اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْٓ اَنْزَلَ عَلٰى عَبْدِهِ الْكِتٰبَ وَلَمْ يَجْعَلْ لَّهٗ عِوَجًا ۜ ١
- al-ḥamdu
- ٱلْحَمْدُ
- புகழ்
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்விற்கே
- alladhī
- ٱلَّذِىٓ
- எப்படிப்பட்டவன்
- anzala
- أَنزَلَ
- இறக்கினான்
- ʿalā
- عَلَىٰ
- மீது
- ʿabdihi
- عَبْدِهِ
- தன் அடியார்
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- வேதத்தை
- walam yajʿal
- وَلَمْ يَجْعَل
- அவன்ஆக்கவில்லை
- lahu
- لَّهُۥ
- அதில்
- ʿiwajā
- عِوَجَاۜ
- ஒரு குறையை
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவன்தான் தன் அடியார் (நபி முஹம்மது) மீது இவ்வேதத்தை இறக்கி வைத்தான். அதில் அவன் எத்தகைய (குறைபாட்டையும்) கோணலையும் வைக்கவில்லை. ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௧)Tafseer
قَيِّمًا لِّيُنْذِرَ بَأْسًا شَدِيْدًا مِّنْ لَّدُنْهُ وَيُبَشِّرَ الْمُؤْمِنِيْنَ الَّذِيْنَ يَعْمَلُوْنَ الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ اَجْرًا حَسَنًاۙ ٢
- qayyiman
- قَيِّمًا
- நீதமிகுந்ததாக, நேர்மை நிறைந்ததாக, பாதுகாக்கக்கூடியதாக
- liyundhira
- لِّيُنذِرَ
- அது எச்சரிப்பதற்காக
- basan
- بَأْسًا
- வேதனையை
- shadīdan
- شَدِيدًا
- கடுமையான(து)
- min ladun'hu
- مِّن لَّدُنْهُ
- அவன் புறத்திலிருந்து
- wayubashira
- وَيُبَشِّرَ
- இன்னும் நற்செய்தி கூறுவதற்காக
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களுக்கு
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yaʿmalūna
- يَعْمَلُونَ
- செய்கின்றார்கள்
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- நன்மைகளை
- anna
- أَنَّ
- நிச்சயமாக
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- ajran
- أَجْرًا
- கூலி
- ḥasanan
- حَسَنًا
- அழகிய(து)
இது உறுதியான அடிப்படையின் மீதுள்ளது. அல்லாஹ் வுடைய கடினமான வேதனையைப் பற்றி (நிராகரிப்பவர் களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், எவர்கள் இதனை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு (அழகான) நற்கூலி(யாகிய சுவனபதி) நிச்சயமாக உண்டென்று நற்செய்தி கூறுவதற்காகவும் (இதனை இறக்கி வைத்தான்.) ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௨)Tafseer
مَّاكِثِيْنَ فِيْهِ اَبَدًاۙ ٣
- mākithīna
- مَّٰكِثِينَ
- தங்கி இருப்பார்கள்
- fīhi
- فِيهِ
- அதில்
- abadan
- أَبَدًا
- எப்போதும்
(அச்சுவனபதியில்) அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௩)Tafseer
وَّيُنْذِرَ الَّذِيْنَ قَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًاۖ ٤
- wayundhira
- وَيُنذِرَ
- இன்னும் அது எச்சரிப்பதற்காக
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- qālū
- قَالُوا۟
- கூறினர்
- ittakhadha
- ٱتَّخَذَ
- எடுத்துக் கொண்டான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- waladan
- وَلَدًا
- ஒரு குழந்தையை, சந்ததியை
அன்றி, அல்லாஹ் சந்ததி எடுத்துக்கொண்டான் என்று கூறுபவர்களையும் இது கண்டித்து எச்சரிக்கை செய்கிறது. ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௪)Tafseer
مَّا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ وَّلَا لِاٰبَاۤىِٕهِمْۗ كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ اَفْوَاهِهِمْۗ اِنْ يَّقُوْلُوْنَ اِلَّا كَذِبًا ٥
- mā lahum
- مَّا لَهُم
- அவர்களுக்கு இல்லை
- bihi
- بِهِۦ
- அவனைப் பற்றி
- min ʿil'min
- مِنْ عِلْمٍ
- எந்த அறிவும்
- walā
- وَلَا
- இன்னும் இல்லை
- liābāihim
- لِءَابَآئِهِمْۚ
- அவர்களுடைய மூதாதைகளுக்கு
- kaburat
- كَبُرَتْ
- பெரும் பாவமாகி விட்டது
- kalimatan
- كَلِمَةً
- சொல்
- takhruju
- تَخْرُجُ
- வெளிப்படும்
- min afwāhihim
- مِنْ أَفْوَٰهِهِمْۚ
- வாய்களிலிருந்து அவர்களின்
- in yaqūlūna
- إِن يَقُولُونَ
- அவர்கள் கூறுவதில்லை
- illā kadhiban
- إِلَّا كَذِبًا
- தவிர/பொய்யை
அவர்களுக்கும் சரி; அவர்களுடைய மூதாதைகளுக்கும் சரி. இதற்குரிய ஆதாரம் ஒரு சிறிதும் இல்லை. இவர்கள் வாயிலிருந்து புறப்படும் இந்த வாக்கியம் மாபெரும் (பாவமான) வாக்கியமாகும்; பொய்யையேயன்றி (இவ்வாறு) இவர்கள் கூறவில்லை. ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௫)Tafseer
فَلَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ عَلٰٓى اٰثَارِهِمْ اِنْ لَّمْ يُؤْمِنُوْا بِهٰذَا الْحَدِيْثِ اَسَفًا ٦
- falaʿallaka bākhiʿun
- فَلَعَلَّكَ بَٰخِعٌ
- நீர் அழித்துக் கொள்வீரோ
- nafsaka
- نَّفْسَكَ
- உயிரை/உம்
- ʿalā
- عَلَىٰٓ
- மீதே
- āthārihim
- ءَاثَٰرِهِمْ
- சுவடுகள் அவர்களுடைய
- in lam yu'minū
- إِن لَّمْ يُؤْمِنُوا۟
- அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை எனில்
- bihādhā l-ḥadīthi
- بِهَٰذَا ٱلْحَدِيثِ
- இந்த குர்ஆனை
- asafan
- أَسَفًا
- துக்கப்பட்டு
(நபியே!) இவ்வேதத்தை அவர்கள் நம்பிக்கை கொள்ளா விட்டால் அதற்காக நீங்கள் துக்கித்து அவர்களின் அடிச்சுவடுகள் மீது உங்களது உயிரை அழித்துக் கொள்வீரோ! (அதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள்.) ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௬)Tafseer
اِنَّا جَعَلْنَا مَا عَلَى الْاَرْضِ زِيْنَةً لَّهَا لِنَبْلُوَهُمْ اَيُّهُمْ اَحْسَنُ عَمَلًا ٧
- innā
- إِنَّا
- நிச்சயமாக நாம்
- jaʿalnā
- جَعَلْنَا
- ஆக்கினோம்
- mā ʿalā l-arḍi
- مَا عَلَى ٱلْأَرْضِ
- எதை/மீது/பூமி
- zīnatan lahā
- زِينَةً لَّهَا
- அலங்காரமாக/அதற்கு
- linabluwahum
- لِنَبْلُوَهُمْ
- நாம் சோதிப்பதற்காக/ அவர்களை
- ayyuhum
- أَيُّهُمْ
- யார்/அவர்களில்
- aḥsanu
- أَحْسَنُ
- மிக அழகியவர்
- ʿamalan
- عَمَلًا
- செயலால்
பூமியிலுள்ளவற்றை நாம் அதற்கு அலங்காரமாக்கி வைத்தது அவர்களில் எவர்கள் நல்ல நடத்தையுள்ளவர்கள் என்பதை நிச்சயமாக நாம் சோதிப்பதற்காகவே. ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௭)Tafseer
وَاِنَّا لَجَاعِلُوْنَ مَا عَلَيْهَا صَعِيْدًا جُرُزًاۗ ٨
- wa-innā lajāʿilūna
- وَإِنَّا لَجَٰعِلُونَ
- நிச்சயமாக நாம்/ ஆக்கி விடுவோம்
- mā ʿalayhā
- مَا عَلَيْهَا
- எதை/அதன் மீது
- ṣaʿīdan
- صَعِيدًا
- சமமான தரையாக
- juruzan
- جُرُزًا
- செடி கொடியற்ற பூமி
(ஒரு நாளில்) நிச்சயமாக நாம் பூமியில் (அலங்காரமாக) உள்ள இவை அனைத்தையும் (அழித்து) வெட்ட வெளியாக்கி விடுவோம். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௮)Tafseer
اَمْ حَسِبْتَ اَنَّ اَصْحٰبَ الْكَهْفِ وَالرَّقِيْمِ كَانُوْا مِنْ اٰيٰتِنَا عَجَبًا ٩
- am ḥasib'ta
- أَمْ حَسِبْتَ
- எண்ணுகிறீரா?
- anna
- أَنَّ
- நிச்சயமாக
- aṣḥāba l-kahfi
- أَصْحَٰبَ ٱلْكَهْفِ
- குகை வாசிகள்
- wal-raqīmi
- وَٱلرَّقِيمِ
- இன்னும் கற்பலகை
- kānū
- كَانُوا۟
- இருக்கின்றனர்
- min āyātinā
- مِنْ ءَايَٰتِنَا
- நம் அத்தாட்சிகளில்
- ʿajaban
- عَجَبًا
- அற்புதமாக
(நபியே! "அஸ்ஹாபுல் கஹ்ஃப்" என்னும் குகையுடையவர் களைப் பற்றி யூதர்கள் உங்களிடம் கேட்கின்றனர்.) அந்தக் குகையுடையவர்களும் சாசனத்தை உடையவர்களும் நிச்சயமாக நம்முடைய அத்தாட்சிகளில் ஆச்சரியமானவர்களாக இருந்தனர் என்று எண்ணுகிறீர்களோ! (அவர்களின் சரித்திரத்தை உங்களுக்கு நாம் கூறுகிறோம்.) ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௯)Tafseer
اِذْ اَوَى الْفِتْيَةُ اِلَى الْكَهْفِ فَقَالُوْا رَبَّنَآ اٰتِنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً وَّهَيِّئْ لَنَا مِنْ اَمْرِنَا رَشَدًا ١٠
- idh awā
- إِذْ أَوَى
- சமயம்/ ஒதுங்கினார்(கள்)
- l-fit'yatu
- ٱلْفِتْيَةُ
- அவ்வாலிபர்கள்
- ilā l-kahfi
- إِلَى ٱلْكَهْفِ
- குகைக்கு
- faqālū
- فَقَالُوا۟
- கூறினர்
- rabbanā
- رَبَّنَآ
- எங்கள் இறைவா
- ātinā
- ءَاتِنَا
- எங்களுக்குத் தா
- min ladunka
- مِن لَّدُنكَ
- உன் புறத்திலிருந்து
- raḥmatan
- رَحْمَةً
- அருளை
- wahayyi
- وَهَيِّئْ
- இன்னும் ஏற்படுத்து
- lanā
- لَنَا
- எங்களுக்கு
- min amrinā
- مِنْ أَمْرِنَا
- எங்கள் காரியத்தில்
- rashadan
- رَشَدًا
- நல்வழியை
(அவர்கள்) ஒரு சில வாலிபர்கள் அவர்கள் குகையினுள் சென்றபொழுது "எங்கள் இறைவனே! உன் அருளை எங்களுக்கு அளிப்பாயாக! நீ எங்களுக்கு நேரான வழியையும் சுலபமாக்கி விடுவாயாக!" என்று பிரார்த்தனை செய்தார்கள். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௧௦)Tafseer