குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௮௩
Qur'an Surah Al-Isra Verse 83
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௮௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذَآ اَنْعَمْنَا عَلَى الْاِنْسَانِ اَعْرَضَ وَنَاٰ بِجَانِبِهٖۚ وَاِذَا مَسَّهُ الشَّرُّ كَانَ يَـُٔوْسًا (الإسراء : ١٧)
- wa-idhā anʿamnā
- وَإِذَآ أَنْعَمْنَا
- And when We bestow favor
- நாம் அருள் புரிந்தால்
- ʿalā l-insāni
- عَلَى ٱلْإِنسَٰنِ
- on man
- மனிதனுக்கு
- aʿraḍa
- أَعْرَضَ
- he turns away
- புறக்கணிக்கின்றான்
- wanaā bijānibihi
- وَنَـَٔا بِجَانِبِهِۦۖ
- and becomes remote on his side
- இன்னும் தூரமாகி விடுகிறான்
- wa-idhā massahu
- وَإِذَا مَسَّهُ
- And when touches him
- அணுகினால்/அவனை
- l-sharu
- ٱلشَّرُّ
- the evil
- ஒரு தீங்கு
- kāna
- كَانَ
- he is
- ஆகிவிடுகின்றான்
- yaūsan
- يَـُٔوسًا
- (in) despair
- நிராசையுடையவனாக
Transliteration:
Wa izaaa an'amnaa 'alal insaani a'rada wa na-aa bijaani bihee wa izaa massahush sharru kaana ya'oosaa(QS. al-ʾIsrāʾ:83)
English Sahih International:
And when We bestow favor upon man [i.e., the disbeliever], he turns away and distances himself; and when evil touches him, he is ever despairing. (QS. Al-Isra, Ayah ௮௩)
Abdul Hameed Baqavi:
நாம் மனிதனுக்கு அருள் புரிந்தால் (அதற்கு அவன் நன்றி செலுத்துவதற்குப் பதிலாக நம்மை) புறக்கணித்து முகம் திரும்பிக் கொள்கிறான். அவனை யாதொரு தீங்கு அணுகினாலோ நம்பிக்கை இழந்துவிடுகிறான். (பனீ இஸ்ராயீல், வசனம் ௮௩)
Jan Trust Foundation
நாம் மனிதனுக்கு அருட்கொடைகளை வழங்கினால் அவன் (நன்றி செலுத்தாமல்) புறக்கணித்து(த் தோளை உயர்த்திப்) பெருமை கொள்கிறான்; அவனை (ஏதேனுமொரு) தீங்கு தொடுமானால் அவன் நிராசை கொண்டவனாகி விடுகிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நாம் மனிதனுக்கு அருள் புரிந்தால் (அதற்கு நன்றி செலுத்தாமல்) புறக்கணிக்கின்றான்; (பாவங்கள் செய்து நம்மை விட்டு) தூரமாகி விடுகிறான். அவனை ஒரு தீங்கு அணுகினால் நிராசையுடையவனாக ஆகிவிடுகின்றான்.