Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௬௧

Qur'an Surah Al-Isra Verse 61

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذْ قُلْنَا لِلْمَلٰۤىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْٓا اِلَّآ اِبْلِيْسَۗ قَالَ ءَاَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِيْنًاۚ (الإسراء : ١٧)

wa-idh qul'nā
وَإِذْ قُلْنَا
And when We said
நாம் கூறிய சமயம்
lil'malāikati
لِلْمَلَٰٓئِكَةِ
to the Angels
வானவர்களுக்கு
us'judū
ٱسْجُدُوا۟
"Prostrate
சிரம் பணியுங்கள்
liādama
لِءَادَمَ
to Adam"
ஆதமுக்கு
fasajadū
فَسَجَدُوٓا۟
So they prostrated
சிரம் பணிந்தனர்
illā
إِلَّآ
except
தவிர
ib'līsa
إِبْلِيسَ
Iblis
இப்லீஸ்
qāla
قَالَ
He said
கூறினான்
a-asjudu
ءَأَسْجُدُ
"Shall I prostrate
நான் சிரம் பணிவதா?
liman
لِمَنْ
to (one) whom
எவருக்கு
khalaqta
خَلَقْتَ
You created
நீ படைத்தாய்
ṭīnan
طِينًا
(from) clay?"
மண்ணிலிருந்து

Transliteration:

Wa iz qulnaa lilma laaa'ikatis judoo li Aadama fasajadooo illaaa Ibleesa qaala 'a-asjudu liman khalaqta teena (QS. al-ʾIsrāʾ:61)

English Sahih International:

And [mention] when We said to the angels, "Prostrate to Adam," and they prostrated, except for Iblees. He said, "Should I prostrate to one You created from clay?" (QS. Al-Isra, Ayah ௬௧)

Abdul Hameed Baqavi:

மலக்குகளை நோக்கி, "ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்" என நாம் கூறிய சமயத்தில் இப்லீஸைத் தவிர (மலக்குகள் அனைவரும் அவருக்குச்) சிரம் பணிந்தார்கள். அவனோ "நீ மண்ணால் படைத்தவனுக்கு நான் சிரம் பணிவதா?" என்று கேட்டான். (பனீ இஸ்ராயீல், வசனம் ௬௧)

Jan Trust Foundation

இன்னும், (நினைவு கூர்வீராக!) நாம் மலக்குகளிடம் “ஆதமுக்கு நீங்கள் ஸுஜூது செய்யுங்கள்” என்று கூறிய போது, இப்லீஸை தவிர அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவனோ| “களி மண்ணால் நீ படைத்தவருக்கா நான் ஸுஜூது செய்ய வேண்டும்?” என்று கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்” என வானவர்களுக்கு நாம் கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! இப்லீஸைத் தவிர (மற்ற அனைவரும்) சிரம் பணிந்தனர். “நீ மண்ணிலிருந்து படைத்தவருக்கு நான் சிரம் பணிவதா?” என்று (இப்லீஸ்) கூறினான்.