Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௯௩

Qur'an Surah Al-Isra Verse 93

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௯௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَوْ يَكُوْنَ لَكَ بَيْتٌ مِّنْ زُخْرُفٍ اَوْ تَرْقٰى فِى السَّمَاۤءِ ۗوَلَنْ نُّؤْمِنَ لِرُقِيِّكَ حَتّٰى تُنَزِّلَ عَلَيْنَا كِتٰبًا نَّقْرَؤُهٗۗ قُلْ سُبْحَانَ رَبِّيْ هَلْ كُنْتُ اِلَّا بَشَرًا رَّسُوْلًا ࣖ (الإسراء : ١٧)

aw
أَوْ
Or
அல்லது
yakūna
يَكُونَ
is
இருக்கும்
laka
لَكَ
for you
உமக்கு
baytun
بَيْتٌ
a house
ஒரு வீடு
min zukh'rufin
مِّن زُخْرُفٍ
of ornament
தங்கத்தில்
aw
أَوْ
or
அல்லது
tarqā
تَرْقَىٰ
you ascend
நீர் ஏறுவாய்
fī l-samāi
فِى ٱلسَّمَآءِ
into the sky
வானத்தில்
walan nu'mina
وَلَن نُّؤْمِنَ
And never we will believe
அறவே நம்பிக்கை கொள்ள மாட்டோம்
liruqiyyika
لِرُقِيِّكَ
in your ascension
உமது ஏறுதலுக்காக
ḥattā
حَتَّىٰ
until
வரை
tunazzila
تُنَزِّلَ
you bring down
இறக்கி வைப்பீர்
ʿalaynā
عَلَيْنَا
to us
எங்கள் மீது
kitāban
كِتَٰبًا
a book
ஒரு வேதத்தை
naqra-uhu
نَّقْرَؤُهُۥۗ
we could read it"
அதைப் படிக்கின்றோம்
qul
قُلْ
Say
கூறுவீராக
sub'ḥāna
سُبْحَانَ
"Glorified (is)
மிகப்பரிசுத்தமானவன்
rabbī
رَبِّى
my Lord!
என் இறைவன்
hal
هَلْ
"What
?
kuntu
كُنتُ
am I
இருக்கின்றேன்
illā
إِلَّا
but
தவிர
basharan
بَشَرًا
a human
ஒரு மனிதராக
rasūlan
رَّسُولًا
a Messenger"
தூதரான

Transliteration:

Aw yakoona laka baitum min zukhrufin aw tarqaa fis samaaa'i wa lan nu'mina liruqiyyika hatta tunazzila 'alainaa kitaaban naqra'uh; qul Subhaana Rabbee hal kuntu illaa basharar Rasoolaa (QS. al-ʾIsrāʾ:93)

English Sahih International:

Or you have a house of ornament [i.e., gold] or you ascend into the sky. And [even then], we will not believe in your ascension until you bring down to us a book we may read." Say, "Exalted is my Lord! Was I ever but a human messenger?" (QS. Al-Isra, Ayah ௯௩)

Abdul Hameed Baqavi:

"அல்லது (மிக்க அழகான) தங்கத்தினாலாகிய ஒரு மாளிகை உங்களுக்கு இருந்தாலன்றி (நாம் நம்பிக்கை கொள்ள மாட்டோம்.) அல்லது நீங்கள் வானத்தின் மீது ஏறியபோதிலும் நாம் ஓதக்கூடிய ஒரு வேதத்தை (நேராக) நம்மீது நீங்கள் இறக்கிவைக்காத வரையில் நீங்கள் வானத்தில் ஏறியதையும் நம்பமாட்டோம்" என்றும் கூறுகின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "என் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். நான் (உங்களைப் போன்ற) ஒரு மனிதன்தான். எனினும், நான் (அவனால் அனுப்பப்பட்ட) ஒரு தூதர் என்பதைத் தவிர வேறெதுவும் உண்டா?" (பனீ இஸ்ராயீல், வசனம் ௯௩)

Jan Trust Foundation

“அல்லது ஒரு தங்கமாளிகை உமக்கு இருந்தாலன்றி (உம் மீது நம்பிக்கை கொள்ளோம்); அல்லது வானத்தின் மீது நீர் ஏறிச் செல்ல வேண்டும், (அங்கிருந்து) எங்களுக்காக நாங்கள் படிக்கக் கூடிய ஒரு (வேத) நூலை நீர் கொண்டு வந்து தரும் வரையில், நீர் (வானத்தில்) ஏறியதையும் நாங்கள் நம்ப மாட்டோம்” என்று கூறுகின்றனர். “என் இறைவன் மிகத் தூயவன், நான் (இறைவனுடைய) தூதனாகிய ஒரு மனிதனே தவிர வேறெதுவுமாக இருக்கின்றேனா?” என்று (நபியே! நீர் பதில்) கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“அல்லது தங்கத்தில் ஒரு வீடு உமக்கு இருக்கும் (வரை) அல்லது வானத்தில் நீர் ஏறும் (வரை உம்மை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்), (அப்படி நீர் ஏறிவிட்டாலும்) உமது ஏறுதலுக்காக (மட்டும்) நாம் அறவே நம்பிக்கை கொள்ள மாட்டோம், நாங்கள் படிக்கின்ற ஒரு வேதத்தை எங்கள் மீது நீர் இறக்கி வைக்கும் வரை. (நபியே) கூறுவீராக! “என் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். நான் ஒரு தூதரான மனிதராகவே தவிர (இறைத் தன்மை உடையவனாக) இருக்கின்றேனா? (அப்படி இல்லையே!)”