குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௭௩
Qur'an Surah Al-Isra Verse 73
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௭௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنْ كَادُوْا لَيَفْتِنُوْنَكَ عَنِ الَّذِيْٓ اَوْحَيْنَآ اِلَيْكَ لِتَفْتَرِيَ عَلَيْنَا غَيْرَهٗۖ وَاِذًا لَّاتَّخَذُوْكَ خَلِيْلًا (الإسراء : ١٧)
- wa-in kādū
- وَإِن كَادُوا۟
- And indeed they were about (to)
- நிச்சயமாக நெருங்கி விட்டனர்
- layaftinūnaka
- لَيَفْتِنُونَكَ
- tempt you away
- அவர்கள் திருப்பிவிட/உம்மை
- ʿani
- عَنِ
- from
- விட்டு
- alladhī
- ٱلَّذِىٓ
- that which
- எதை
- awḥaynā
- أَوْحَيْنَآ
- We revealed
- நாம் வஹீ அறிவித்தோம்
- ilayka
- إِلَيْكَ
- to you
- உமக்கு
- litaftariya
- لِتَفْتَرِىَ
- that you invent
- ஏனெனில் நீர் இட்டுக்கட்டுவதற்காக
- ʿalaynā
- عَلَيْنَا
- about Us
- நம் மீது
- ghayrahu
- غَيْرَهُۥۖ
- other (than) it
- அது அல்லாததை
- wa-idhan
- وَإِذًا
- And then
- அப்போது
- la-ittakhadhūka
- لَّٱتَّخَذُوكَ
- surely they would take you
- எடுத்துக் கொண்டிருப்பார்கள்/உம்மை
- khalīlan
- خَلِيلًا
- (as) a friend
- உற்ற நண்பராக
Transliteration:
Wa in kaadoo la yaftinoonaka 'anil lazeee awhainaaa ilaika litaftariya 'alainaaa ghairahoo wa izallat takhazooka khaleelaa(QS. al-ʾIsrāʾ:73)
English Sahih International:
And indeed, they were about to tempt you away from that which We revealed to you in order to [make] you invent about Us something else; and then they would have taken you as a friend. (QS. Al-Isra, Ayah ௭௩)
Abdul Hameed Baqavi:
நாம் உங்களுக்கு வஹீ மூலம் அறிவித்ததை நீங்கள் விட்டு (விட்டு) அதல்லாததை நம்மீது நீங்கள் பொய்யாகக் கற்பனை செய்து கூறும்படி உங்களை அவர்கள் திருப்பிவிடவே இருந்தார்கள். (அவ்வாறு நீங்கள் செய்திருந்தால்) உங்களை அவர்கள் தங்கள் நண்பராகவும் எடுத்துக் கொண்டிருப்பார்கள். (பனீ இஸ்ராயீல், வசனம் ௭௩)
Jan Trust Foundation
(நபியே!) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே அதை விட்டும், அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டிக் கூறும்படி உம்மைத் திருப்பிவிடவே அவர்கள் முனைந்தார்கள்; (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்மை தம் உற்ற நண்பராகவும் அப்போது எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நாம் உமக்கு வஹ்யி அறிவித்ததை விட்டு (வேறு ஒன்றின் பக்கம்) உம்மை அவர்கள் திருப்பிவிட நிச்சயமாக நெருங்கிவிட்டனர், ஏனெனில், நீர் (வஹ்யில் அறிவிக்கப்பட்ட) அது அல்லாததை (பொய்யாக) நம் மீது இட்டுக் கட்டுவதற்காக. அப்போது அவர்கள் உம்மை உற்ற நண்பராக எடுத்துக் கொண்டிருப்பார்கள்.