Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௭௧

Qur'an Surah Al-Isra Verse 71

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَوْمَ نَدْعُوْا كُلَّ اُنَاسٍۢ بِاِمَامِهِمْۚ فَمَنْ اُوْتِيَ كِتٰبَهٗ بِيَمِيْنِهٖ فَاُولٰۤىِٕكَ يَقْرَءُوْنَ كِتٰبَهُمْ وَلَا يُظْلَمُوْنَ فَتِيْلًا (الإسراء : ١٧)

yawma
يَوْمَ
(The) Day
நாள்
nadʿū
نَدْعُوا۟
We will call
நாம் அழைப்போம்
kulla
كُلَّ
all
ஒவ்வொரு
unāsin
أُنَاسٍۭ
human beings
மனிதன்
bi-imāmihim
بِإِمَٰمِهِمْۖ
with their record
அவர்களின் தலைவர்களுடன்
faman
فَمَنْ
then whoever
எவர்(கள்)
ūtiya
أُوتِىَ
is given
கொடுக்கப்பட்டார்(கள்)
kitābahu
كِتَٰبَهُۥ
his record
தமது புத்தகத்தை
biyamīnihi
بِيَمِينِهِۦ
in his right hand
தமது வலக்கையில்
fa-ulāika
فَأُو۟لَٰٓئِكَ
then those
அத்தகையவர்கள்
yaqraūna
يَقْرَءُونَ
will read
வாசிப்பார்கள்
kitābahum
كِتَٰبَهُمْ
their records
தங்கள் புத்தகத்தை
walā yuẓ'lamūna
وَلَا يُظْلَمُونَ
and not they will be wronged
இன்னும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
fatīlan
فَتِيلًا
(even as much as) a hair on a date seed
ஒரு நூல் அளவு

Transliteration:

Yawma nad'oo kulla unaasim bi imaamihim faman ootiya kitaabahoo bi yameenihee fa ulaaa'ika yaqra'oona kitaabahum wa laa yuzlamoona fateelaa (QS. al-ʾIsrāʾ:71)

English Sahih International:

[Mention, O Muhammad], the Day We will call forth every people with their record [of deeds]. Then whoever is given his record in his right hand – those will read their records, and injustice will not be done to them, [even] as much as a thread [inside the date seed]. (QS. Al-Isra, Ayah ௭௧)

Abdul Hameed Baqavi:

ஒவ்வொரு மனிதனையும் அவர்களின் தலைவர்களுடன் (விசாரணைக்காக) நாம் அழைக்கும் நாளில், அவர்களின் (தினசரி குறிப்புப்) புத்தகம் அவர்களுடைய வலது கையில் கொடுக்கப் பட்டால் அவர்கள் தங்களுடைய அ(த் தினசரி குறிப்பு)ப் புத்தகத்தை (மிக்க மகிழ்ச்சியோடு) வாசிப்பார்கள். (அவர்களுடைய கூலியில்) ஓர் அணுவளவு (குறைத்து)ம் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (பனீ இஸ்ராயீல், வசனம் ௭௧)

Jan Trust Foundation

(நபியே!) நாம் எல்லா மக்களையும் அவரவர்களுடைய தலைவர்களுடன் அழைக்கும் நாளை (நீர் நினைவூட்டுவீராக; அந்நாளில்) எவருடைய (செயல் குறிப்பு) ஏடு அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுகிறதோ, அ(த்தகைய நற்பேறுடைய)வர்கள் தம் ஏடுகளை (நிம்மதியுடன்) படிப்பார்கள்; இன்னும், அவர்கள் அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஒவ்வொரு மனிதனையும் அவர்களின் தலைவர்களுடன் நாம் அழைக்கும் நாளில், எவர்கள் தமது புத்தகத்தை தமது வலக்கையில் கொடுக்கப்பட்டாரோ அத்தகையவர்கள் தங்கள் புத்தகத்தை (மகிழ்ச்சியுடன்) வாசிப்பார்கள். ஒரு நூல் அளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.