குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௭௮
Qur'an Surah Al-Isra Verse 78
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௭௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَقِمِ الصَّلٰوةَ لِدُلُوْكِ الشَّمْسِ اِلٰى غَسَقِ الَّيْلِ وَقُرْاٰنَ الْفَجْرِۗ اِنَّ قُرْاٰنَ الْفَجْرِ كَانَ مَشْهُوْدًا (الإسراء : ١٧)
- aqimi
- أَقِمِ
- Establish
- நிலை நிறுத்துவீராக
- l-ṣalata
- ٱلصَّلَوٰةَ
- the prayer
- தொழுகையை
- lidulūki
- لِدُلُوكِ
- at the decline
- சாய்ந்ததிலிருந்து
- l-shamsi
- ٱلشَّمْسِ
- (of) the sun
- சூரியன்
- ilā ghasaqi
- إِلَىٰ غَسَقِ
- till (the) darkness
- இருள் வரை
- al-layli
- ٱلَّيْلِ
- (of) the night
- இரவின்
- waqur'āna
- وَقُرْءَانَ
- and Quran
- இன்னும் தொழுகை
- l-fajri
- ٱلْفَجْرِۖ
- at dawn
- ஃபஜ்ர் உடைய
- inna qur'āna
- إِنَّ قُرْءَانَ
- indeed the Quran
- நிச்சயமாக தொழுகை
- l-fajri
- ٱلْفَجْرِ
- (at) the dawn
- ஃபஜ்ர்
- kāna
- كَانَ
- is
- இருக்கின்றது
- mashhūdan
- مَشْهُودًا
- ever witnessed
- வானவர்கள் கலந்து கொள்ளக்கூடியதாக
Transliteration:
Aqimis Salaata liduloo kish shamsi ilaa ghasaqil laili wa quraanal Fajri inna quraa nal Fajri kaana mashhoodaa(QS. al-ʾIsrāʾ:78)
English Sahih International:
Establish prayer at the decline of the sun [from its meridian] until the darkness of the night and [also] the Quran [i.e., recitation] of dawn. Indeed, the recitation of dawn is ever witnessed. (QS. Al-Isra, Ayah ௭௮)
Abdul Hameed Baqavi:
(நபியே!) சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரையில் (லுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய நேரத்) தொழுகைகளைத் தொழுது வாருங்கள். ஃபஜ்ர் தொழுகையும் தொழுது வாருங்கள். ஏனென்றால், நிச்சயமாக ஃபஜ்ர் தொழுகையானது மலக்குகள் கலந்துகொள்ளும் தொழுகையாகும். (பனீ இஸ்ராயீல், வசனம் ௭௮)
Jan Trust Foundation
(நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக; இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக); நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் வரை உள்ள தொழுகைகளையும் ஃபஜ்ருடைய தொழுகையையும் நிலை நிறுத்துங்கள். ஏனென்றால், நிச்சயமாக ஃபஜ்ர் தொழுகை வானவர்கள் கலந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.