குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௮
Qur'an Surah Al-Isra Verse 8
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
عَسٰى رَبُّكُمْ اَنْ يَّرْحَمَكُمْۚ وَاِنْ عُدْتُّمْ عُدْنَاۘ وَجَعَلْنَا جَهَنَّمَ لِلْكٰفِرِيْنَ حَصِيْرًا (الإسراء : ١٧)
- ʿasā rabbukum
- عَسَىٰ رَبُّكُمْ
- "(It) may be that your Lord
- ஆகலாம்/உங்கள் இறைவன்
- an yarḥamakum
- أَن يَرْحَمَكُمْۚ
- that your Lord (may) have mercy upon you
- கருணை புரிய/உங்களுக்கு
- wa-in ʿudttum
- وَإِنْ عُدتُّمْ
- But if you return
- நீங்கள் திரும்பினால்
- ʿud'nā
- عُدْنَاۘ
- We will return
- நாம் திரும்புவோம்
- wajaʿalnā
- وَجَعَلْنَا
- And We have made
- இன்னும் ஆக்கினோம்
- jahannama
- جَهَنَّمَ
- Hell
- நரகத்தை
- lil'kāfirīna
- لِلْكَٰفِرِينَ
- for the disbelievers
- நிராகரிப்பாளர்களுக்கு
- ḥaṣīran
- حَصِيرًا
- a prison-bed"
- விரிப்பாக
Transliteration:
'Asaa rabbukum anyyarhamakum; wa in 'uttum 'udnaa; wa ja'alnaa jahannama lilkaafireena haseera(QS. al-ʾIsrāʾ:8)
English Sahih International:
[Then Allah said], "It is expected, [if you repent], that your Lord will have mercy upon you. But if you return [to sin], We will return [to punishment]. And We have made Hell, for the disbelievers, a prison-bed." (QS. Al-Isra, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
(நீங்கள் விஷமம் செய்வதைவிட்டுப் பின்னும் விலகிக் கொண்டால்) உங்கள் இறைவன் உங்கள் மீது கருணைப் புரியலாம். (அவ்வாறன்றி உங்கள் விஷமத்தின் பக்கமே) பின்னும் நீங்கள் திரும்பினால் நாமும் (உங்களை முன் போல தண்டிக்க) முன் வருவோம். அன்றி (இத்தகைய) நிராகரிப்பவரை நரகம் சூழ்ந்து கொள்ளும்படியும் செய்வோம். (பனீ இஸ்ராயீல், வசனம் ௮)
Jan Trust Foundation
(இதன் பின்னரும் நீங்கள் திருந்திக் கொண்டால்) உங்கள் இறைவன் உங்கள் மீது கருணை புரியப்போதும். ஆனால், நீங்கள் (பாவத்தின் பக்கமே) திரும்புவீர்களானால், நாமும் (முன் போல் தண்டிக்கத்) திரும்புவோம்; மேலும் காஃபிர்களுக்கு ஜஹன்ன(ம் எனும் நரக)த்தைச் சிறைச்சாலையாக ஆக்கி வைத்துள்ளோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்கள் இறைவன் உங்களுக்கு கருணை புரியலாம். நீங்கள் (அழிச்சாட்டியத்தின் பக்கம்) திரும்பினால் நாமும் (உங்களைத் தண்டிக்க) திரும்புவோம். நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தை விரிப்பாக ஆக்கினோம்.