Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௭௯

Qur'an Surah Al-Isra Verse 79

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௭௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمِنَ الَّيْلِ فَتَهَجَّدْ بِهٖ نَافِلَةً لَّكَۖ عَسٰٓى اَنْ يَّبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُوْدًا (الإسراء : ١٧)

wamina al-layli fatahajjad
وَمِنَ ٱلَّيْلِ فَتَهَجَّدْ
And from the night arise from sleep for prayer
இரவில்/உறங்கி எழுந்து தொழுவீராக
bihi
بِهِۦ
with it
அதை (ஓதி)
nāfilatan
نَافِلَةً
(as) additional
உபரியா(னதா)க
laka
لَّكَ
for you;
உமக்கு
ʿasā an yabʿathaka
عَسَىٰٓ أَن يَبْعَثَكَ
it may be that will raise you
எழுப்புவான்/உம்மை
rabbuka
رَبُّكَ
your Lord
உம் இறைவன்
maqāman maḥmūdan
مَقَامًا مَّحْمُودًا
(to) a station praiseworthy
இடத்தில்/மஹ்மூது

Transliteration:

Wa minal laili fatahajjad bihee naafilatal laka 'asaaa any yab'asaka Rabbuka Maqaamam Mahmoodaa (QS. al-ʾIsrāʾ:79)

English Sahih International:

And from [part of] the night, pray with it [i.e., recitation of the Quran] as additional [worship] for you; it is expected that your Lord will resurrect you to a praised station. (QS. Al-Isra, Ayah ௭௯)

Abdul Hameed Baqavi:

தஹஜ்ஜத்து தொழுகை (உங்கள்மீது கடமையாக இல்லாவிடினும்) நீங்கள், நஃபிலாக இரவில் ஒரு (சிறிது) பாகத்தில் தொழுது வாருங்கள்! (இதன் அருளால் "மகாமே மஹ்மூத்" என்னும்) மிக்க புகழ்பெற்ற இடத்தில் உங்கள் இறைவன் உங்களை அமர்த்தலாம். (பனீ இஸ்ராயீல், வசனம் ௭௯)

Jan Trust Foundation

இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக; (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன், “மகாமம் மஹ்முதா” என்றும் (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பப் போதும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இரவில் (கொஞ்சம்) உறங்கி எழுந்து உமக்கு (மட்டும்) உபரியா(ன கடமையா)க அதை (குர்ஆனை) ஓதி தொழுவீராக! மகாம் மஹ்மூது எனும் புகழப்பட்ட இடத்தில் உம்மை உம் இறைவன் எழுப்புவான்.