குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௭௬
Qur'an Surah Al-Isra Verse 76
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنْ كَادُوْا لَيَسْتَفِزُّوْنَكَ مِنَ الْاَرْضِ لِيُخْرِجُوْكَ مِنْهَا وَاِذًا لَّا يَلْبَثُوْنَ خِلٰفَكَ اِلَّا قَلِيْلًا (الإسراء : ١٧)
- wa-in kādū
- وَإِن كَادُوا۟
- And indeed they were about
- நிச்சயமாக முயற்சிக்கின்றனர்
- layastafizzūnaka
- لَيَسْتَفِزُّونَكَ
- (to) scare you
- அவர்கள் தூண்டிவிட/உம்மை
- mina l-arḍi
- مِنَ ٱلْأَرْضِ
- from the land
- ஊரிலிருந்து
- liyukh'rijūka
- لِيُخْرِجُوكَ
- that they evict you
- அவர்கள் வெளியேற்றுவதற்காக/உம்மை
- min'hā
- مِنْهَاۖ
- from it
- அதிலிருந்து
- wa-idhan lā yalbathūna
- وَإِذًا لَّا يَلْبَثُونَ
- But then not they (would) have stayed
- அப்போது வசித்திருக்க மாட்டார்கள்
- khilāfaka
- خِلَٰفَكَ
- after you
- உமக்குப் பின்னால்
- illā qalīlan
- إِلَّا قَلِيلًا
- except a little
- சொற்ப காலமே தவிர
Transliteration:
Wa in kaadoo la yastafizzoonaka minal ardi liyukhri jooka minhaa wa izal laa yalbasoona khilaafaka illaa qaleelaa(QS. al-ʾIsrāʾ:76)
English Sahih International:
And indeed, they were about to provoke [i.e., drive] you from the land [i.e., Makkah] to evict you therefrom. And then [when they do], they will not remain [there] after you, except for a little. (QS. Al-Isra, Ayah ௭௬)
Abdul Hameed Baqavi:
(நபியே! உங்களுடைய) ஊரிலிருந்து உங்களுடைய காலைப் பெயர்த்து அதிலிருந்து உங்களை வெளிப்படுத்தி விடவே அவர்கள் முடிவு கட்டியிருந்தார்கள். அவ்வாறவர்கள் செய்திருந்தால் உங்களுக்குப் பின்னர் வெகு சொற்பநாள்களே அன்றி அங்கு அவர்கள் இருந்திருக்க மாட்டார்கள். (பனீ இஸ்ராயீல், வசனம் ௭௬)
Jan Trust Foundation
(நபியே!) உம்மை (உம்முடைய) பூமியிலிருந்து அடி பெயரச்செய்து, அதை விட்டும் உம்மை வெளியேற்றிவிட முனைகிறார்கள்; ஆனால் அவர்களோ உமக்குப்பின்னர் சொற்ப நாட்களேயன்றி (அங்கு) தங்கியிருக்க மாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே! உமது) ஊரிலிருந்து அவர்கள் உம்மை வெளியேற்றுவதற்காக அவர்கள் உம்மை தூண்டிவிட முயற்சிக்கின்றனர். அப்போது, அவர்கள் உமக்குப் பின்னால் சொற்ப காலமே தவிர வசித்திருக்க மாட்டார்கள்.