Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௮௬

Qur'an Surah Al-Isra Verse 86

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௮௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَىِٕنْ شِئْنَا لَنَذْهَبَنَّ بِالَّذِيْٓ اَوْحَيْنَآ اِلَيْكَ ثُمَّ لَا تَجِدُ لَكَ بِهٖ عَلَيْنَا وَكِيْلًاۙ؉؉ (الإسراء : ١٧)

wala-in
وَلَئِن
And if
shi'nā
شِئْنَا
We willed
நாம் நாடினால்
lanadhhabanna
لَنَذْهَبَنَّ
We (would) have surely taken away
நிச்சயம் போக்கி விடுவோம்
bi-alladhī
بِٱلَّذِىٓ
that which
எவற்றை
awḥaynā
أَوْحَيْنَآ
We have revealed
வஹீ அறிவித்தோம்
ilayka
إِلَيْكَ
to you
உமக்கு
thumma
ثُمَّ
Then
பிறகு
lā tajidu
لَا تَجِدُ
not you would find
காணமாட்டீர்
laka
لَكَ
for you
உமக்கு
bihi
بِهِۦ
concerning it
அதற்கு
ʿalaynā
عَلَيْنَا
against Us
நமக்கு எதிராக
wakīlan
وَكِيلًا
any advocate
ஒரு பொறுப்பாளரை

Transliteration:

Wa la'in shi'naa lanaz habanna billazeee awhainaaa ilaika summa laa tajidu laka bihee 'alainaa wakeelaa (QS. al-ʾIsrāʾ:86)

English Sahih International:

And if We willed, We could surely do away with that which We revealed to you. Then you would not find for yourself concerning it an advocate against Us. (QS. Al-Isra, Ayah ௮௬)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நாம் விரும்பினால் வஹீ மூலம் உங்களுக்கு அறிவித்த இந்தக் குர்ஆனையே (உங்களிடமிருந்து) போக்கி விடுவோம். பின்னர், (இதனை உங்களிடம் கொண்டு வர) நமக்கு விரோதமாக உங்களுக்கு உதவி செய்ய எவரையும் நீங்கள் காணமாட்டீர்கள். (பனீ இஸ்ராயீல், வசனம் ௮௬)

Jan Trust Foundation

(நபியே!) நாம் நாடினால் உமக்கு நாம் வஹீயாக நாம் அறிவித்ததை (குர்ஆனை) போக்கிவிடுவோம்; பின்னர், நமக்கெதிராக உமக்குப் பொறுப்பேற்கக் கூடிய எவரையும் நீர் காணமாட்டீர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) நாம் நாடினால், உமக்கு வஹ்யி அறிவித்தவற்றை நிச்சயம் போக்கி விடுவோம். பிறகு, நமக்கு எதிராக அதற்கு (உதவும்) ஒரு பொறுப்பாளரை (-பாதுகாவலரை) உமக்கு காண மாட்டீர்.