Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௯௭

Qur'an Surah Al-Isra Verse 97

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௯௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَنْ يَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِۚ وَمَنْ يُّضْلِلْ فَلَنْ تَجِدَ لَهُمْ اَوْلِيَاۤءَ مِنْ دُوْنِهٖۗ وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيٰمَةِ عَلٰى وُجُوْهِهِمْ عُمْيًا وَّبُكْمًا وَّصُمًّاۗ مَأْوٰىهُمْ جَهَنَّمُۗ كُلَّمَا خَبَتْ زِدْنٰهُمْ سَعِيْرًا (الإسراء : ١٧)

waman
وَمَن
And whoever
எவரை
yahdi
يَهْدِ
Allah guides
நேர்வழி செலுத்துவான்
l-lahu
ٱللَّهُ
Allah guides
அல்லாஹ்
fahuwa
فَهُوَ
then he (is)
அவர்தான்
l-muh'tadi
ٱلْمُهْتَدِۖ
the guided one
நேர்வழி பெற்றவர்
waman
وَمَن
and whoever
இன்னும் எவரை
yuḍ'lil
يُضْلِلْ
He lets go astray
வழிகெடுப்பான்
falan tajida
فَلَن تَجِدَ
then never you will find
அறவே காணமாட்டீர்
lahum
لَهُمْ
for them
அவர்களுக்கு
awliyāa
أَوْلِيَآءَ
protectors
உதவியாளர்களை
min dūnihi
مِن دُونِهِۦۖ
besides Him besides Him
அவனையன்றி
wanaḥshuruhum
وَنَحْشُرُهُمْ
And We will gather them
இன்னும் ஒன்றுசேர்ப்போம் அவர்களை
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
(on) the Day (of) the Resurrection
மறுமை நாளில்
ʿalā wujūhihim
عَلَىٰ وُجُوهِهِمْ
on their faces
தங்கள் முகங்கள் மீது
ʿum'yan
عُمْيًا
blind
குருடர்களாக
wabuk'man
وَبُكْمًا
and dumb
இன்னும் ஊமையர்களாக
waṣumman
وَصُمًّاۖ
and deaf
இன்னும் செவிடர்களாக
mawāhum
مَّأْوَىٰهُمْ
Their abode
அவர்களுடைய தங்குமிடம்
jahannamu
جَهَنَّمُۖ
(is) Hell
நரகம்தான்
kullamā khabat
كُلَّمَا خَبَتْ
every time it subsides
அது அனல் தணியும் போதெல்லாம்
zid'nāhum
زِدْنَٰهُمْ
We (will) increase (for) them
அதிகப்படுத்துவோம்/அவர்களுக்கு
saʿīran
سَعِيرًا
the blazing fire
கொழுந்து விட்டெரியும் நெருப்பை

Transliteration:

Wa mai yahdil laahu fahuwal muhtad; wa mai yudlil falan tajida lahum awliyaaa'a min doonih; wa nahshuruhum Yawmal Qiyaamati 'alaa wujoohihim umyanw wa bukmanw wa summaa; maa waahum Jahannamu kullamaa khabat zidnaahum sa'eeraa (QS. al-ʾIsrāʾ:97)

English Sahih International:

And whoever Allah guides – he is the [rightly] guided; and whoever He sends astray – you will never find for them protectors besides Him, and We will gather them on the Day of Resurrection [fallen] on their faces – blind, dumb and deaf. Their refuge is Hell; every time it subsides, We increase [for] them blazing fire. (QS. Al-Isra, Ayah ௯௭)

Abdul Hameed Baqavi:

எவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவர்கள்தான் நேரான வழியை அடைவார்கள். எவர்களை (அல்லாஹ்) தவறான வழியில் விட்டு விடுகிறானோ அத்தகையவர் களுக்கு அவனையன்றி உதவி செய்பவர்களை நீங்கள் காண மாட்டீர்கள். அன்றி, மறுமைநாளில் அவர்களைக் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர்களாகவும் (ஆக்கி) அவர்கள் தங்கள் முகத்தால் நடந்து வரும்படி (செய்து) அவர்களை ஒன்று சேர்ப்போம். அவர்கள் தங்குமிடம் நரகம்தான். (அதன்) அனல் தணியும் போதெல்லாம் மென்மேலும் கொழுந்து விட்டெரியும்படி செய்து கொண்டே இருப்போம். (பனீ இஸ்ராயீல், வசனம் ௯௭)

Jan Trust Foundation

அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ, அவர் தாம் நேர்வழிப்பெற்றவர் ஆவார்; இன்னும் அவன் யாரை வழிகேட்டில் விடுகிறானோ அ(த்தகைய)வருக்கு உதவி செய்வோர் அவனையன்றி வேறு எவரையும் நீர் காணமாட்டீர்; மேலும் அவர்களைக் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் தம் முகங்களில் குப்புற வரும்படி செய்து கியாம நாளில் ஒன்று சேர்ப்போம்; இன்னும் அவர்கள் ஒதுங்கும் இடம் நரகமேயாகும்; (நரக நெருப்பு). அணையும் போதெல்லாம் நாம் அவர்களுக்கு நெருப்பை அதிகமாக்குவோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் எவரை நேர்வழி செலுத்துவானோ அவர்தான் நேர்வழி பெற்றவர். (அல்லாஹ்) எவரை வழி கெடுப்பானோ அவர்களுக்கு அவனையன்றி உதவியாளர்களை நீர் அறவே காணமாட்டீர். மறுமைநாளில் அவர்களைக் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர்களாகவும் (ஆக்கி அவர்கள்) தங்கள் முகங்கள் மீது (நடந்து வரும்படி செய்து) ஒன்று சேர்ப்போம். அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். அது அனல் தணியும் போதெல்லாம் அவர்களுக்கு கொழுந்து விட்டெரியும் நெருப்பை அதிகப்படுத்துவோம்.