Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௯௫

Qur'an Surah Al-Isra Verse 95

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௯௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ لَّوْ كَانَ فِى الْاَرْضِ مَلٰۤىِٕكَةٌ يَّمْشُوْنَ مُطْمَىِٕنِّيْنَ لَنَزَّلْنَا عَلَيْهِمْ مِّنَ السَّمَاۤءِ مَلَكًا رَّسُوْلًا (الإسراء : ١٧)

qul
قُل
Say
கூறுவீராக
law kāna
لَّوْ كَانَ
"If (there) were
இருந்திருந்தால்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியில்
malāikatun
مَلَٰٓئِكَةٌ
Angels
வானவர்கள்
yamshūna
يَمْشُونَ
walking
நடக்கின்றனர்
muṭ'ma-innīna
مُطْمَئِنِّينَ
securely
நிம்மதியானவர்களாக
lanazzalnā
لَنَزَّلْنَا
surely We (would) have sent down
இறக்கியிருப்போம்
ʿalayhim
عَلَيْهِم
to them
அவர்களிடம்
mina
مِّنَ
from
இருந்து
l-samāi
ٱلسَّمَآءِ
the heaven
வானம்
malakan
مَلَكًا
an Angel
வானவரை
rasūlan
رَّسُولًا
(as) a Messenger"
ஒரு தூதராக

Transliteration:

Qul law kaana fil ardi malaaa 'ikatuny yamshoona mutma'inneena lanazzalnaa 'alaihim minas samaaa'i malakar Rasoolaa (QS. al-ʾIsrāʾ:95)

English Sahih International:

Say, "If there were upon the earth angels walking securely, We would have sent down to them from the heaven an angel [as a] messenger." (QS. Al-Isra, Ayah ௯௫)

Abdul Hameed Baqavi:

(அதற்கு) நீங்கள் கூறுங்கள்: பூமியில் (மனிதர்களுக்குப் பதிலாக) மலக்குகளே வசித்திருந்து, அதில் அவர்கள் நிம்மதியாக நடந்து திரிந்து கொண்டுமிருந்தால் நாமும் வானத்திலிருந்து (அவர்கள் இனத்தைச் சார்ந்த) ஒரு மலக்கையே (நம்முடைய) தூதராக அவர்களிடம் அனுப்பியிருப்போம். (ஆகவே, மனிதர்களாகிய அவர்களிடம் மனிதராகிய உங்களை நம்முடைய தூதராக அனுப்பியதில் தவறொன்றுமில்லை.) (பனீ இஸ்ராயீல், வசனம் ௯௫)

Jan Trust Foundation

(நபியே!) நீர் கூறும்| “பூமியில் மலக்குகளே வசித்து (இருந்து அதில்) அவர்களே நிம்மதியாக நடமாடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக நாம் அவர்களிடம் ஒரு மலக்கையே வானத்திலிருந்து (நம்) தூதராக இறக்கியிருப்போம்” என்று.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே) கூறுவீராக! பூமியில் நிம்மதியானவர்களாக நடக்கின்ற (வாழுகின்ற) வானவர்கள் இருந்திருந்தால் வானத்திலிருந்து வானவரையே ஒரு தூதராக அவர்களிடம் இறக்கியிருப்போம்.