குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௬௭
Qur'an Surah Al-Isra Verse 67
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௬௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذَا مَسَّكُمُ الضُّرُّ فِى الْبَحْرِ ضَلَّ مَنْ تَدْعُوْنَ اِلَّآ اِيَّاهُۚ فَلَمَّا نَجّٰىكُمْ اِلَى الْبَرِّ اَعْرَضْتُمْۗ وَكَانَ الْاِنْسَانُ كَفُوْرًا (الإسراء : ١٧)
- wa-idhā massakumu
- وَإِذَا مَسَّكُمُ
- And when touches you
- ஏற்பட்டால்/ உங்களுக்கு
- l-ḍuru
- ٱلضُّرُّ
- the hardship
- தீங்கு, துன்பம்
- fī l-baḥri
- فِى ٱلْبَحْرِ
- in the sea
- கடலில்
- ḍalla
- ضَلَّ
- lost
- மறைந்துவிடுகின்றனர்
- man
- مَن
- (are) who
- எவர், எவை
- tadʿūna
- تَدْعُونَ
- you call
- பிரார்தித்தீர்கள்
- illā
- إِلَّآ
- except
- தவிர
- iyyāhu
- إِيَّاهُۖ
- Him Alone
- அவனை
- falammā najjākum
- فَلَمَّا نَجَّىٰكُمْ
- But when He delivers you
- அவன் பாதுகாத்தபோது/உங்களை
- ilā l-bari
- إِلَى ٱلْبَرِّ
- to the land
- கரையில்
- aʿraḍtum
- أَعْرَضْتُمْۚ
- you turn away
- புறக்கணிக்கின்றீர்கள்
- wakāna
- وَكَانَ
- And is
- இருக்கின்றான்
- l-insānu
- ٱلْإِنسَٰنُ
- man
- மனிதன்
- kafūran
- كَفُورًا
- ungrateful
- மகா நன்றி கெட்டவனாக
Transliteration:
Wa izaa massakumuddurru fil bahri dalla man tad'oona illaaa iyyaahu falammaa najjaakum ilal barri a'radtum; wa kaanal insaanu kafooraa(QS. al-ʾIsrāʾ:67)
English Sahih International:
And when adversity touches you at sea, lost are [all] those you invoke except for Him. But when He delivers you to the land, you turn away [from Him]. And ever is man ungrateful. (QS. Al-Isra, Ayah ௬௭)
Abdul Hameed Baqavi:
உங்களுக்கு கடலில் யாதொரு தீங்கேற்படும் சமயத்தில், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் (இறைவனென) அழைத்துக் கொண்டிருந்த அனைத்தும் மறைந்து விடுகின்றன. (இறைவன் ஒருவன்தான் உங்கள் கண் முன் இருப்பவன்.) அவன் உங்களைக் கரையில் சேர்த்து பாதுகாத்துக் கொண்டாலோ (அவனை) நீங்கள் புறக்கணித்து விடுகிறீர்கள். மனிதன் மகா நன்றி கெட்டவன். (பனீ இஸ்ராயீல், வசனம் ௬௭)
Jan Trust Foundation
இன்னும், கடலில் உங்களை ஏதேனும் தங்கடம் (துன்பம்) தீண்டினால், அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவையாவும் மறைந்து விடும்; எனினும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையளவில் கொண்டு வந்து சேர்க்கும் பொழுது நீங்கள் (அவனைப்) புறக்கணித்து விடுகிறீர்கள் - இன்னும், மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
கடலில் உங்களுக்கு துன்பம் ஏற்பட்டால், அவனைத் தவிர நீங்கள் பிரார்தித்தவை (அனைத்தும் உங்கள் எண்ணங்களை விட்டு) மறைந்து விடுகின்றன. அவன் உங்களை பாதுகாத்(து கரையில் சேர்ப்பித்)தபோது (அவனை) புறக்கணிக்கிறீர்கள். மனிதன் மகா நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.