Skip to content

ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு - Page: 10

Al-Kahf

(al-Kahf)

௯௧

كَذٰلِكَۗ وَقَدْ اَحَطْنَا بِمَا لَدَيْهِ خُبْرًا ٩١

kadhālika
كَذَٰلِكَ
அப்படித்தான்
waqad
وَقَدْ
திட்டமாக
aḥaṭnā
أَحَطْنَا
சூழ்ந்தறிவோம்
bimā ladayhi
بِمَا لَدَيْهِ
அதனிடத்தில் இருந்தவற்றை
khub'ran
خُبْرًا
ஆழமாக
(அவர்களுடைய நிலைமை உண்மையில்) இவ்வாறே இருந்தது. அவரிடமிருந்த எல்லா வசதிகளையும் நாம் நன்கறிவோம். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௯௧)
Tafseer
௯௨

ثُمَّ اَتْبَعَ سَبَبًا ٩٢

thumma
ثُمَّ
பிறகு
atbaʿa
أَتْبَعَ
பின்தொடர்ந்தார்
sababan
سَبَبًا
ஒரு வழியை
பின்னர் அவர் (வேறு) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௯௨)
Tafseer
௯௩

حَتّٰىٓ اِذَا بَلَغَ بَيْنَ السَّدَّيْنِ وَجَدَ مِنْ دُوْنِهِمَا قَوْمًاۙ لَّا يَكَادُوْنَ يَفْقَهُوْنَ قَوْلًا ٩٣

ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā balagha
إِذَا بَلَغَ
அவர் அடைந்தபோது
bayna
بَيْنَ
இடையில்
l-sadayni
ٱلسَّدَّيْنِ
இரு மலைகள்
wajada
وَجَدَ
கண்டார்
min dūnihimā
مِن دُونِهِمَا
அவ்விரண்டிற்கும் முன்னால்
qawman
قَوْمًا
ஒரு சமுதாயத்தை
lā yakādūna yafqahūna
لَّا يَكَادُونَ يَفْقَهُونَ
அவர்கள் எளிதில் விளங்க(முடிய)£து
qawlan
قَوْلًا
பேச்சை
(அங்கிருந்த) இரு மலைகளின் இடைவெளியை அவர் அடைந்தபோது அவற்றிற்கு அப்பாலும் மக்கள் சிலரைக் கண்டார். அவர்களுடைய பேச்சு (எளிதில்) விளங்கக்கூடியதாக இருக்கவில்லை, ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௯௩)
Tafseer
௯௪

قَالُوْا يٰذَا الْقَرْنَيْنِ اِنَّ يَأْجُوْجَ وَمَأْجُوْجَ مُفْسِدُوْنَ فِى الْاَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلٰٓى اَنْ تَجْعَلَ بَيْنَنَا وَبَيْنَهُمْ سَدًّا ٩٤

qālū
قَالُوا۟
அவர்கள் கூறினார்கள்
yādhā l-qarnayni
يَٰذَا ٱلْقَرْنَيْنِ
துல்கர்னைனே!
inna
إِنَّ
நிச்சயமாக
yajūja
يَأْجُوجَ
யஃஜூஜ்
wamajūja
وَمَأْجُوجَ
இன்னும் மஃஜூஜ்
muf'sidūna
مُفْسِدُونَ
விஷமம் செய்கிறார்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
fahal najʿalu
فَهَلْ نَجْعَلُ
நாங்கள் ஆக்கட்டுமா?
laka
لَكَ
உமக்கு
kharjan
خَرْجًا
ஒரு தொகையை
ʿalā an tajʿala
عَلَىٰٓ أَن تَجْعَلَ
நீர்ஏற்படுத்துவதற்காக
baynanā
بَيْنَنَا
எங்களுக்கிடையில்
wabaynahum
وَبَيْنَهُمْ
இன்னும் அவர்களுக்கு இடையில்
saddan
سَدًّا
ஒரு தடையை
அவர்கள் (இவரை நோக்கி ஜாடையாக) "துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜ், மஃஜூஜ் (என்னும் மக்கள்) எங்கள் ஊரில் (வந்து) பெரும் விஷமம் செய்கிறார்கள். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் நீங்கள் ஒரு தடையை ஏற்படுத்தும் பொருட்டு ஒரு தொகையை நாங்கள் சேகரம் செய்யலாமா?" என்று கேட்டார்கள். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௯௪)
Tafseer
௯௫

قَالَ مَا مَكَّنِّيْ فِيْهِ رَبِّيْ خَيْرٌ فَاَعِيْنُوْنِيْ بِقُوَّةٍ اَجْعَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًا ۙ ٩٥

qāla
قَالَ
கூறினார்
mā makkannī
مَا مَكَّنِّى
எது/எனக்கு ஆற்றல் அளித்துள்ளான்
fīhi
فِيهِ
அதில்
rabbī
رَبِّى
என் இறைவன்
khayrun
خَيْرٌ
மிக்க மேலானது
fa-aʿīnūnī
فَأَعِينُونِى
ஆகவே எனக்கு உதவுங்கள்
biquwwatin
بِقُوَّةٍ
வலிமையைக்கொண்டு
ajʿal
أَجْعَلْ
ஏற்படுத்துவேன்
baynakum
بَيْنَكُمْ
உங்களுக்கிடையில்
wabaynahum
وَبَيْنَهُمْ
அவர்களுக்கிடையில்
radman
رَدْمًا
பலமான ஒரு தடுப்பை
அதற்கவர், "என் இறைவன் எனக்குக் கொடுத்திருப்பதே (போதுமானது) மிக்க மேலானது. (உங்கள் பொருள் தேவையில்லை. எனினும், உங்கள்) உழைப்பைக் கொண்டு எனக்கு உதவி செய்யுங்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உறுதியான ஒரு (மதில் சுவற்றைத்) தடுப்பாக எழுப்பிவிடுகிறேன்" என்றும், ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௯௫)
Tafseer
௯௬

اٰتُوْنِيْ زُبَرَ الْحَدِيْدِۗ حَتّٰىٓ اِذَا سَاوٰى بَيْنَ الصَّدَفَيْنِ قَالَ انْفُخُوْا ۗحَتّٰىٓ اِذَا جَعَلَهٗ نَارًاۙ قَالَ اٰتُوْنِيْٓ اُفْرِغْ عَلَيْهِ قِطْرًا ۗ ٩٦

ātūnī
ءَاتُونِى
கொண்டு வாருங்கள் என்னிடம்
zubara
زُبَرَ
பாலங்களை
l-ḥadīdi
ٱلْحَدِيدِۖ
இரும்பு
ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā sāwā
إِذَا سَاوَىٰ
அவை சமமாகினால்
bayna l-ṣadafayni
بَيْنَ ٱلصَّدَفَيْنِ
இரு மலைகளின் உச்சிகளுக்கு
qāla
قَالَ
கூறினார்
unfukhū
ٱنفُخُوا۟ۖ
ஊதுங்கள்
ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā jaʿalahu
إِذَا جَعَلَهُۥ
ஆக்கினால்/அவற்றை
nāran
نَارًا
நெருப்பாக
qāla
قَالَ
கூறினார்
ātūnī
ءَاتُونِىٓ
கொண்டு வாருங்கள் என்னிடம்
uf'righ
أُفْرِغْ
ஊற்றுவேன்
ʿalayhi
عَلَيْهِ
அதன் மீது
qiṭ'ran
قِطْرًا
செம்பை
"நீங்கள் (அதற்குத் தேவையான) இரும்புப் பாளங்களை என்னிடம் கொண்டு வாருங்கள்" என்றும் கூறி, "(அவைகளைக் கொண்டு வந்து இரு மலைகளுக்கிடையில் இருந்த பள்ளத்தை நிறைத்து) இரு மலைகளின் உச்சிக்கு அவை சமமாக உயர்ந்த பின்னர், நெருப்பாக பழுக்கும் வரையில் அதை ஊதுங்கள்" என்றார். (அதன் பின்னர்) "செம்பையும் என்னிடம் கொண்டு வாருங்கள். நான் அதனை உருக்கி அதன் மீது ஊற்றுவேன்" என்றார். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௯௬)
Tafseer
௯௭

فَمَا اسْطَاعُوْٓا اَنْ يَّظْهَرُوْهُ وَمَا اسْتَطَاعُوْا لَهٗ نَقْبًا ٩٧

famā is'ṭāʿū
فَمَا ٱسْطَٰعُوٓا۟
ஆகவே அவர்கள் இயலவில்லை
an yaẓharūhu
أَن يَظْهَرُوهُ
அதன் மீது/அவர்கள் ஏறுவதற்கு
wamā is'taṭāʿū
وَمَا ٱسْتَطَٰعُوا۟
இன்னும் அவர்கள் இயலவில்லை
lahu naqban
لَهُۥ نَقْبًا
அதை/துளையிட
"பின்னர், அதனைக் கடந்து வர (யஃஜூஜ் மஃஜூஜ்களால்) முடியாது. அதனைத் துளைத்துத் துவாரமிடவும் அவர்களால் முடியாது" என்று கூறினார். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௯௭)
Tafseer
௯௮

قَالَ هٰذَا رَحْمَةٌ مِّنْ رَّبِّيْۚ فَاِذَا جَاۤءَ وَعْدُ رَبِّيْ جَعَلَهٗ دَكَّاۤءَۚ وَكَانَ وَعْدُ رَبِّيْ حَقًّا ۗ ٩٨

qāla
قَالَ
கூறினார்
hādhā
هَٰذَا
இது
raḥmatun
رَحْمَةٌ
அருளாகும்
min
مِّن
இருந்து
rabbī
رَّبِّىۖ
என் இறைவனிடம்
fa-idhā jāa
فَإِذَا جَآءَ
வரும்போது
waʿdu
وَعْدُ
வாக்கு
rabbī
رَبِّى
என் இறைவனின்
jaʿalahu
جَعَلَهُۥ
இதை/ஆக்கி விடுவான்
dakkāa
دَكَّآءَۖ
தூள் தூளாக
wakāna
وَكَانَ
இன்னும் இருக்கிறது
waʿdu
وَعْدُ
வாக்கு
rabbī
رَبِّى
என் இறைவனின்
ḥaqqan
حَقًّا
உண்மையாக
(இவ்வாறு தயாரான தடுப்பைக் கண்ட அவர்) "இது என் இறைவனுடைய அருள்தான். என் இறைவனின் வாக்குறுதி(யாகிய யுக முடிவு) வரும் பட்சத்தில் இதனையும் தூள் தூளாக்கிவிடுவான். என் இறைவனின் வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே!" என்று கூறினார். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௯௮)
Tafseer
௯௯

۞ وَتَرَكْنَا بَعْضَهُمْ يَوْمَىِٕذٍ يَّمُوْجُ فِيْ بَعْضٍ وَّنُفِخَ فِى الصُّوْرِ فَجَمَعْنٰهُمْ جَمْعًا ۙ ٩٩

wataraknā
وَتَرَكْنَا
இன்னும் விட்டுவிடுவோம்
baʿḍahum
بَعْضَهُمْ
அவர்களில் சிலரை
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
yamūju
يَمُوجُ
கலந்துவிடும்படி
fī baʿḍin
فِى بَعْضٍۖ
சிலருடன்
wanufikha fī l-ṣūri
وَنُفِخَ فِى ٱلصُّورِ
இன்னும் ஊதப்படும்/சூரில்
fajamaʿnāhum jamʿan
فَجَمَعْنَٰهُمْ جَمْعًا
ஆகவே நிச்சயம் ஒன்று சேர்ப்போம்/அவர்களை
அந்நாள் வருவதற்குள் சிலர் சிலருடன் (கடல்) அலைகளைப் போல் மோதும்படி நாம் விட்டுவிடுவோம். (பின்னர்) சூர் (எக்காளம்) ஊதப்பட்(டு அனைவரும் மடிந்து விட்)டால் பின்னர் (உயிர் கொடுத்து) அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து விடுவோம். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௯௯)
Tafseer
௧௦௦

وَّعَرَضْنَا جَهَنَّمَ يَوْمَىِٕذٍ لِّلْكٰفِرِيْنَ عَرْضًا ۙ ١٠٠

waʿaraḍnā
وَعَرَضْنَا
இன்னும் வெளிப்படுத்துவோம்
jahannama
جَهَنَّمَ
நரகத்தை
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
lil'kāfirīna ʿarḍan
لِّلْكَٰفِرِينَ عَرْضًا
நிராகரிப்பவர்களுக்கு/ வெளிப்படுத்துதல்
நிராகரிப்பவர்களுக்கு அந்நாளில் நரகத்தையே நாம் நிச்சயமாக அவர்கள் முன்பாக்குவோம். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௧௦௦)
Tafseer