Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௮௫

Qur'an Surah Al-Isra Verse 85

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௮௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَسْـَٔلُوْنَكَ عَنِ الرُّوْحِۗ قُلِ الرُّوْحُ مِنْ اَمْرِ رَبِّيْ وَمَآ اُوْتِيْتُمْ مِّنَ الْعِلْمِ اِلَّا قَلِيْلًا (الإسراء : ١٧)

wayasalūnaka
وَيَسْـَٔلُونَكَ
And they ask you
கேட்கிறார்கள்/உம்மிடம்
ʿani
عَنِ
concerning
பற்றி
l-rūḥi
ٱلرُّوحِۖ
the soul
ரூஹ்
quli
قُلِ
Say
கூறுவீராக
l-rūḥu
ٱلرُّوحُ
"The soul
ரூஹ்
min amri
مِنْ أَمْرِ
(is) of (the) affair
கட்டளையினால்
rabbī
رَبِّى
(of) my Lord
என் இறைவன்
wamā ūtītum
وَمَآ أُوتِيتُم
And not you have been given
நீங்கள் கொடுக்கப்படவில்லை
mina l-ʿil'mi
مِّنَ ٱلْعِلْمِ
of the knowledge
கல்வியில்
illā qalīlan
إِلَّا قَلِيلًا
except a little"
தவிர/சொற்பமே

Transliteration:

Wa yas'aloonaka 'anirrooh; qulir roohu min amri rabbee wa maaa ooteetum minal 'ilmi illaa qaleelaa (QS. al-ʾIsrāʾ:85)

English Sahih International:

And they ask you, [O Muhammad], about the soul. Say, "The soul is of the affair [i.e., concern] of my Lord. And you [i.e., mankind] have not been given of knowledge except a little." (QS. Al-Isra, Ayah ௮௫)

Abdul Hameed Baqavi:

(நபியே!) ரூஹைப் பற்றி (யூதர்களாகிய) அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள். அதற்கு நீங்கள் "அது எனது இறைவனின் கட்டளையால் ஏற்பட்டது. (அதைப் பற்றி) வெகு சொற்ப ஞானமேயன்றி உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. (ஆதலால், அதன் நுட்பங்களை நீங்கள் அறிந்துகொள்ள முடியாது)" என்று கூறுங்கள். (பனீ இஸ்ராயீல், வசனம் ௮௫)

Jan Trust Foundation

(நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) ரூஹ் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். “ரூஹ் என் இறைவனின் கட்டளையினால் ஏற்பட்டது. கல்வியில் சொற்பமே தவிர நீங்கள் (அதிகம்) கொடுக்கப்படவில்லை.” என்று கூறுவீராக!