Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௫௮

Qur'an Surah Al-Isra Verse 58

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنْ مِّنْ قَرْيَةٍ اِلَّا نَحْنُ مُهْلِكُوْهَا قَبْلَ يَوْمِ الْقِيٰمَةِ اَوْ مُعَذِّبُوْهَا عَذَابًا شَدِيْدًاۗ كَانَ ذٰلِكَ فىِ الْكِتٰبِ مَسْطُوْرًا (الإسراء : ١٧)

wa-in min
وَإِن مِّن
And not (is) any
அறவே இல்லை
qaryatin
قَرْيَةٍ
town
ஊர்
illā
إِلَّا
but
தவிர
naḥnu
نَحْنُ
We
நாம்
muh'likūhā
مُهْلِكُوهَا
(will) destroy it
அதை அழிப்பவர்களாக
qabla
قَبْلَ
before
முன்பு
yawmi l-qiyāmati
يَوْمِ ٱلْقِيَٰمَةِ
(the) Day (of) the Resurrection
மறுமை நாளுக்கு
aw
أَوْ
or
அல்லது
muʿadhibūhā
مُعَذِّبُوهَا
punish it
வேதனை செய்பவர்களாக/அதை
ʿadhāban
عَذَابًا
with a punishment
வேதனை
shadīdan
شَدِيدًاۚ
severe
கடுமையானது
kāna
كَانَ
That is
இருக்கின்றது
dhālika
ذَٰلِكَ
That is
இது
fī l-kitābi
فِى ٱلْكِتَٰبِ
in the Book
புத்தகத்தில்
masṭūran
مَسْطُورًا
written
எழுதப்பட்டதாக

Transliteration:

Wa im min qaryatin illaa Nahnu muhlikoohaa qabla Yawmil Qiyaamati aw mu'az ziboohaa 'azaaban shadeedaa; kaana zaalika fil Kitaabi mastooraa (QS. al-ʾIsrāʾ:58)

English Sahih International:

And there is no city but that We will destroy it before the Day of Resurrection or punish it with a severe punishment. That has ever been in the Register inscribed. (QS. Al-Isra, Ayah ௫௮)

Abdul Hameed Baqavi:

(அநியாயக்காரர்கள் வசிக்கும்) எந்த ஊரையும் மறுமை நாள் வருவதற்கு முன்னதாக நாம் அழித்துவிடாமல் அல்லது கடினமான வேதனை செய்யாமல் விடுவதில்லை. இவ்வாறே (நம்மிடமுள்ள நிகழ்ச்சிக் குறிப்பாகிய) "லவ்ஹுல் மஹ்ஃபூளி"ல் வரையப்பட்டுவிட்டது. (பனீ இஸ்ராயீல், வசனம் ௫௮)

Jan Trust Foundation

இன்னும் கியாம நாளைக்கு முன்னே (அழிச்சாட்டியம் செய்யும்) எந்த ஊரையும் நாம் அழிக்காமலோ, அல்லது கடுமையான வேதனைக் கொண்டு வேதனை செய்யாமலோ இருப்பதில்லை; இது(லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் வரையப்பெற்றே இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அநியாயக்காரர்களின்) எந்த ஊரும் இல்லை, மறுமை நாளுக்கு முன்பாக நாம் அதை அழிப்பவர்களாக அல்லது கடுமையான வேதனையால் வேதனை செய்பவர்களாக இருந்தே தவிர. இது (நம்) ‘புத்தகத்தில்’எழுதப்பட்டதாக இருக்கின்றது.