Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௯௮

Qur'an Surah Al-Isra Verse 98

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௯௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذٰلِكَ جَزَاۤؤُهُمْ بِاَنَّهُمْ كَفَرُوْا بِاٰيٰتِنَا وَقَالُوْٓا ءَاِذَا كُنَّا عِظَامًا وَّرُفَاتًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ خَلْقًا جَدِيْدًا (الإسراء : ١٧)

dhālika
ذَٰلِكَ
That
இது
jazāuhum
جَزَآؤُهُم
(is) their recompense
கூலி, தண்டனை/அவர்களின்
bi-annahum
بِأَنَّهُمْ
because they
காரணம்/நிச்சயமாக/அவர்கள்
kafarū
كَفَرُوا۟
disbelieved
நிராகரித்தனர்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
in Our Verses
நம் வசனங்களை
waqālū
وَقَالُوٓا۟
and said
இன்னும் கூறினர்
a-idhā kunnā
أَءِذَا كُنَّا
"When we are
நாங்கள் ஆகிவிட்டால்?
ʿiẓāman
عِظَٰمًا
bones
எலும்புகளாக
warufātan
وَرُفَٰتًا
and crumbled particles
இன்னும் மக்கியவர்களாக
a-innā
أَءِنَّا
will we
?/நிச்சயமாக நாம்
lamabʿūthūna
لَمَبْعُوثُونَ
surely (be) resurrected
எழுப்பப்படுவோம்
khalqan
خَلْقًا
(as) a creation
படைப்பாக
jadīdan
جَدِيدًا
new"
புதியது

Transliteration:

Zaalika jazaa'uhum biannahum kafaroo bi aayaatinaa wa qaalooo 'a izaa kunnaa 'izaamanw wa rufaatan'a innaa lamaboosoona khalqan jadeedaa (QS. al-ʾIsrāʾ:98)

English Sahih International:

That is their recompense because they disbelieved in Our verses and said, "When we are bones and crumbled particles, will we [truly] be resurrected [in] a new creation?" (QS. Al-Isra, Ayah ௯௮)

Abdul Hameed Baqavi:

அவர்கள், நம்முடைய வசனங்களை நிராகரித்து விட்டதுடன் "நாம் (மரணித்து) எலும்பாகவும், உக்கி மண்ணாகவும் போனதன் பின்னர் மெய்யாகவே நாம் புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா?" என்று கூறிக் கொண்டிருந்ததும்தான் இத்தகைய (கொடிய) தண்டனையை அவர்கள் அடைவதற்குரிய காரணமாகும். (பனீ இஸ்ராயீல், வசனம் ௯௮)

Jan Trust Foundation

அவர்கள் தம் வசனங்களை நிராகரித்து, “நாம் (மரித்து) எலும்புகளாகவும், உக்கி மண்ணோடு மண்ணாகவும் ஆகிவிடுவோமாயின், (மீண்டும்) புதியதொரு படைப்பாக எழுப்பபடுவோமா?” என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்களே அதற்காக அவர்களுடைய கூலி இது தான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இதுதான் அவர்களின் தண்டனை. காரணம், நிச்சயமாக அவர்கள் நம் வசனங்களை நிராகரித்தனர். “நாங்கள் (மரணித்து) எலும்புகளாகவும், மக்கியவர்களாக (மண்ணோடு மண்ணாக) ஆகிவிட்டால் நிச்சயமாக நாம் புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா?” என்று கூறினர்.