Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௬௯

Qur'an Surah Al-Isra Verse 69

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ اَمِنْتُمْ اَنْ يُّعِيْدَكُمْ فِيْهِ تَارَةً اُخْرٰى فَيُرْسِلَ عَلَيْكُمْ قَاصِفًا مِّنَ الرِّيْحِ فَيُغْرِقَكُمْ بِمَا كَفَرْتُمْۙ ثُمَّ لَا تَجِدُوْا لَكُمْ عَلَيْنَا بِهٖ تَبِيْعًا (الإسراء : ١٧)

am amintum
أَمْ أَمِنتُمْ
Or do you feel secure
அல்லது பயமற்று இருக்கின்றீர்களா?
an
أَن
that (not)
அவன் மீட்பதை
yuʿīdakum
يُعِيدَكُمْ
He will send you back
அவன் மீட்பதை உங்களை
fīhi
فِيهِ
into it
அதில்
tāratan
تَارَةً
another time
முறை
ukh'rā
أُخْرَىٰ
another time
மற்றொரு
fayur'sila
فَيُرْسِلَ
and send
அனுப்புவான்
ʿalaykum
عَلَيْكُمْ
upon you
உங்கள் மீது
qāṣifan
قَاصِفًا
a hurricane
உடைத்தெரியக் கூடியது
mina l-rīḥi
مِّنَ ٱلرِّيحِ
of the wind
இருந்து/காற்று
fayugh'riqakum
فَيُغْرِقَكُم
and drown you
அவன் மூழ்கடிப்பான்/உங்களை
bimā kafartum
بِمَا كَفَرْتُمْۙ
because you disbelieved?
நீங்கள் நன்றி கெட்டதால்
thumma
ثُمَّ
Then
பிறகு
lā tajidū
لَا تَجِدُوا۟
not you will find
காணமாட்டீர்கள்
lakum
لَكُمْ
for you
உங்களுக்கு
ʿalaynā bihi
عَلَيْنَا بِهِۦ
against Us therein
நம்மிடம்/அதற்காக
tabīʿan
تَبِيعًا
an avenger?
பழிதீர்ப்பவரை

Transliteration:

Am amintum any yu'eedakum feehi taaratan ukhraa fa yursila 'alaikum qaasifam minar reehi fa yugh riqakum bimaa kafartum summa laa tajidoo lakum 'alainaa bihee tabee'aa (QS. al-ʾIsrāʾ:69)

English Sahih International:

Or do you feel secure that He will not send you back into it [i.e., the sea] another time and send upon you a hurricane of wind and drown you for what you denied? Then you would not find for yourselves against Us an avenger. (QS. Al-Isra, Ayah ௬௯)

Abdul Hameed Baqavi:

அல்லது மற்றொரு தடவை உங்களை கடலில் கொண்டு போய் கடினமான புயல் காற்றை உங்கள் மீது ஏவி, உங்கள் நன்றி கெட்ட தன்மையின் காரணமாக உங்களை மூழ்கடித்துவிட மாட்டான் என்று நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? அச்சமயம் (நான் உங்களை அழித்துவிடாது தடுக்க) என்னைப் பின்தொடர்பவர்கள் ஒருவரையும் நீங்கள் காணமாட்டீர்கள். (பனீ இஸ்ராயீல், வசனம் ௬௯)

Jan Trust Foundation

அல்லது, அவன் மீண்டும் ஒரு தடவை அக்கடலில் உங்களை மீளச் செய்து, (எல்லாவற்றையும்) முறித்துத் தள்ளும் புயல் காற்றை உங்கள் மீதனுப்பி, நீங்கள் நிராகரித்ததற்காக உங்களை மூழ்கடித்து விடமாட்டான் என்றும் நீங்கள் அச்சந்தீர்ந்து இருக்கிறீர்களா? (அப்படி நேர்ந்தால் ஏன் இவ்விஷயத்தை அவ்வாறு செய்தோம் ஏன் இவ்விஷயத்தை அவ்வாறு செய்தோம் என) நம்மைத் தொடர்ந்து உங்களுக்காக(க் கேட்போர்) எவரையும் காணமாட்டீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லது மற்றொரு முறை உங்களை அவன் அதில் மீட்டு (கொண்டு வந்து) உடைத்தெரியும் காற்றை உங்கள் மீது அனுப்பி, (முன்பு புரிந்த அருளுக்கு) நீங்கள் நன்றி கெட்ட(த்தனமாக நடந்து கொண்ட)தால் உங்களை அவன் (கடலில்) மூழ்கடித்து விடுவதை நீங்கள் பயமற்று விட்டீர்களா? (அவ்வாறு செய்தால் அதன்) பிறகு, அதற்காக உங்களுக்கு நம்மிடம் பழிதீர்ப்பவரை காணமாட்டீர்கள்.