
وَكَانُوا۟
இன்னும் இருந்தனர்
lā yastaṭīʿūna
لَا يَسْتَطِيعُونَ
இயலாதவர்களாக
samʿan
سَمْعًا
செவியுற
(அவர்கள் எத்தகையவரென்றால் நம்முடைய) நல்லுபதேசங்களைப் பார்க்காது அவர்களுடைய கண்களுக்குத் திரையிடப்பட்டுவிட்டன; ஆகவே, அவர்கள் (நல்லுபதேசங்களைச்) செவியுற சக்தியற்று விட்டனர். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௧௦௧)
Tafseer
௧௦௨

اَفَحَسِبَ الَّذِيْنَ كَفَرُوْٓا اَنْ يَّتَّخِذُوْا عِبَادِيْ مِنْ دُوْنِيْٓ اَوْلِيَاۤءَ ۗاِنَّآ اَعْتَدْنَا جَهَنَّمَ لِلْكٰفِرِيْنَ نُزُلًا ١٠٢

afaḥasiba
أَفَحَسِبَ
எண்ணினார்களா?
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوٓا۟
நிராகரித்தார்கள்
an yattakhidhū
أَن يَتَّخِذُوا۟
அவர்கள் எடுத்துக்கொள்ள
ʿibādī
عِبَادِى
என் அடியார்களை
min dūnī
مِن دُونِىٓ
என்னையன்றி
awliyāa
أَوْلِيَآءَۚ
பாதுகாவலர்களாக
innā
إِنَّآ
நிச்சயமாக நாம்
aʿtadnā
أَعْتَدْنَا
தயார்படுத்தினோம்
jahannama
جَهَنَّمَ
நரகத்தை
lil'kāfirīna
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களுக்கு
nuzulan
نُزُلًا
தங்குமிடங்களாக
இந்நிராகரிப்பவர்கள் நம்மை விட்டுவிட்டு நம்முடைய அடியார்களை(த் தங்களுக்கு) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? நிச்சயமாக இந்நிராகரிப்பவர்களுக்கு விருந்தளிப்பதற்காக நரகத்தையேதயார்படுத்தி வைத்திருக்கிறோம். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௧௦௨)
Tafseer
௧௦௩

قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْاَخْسَرِيْنَ اَعْمَالًا ۗ ١٠٣

qul
قُلْ
கூறுவீராக
hal nunabbi-ukum
هَلْ نُنَبِّئُكُم
நாம்/ அறிவிக்கவா?/உங்களுக்கு
bil-akhsarīna
بِٱلْأَخْسَرِينَ
மிகப் பெரிய நஷ்டவாளிகளை
aʿmālan
أَعْمَٰلًا
செயல்களால்
"(பாவமான) காரியத்தில் இவர்களைவிட நஷ்ட மடைந்தவர்களை நாம் உங்களுக்கு அறிவிக்கவா?" என்று நீங்கள் கேளுங்கள். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௧௦௩)
Tafseer
௧௦௪

اَلَّذِيْنَ ضَلَّ سَعْيُهُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُوْنَ اَنَّهُمْ يُحْسِنُوْنَ صُنْعًا ١٠٤

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ḍalla
ضَلَّ
வழிகெட்டது
saʿyuhum
سَعْيُهُمْ
தங்கள் முயற்சிகள்
fī l-ḥayati
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையில்
l-dun'yā
ٱلدُّنْيَا
உலகம்
wahum
وَهُمْ
அவர்களோ
yaḥsabūna
يَحْسَبُونَ
எண்ணுகிறார்கள்
annahum
أَنَّهُمْ
நிச்சயமாக தாங்கள்
yuḥ'sinūna
يُحْسِنُونَ
நல்லதை செய்கிறார்கள்
ṣun'ʿan
صُنْعًا
செயலை
அவர்கள் (யாரென்றால்) இவ்வுலகில் தவறான வழியிலேயே முயற்சி செய்துகொண்டு, தாங்கள் மெய்யாகவே நல்ல காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொள்வார்கள். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௧௦௪)
Tafseer
௧௦௫

اُولٰۤىِٕكَ الَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ وَلِقَاۤىِٕهٖ فَحَبِطَتْ اَعْمَالُهُمْ فَلَا نُقِيْمُ لَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ وَزْنًا ١٠٥

ulāika
أُو۟لَٰٓئِكَ
alladhīna
ٱلَّذِينَ
இவர்கள்தான்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
biāyāti
بِـَٔايَٰتِ
வசனங்களை
rabbihim
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
waliqāihi
وَلِقَآئِهِۦ
இன்னும் அவனுடைய சந்திப்பை
faḥabiṭat
فَحَبِطَتْ
இன்னும் அழிந்தன
aʿmāluhum
أَعْمَٰلُهُمْ
அவர்களுடைய செயல்கள்
falā nuqīmu
فَلَا نُقِيمُ
ஆகவேநிறுத்தமாட்டோம்
lahum
لَهُمْ
அவர்களுக்காக
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
waznan
وَزْنًا
எடைக் கோலை
இத்தகையவர்கள்தாம் தங்கள் இறைவனின் வசனங்களையும் அவனைச் சந்திப்போம் என்பதையும் நிராகரித்து விட்டவர்கள். அவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்துவிட்டன. (நன்மை, தீமையை நிறுக்க) அவர்களுக்காக மறுமை நாளில் எடைக் கோலையும் நாம் நிறுத்தமாட்டோம். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௧௦௫)
Tafseer
௧௦௬

ذٰلِكَ جَزَاۤؤُهُمْ جَهَنَّمُ بِمَا كَفَرُوْا وَاتَّخَذُوْٓا اٰيٰتِيْ وَرُسُلِيْ هُزُوًا ١٠٦

dhālika
ذَٰلِكَ
அது
jazāuhum
جَزَآؤُهُمْ
அவர்களுடைய கூலி
jahannamu bimā kafarū
جَهَنَّمُ بِمَا كَفَرُوا۟
நரகம்/அவர்கள் நிராகரித்த காரணத்தால்
wa-ittakhadhū
وَٱتَّخَذُوٓا۟
இன்னும் எடுத்துக்கொண்டனர்
āyātī
ءَايَٰتِى
நம் வசனங்களை
warusulī
وَرُسُلِى
இன்னும் நம் தூதர்களை
huzuwan
هُزُوًا
பரிகாசமாக
அவர்கள் நம்முடைய வசனங்களையும், நம்முடைய தூதர்களையும் நிராகரித்து பரிகாசமாக எடுத்துக் கொண்டதன் காரணமாக நரகமே அவர்களுக்குக் கூலியாகும். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௧௦௬)
Tafseer
௧௦௭

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ كَانَتْ لَهُمْ جَنّٰتُ الْفِرْدَوْسِ نُزُلًا ۙ ١٠٧

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
kānat
كَانَتْ
இருக்கும்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
jannātu
جَنَّٰتُ
சொர்க்கங்கள்
l-fir'dawsi
ٱلْفِرْدَوْسِ
ஃபிர்தவ்ஸ்
nuzulan
نُزُلًا
தங்குமிடங்களாக
எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ அவர்கள் "ஃபிர்தவ்ஸ்" என்னும் சுவனபதிகளில் விருந்தாளிகளாகத் தங்குவார்கள். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௧௦௭)
Tafseer
௧௦௮

خٰلِدِيْنَ فِيْهَا لَا يَبْغُوْنَ عَنْهَا حِوَلًا ١٠٨

khālidīna
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்களாக
fīhā
فِيهَا
அதில்
lā yabghūna
لَا يَبْغُونَ
விரும்ப மாட்டார்கள்
ʿanhā ḥiwalan
عَنْهَا حِوَلًا
அதிலிருந்து/மாறுவதை
அதில், அவர்கள் என்றென்றும் நிலைத்து விடுவார்கள். அதிலிருந்து வெளிப்பட அவர்கள் விரும்பவே மாட்டார்கள். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௧௦௮)
Tafseer
௧௦௯

قُلْ لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمٰتِ رَبِّيْ لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ اَنْ تَنْفَدَ كَلِمٰتُ رَبِّيْ وَلَوْ جِئْنَا بِمِثْلِهٖ مَدَدًا ١٠٩

qul
قُل
கூறுவீராக
law kāna
لَّوْ كَانَ
மாறினால்
l-baḥru
ٱلْبَحْرُ
கடல்
midādan
مِدَادًا
மையாக
likalimāti
لِّكَلِمَٰتِ
வாக்கியங்களுக்கு
rabbī
رَبِّى
என் இறைவனின்
lanafida
لَنَفِدَ
நிச்சயமாக தீர்ந்துவிடும்
l-baḥru
ٱلْبَحْرُ
கடல்
qabla
قَبْلَ
முன்னதாகவே
an tanfada
أَن تَنفَدَ
தீர்ந்துவிடுவதற்கு
kalimātu
كَلِمَٰتُ
வாக்கியங்கள்
rabbī
رَبِّى
என் இறைவனின்
walaw ji'nā
وَلَوْ جِئْنَا
நாம் வந்தாலும்
bimith'lihi
بِمِثْلِهِۦ
அது போன்றதைக் கொண்டு
madadan
مَدَدًا
அதிகமாக
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: கடல் நீர் அனைத்தும் மையாக இருந்து என் இறைவனின் வாக்கியங்களை எழுத ஆரம்பித்தால், என் இறைவனின் வாக்கியங்கள் முடிவதற்கு முன்னதாகவே இந்தக் கடல் மை அனைத்தும் செலவாகிவிடும். அதைப் போல் இன்னொரு பங்கு (கடலைச்) சேர்த்துக் கொண்டபோதிலும் கூட! ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௧௦௯)
Tafseer
௧௧௦

قُلْ اِنَّمَآ اَنَا۠ بَشَرٌ مِّثْلُكُمْ يُوْحٰٓى اِلَيَّ اَنَّمَآ اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌۚ فَمَنْ كَانَ يَرْجُوْا لِقَاۤءَ رَبِّهٖ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَّلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهٖٓ اَحَدًا ࣖ ١١٠

qul
قُلْ
கூறுவீராக
innamā anā
إِنَّمَآ أَنَا۠
நானெல்லாம்
basharun
بَشَرٌ
ஒரு மனிதன்தான்
mith'lukum
مِّثْلُكُمْ
உங்களைப் போன்ற
yūḥā
يُوحَىٰٓ
வஹீ அறிவிக்கப்படுகிறது
ilayya
إِلَىَّ
எனக்கு
annamā
أَنَّمَآ
எல்லாம்
ilāhukum
إِلَٰهُكُمْ
உங்கள் கடவுள்
ilāhun
إِلَٰهٌ
கடவுள்
wāḥidun
وَٰحِدٌۖ
ஒரே ஒரு
faman
فَمَن
ஆகவே, எவர்
kāna
كَانَ
இருக்கிறார்
yarjū
يَرْجُوا۟
ஆதரவு வைப்பார்
liqāa
لِقَآءَ
சந்திப்பை
rabbihi
رَبِّهِۦ
தன் இறைவனின்
falyaʿmal
فَلْيَعْمَلْ
அவர் செய்யட்டும்
ʿamalan
عَمَلًا
செயலை
ṣāliḥan
صَٰلِحًا
நல்லது
walā yush'rik
وَلَا يُشْرِكْ
இன்னும் இணையாக்க வேண்டாம்
biʿibādati
بِعِبَادَةِ
வணங்குவதில்
rabbihi
رَبِّهِۦٓ
தன் இறைவனை
aḥadan
أَحَدًۢا
ஒருவரை
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நிச்சயமாக உங்களுடைய இறைவன் ஒரே இறைவன்தான் என்று எனக்கு வஹீ மூலம் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆகவே, எவர் தன் இறைவனைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் நற்செயல்களைச் செய்து தன் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது (அவனையே) வணங்கி வருவாராக!" ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௧௧௦)
Tafseer