Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௯௬

Qur'an Surah Al-Isra Verse 96

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௯௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ كَفٰى بِاللّٰهِ شَهِيْدًاۢ بَيْنِيْ وَبَيْنَكُمْۗ اِنَّهٗ كَانَ بِعِبَادِهٖ خَبِيْرًاۢ بَصِيْرًا (الإسراء : ١٧)

qul
قُلْ
Say
கூறுவீராக
kafā
كَفَىٰ
"Sufficient is
போதுமாகி விட்டான்
bil-lahi
بِٱللَّهِ
Allah
அல்லாஹ்வே
shahīdan
شَهِيدًۢا
(as) a witness
சாட்சியாளனாக
baynī
بَيْنِى
between me
எனக்கிடையில்
wabaynakum
وَبَيْنَكُمْۚ
and between you
இன்னும் உங்களுக்கிடையில்
innahu
إِنَّهُۥ
Indeed He
நிச்சயமாக அவன்
kāna
كَانَ
is
இருக்கின்றான்
biʿibādihi
بِعِبَادِهِۦ
of His slaves
தன் அடியார்களை
khabīran
خَبِيرًۢا
All-Aware
ஆழ்ந்தறிந்தவனாக
baṣīran
بَصِيرًا
All-Seer"
உற்று நோக்கினவனாக

Transliteration:

Qul kafaa billaahi shaheedam bainee wa bainakum; innahoo kaana bi'ibaadihee Khabeeram Baseeraa (QS. al-ʾIsrāʾ:96)

English Sahih International:

Say, "Sufficient is Allah as Witness between me and you. Indeed He is ever, concerning His servants, Aware and Seeing." (QS. Al-Isra, Ayah ௯௬)

Abdul Hameed Baqavi:

(பின்னும்) நீங்கள் கூறுங்கள்: "எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ் ஒருவனே போதுமான சாட்சியாக இருக்கின்றான். ஏனென்றால், நிச்சயமாக அவன்தான் தன் அடியார்களை நன்கறிந்தவனும், உற்றுநோக்குபவனுமாக இருக்கின்றான். (பனீ இஸ்ராயீல், வசனம் ௯௬)

Jan Trust Foundation

“எனக்கிடையிலும், உங்களுக்கிடையிலும் சாட்சியாக இருக்க அல்லாஹ்வே போதுமானவன்; நிச்சயமாக அவன் தன் அடியார்களைப் பற்றி நன்கு அறிந்தவனாகவும், (யாவற்றையும்) பார்ப்பவனாகவும் இருக்கின்றான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே) கூறுவீராக! “எனக்கிடையிலும் உங்களுக்கிடையிலும் சாட்சியாளனாக அல்லாஹ்வே போதுமாகி விட்டான். நிச்சயமாக அவன் தன் அடியார்களை ஆழ்ந்தறிந்தவனாக உற்றுநோக்கினவனாக இருக்கின்றான்.