Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௫௬

Qur'an Surah Al-Isra Verse 56

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلِ ادْعُوا الَّذِيْنَ زَعَمْتُمْ مِّنْ دُوْنِهٖ فَلَا يَمْلِكُوْنَ كَشْفَ الضُّرِّ عَنْكُمْ وَلَا تَحْوِيْلًا (الإسراء : ١٧)

quli
قُلِ
Say
கூறுவீராக
id'ʿū
ٱدْعُوا۟
"Call
அழையுங்கள்
alladhīna
ٱلَّذِينَ
those whom
எவர்களை
zaʿamtum
زَعَمْتُم
you claimed
கூறினீர்கள்
min dūnihi
مِّن دُونِهِۦ
besides Him besides Him
அவனையன்றி
falā yamlikūna
فَلَا يَمْلِكُونَ
[then] not they have power
உரிமை, ஆற்றல் பெற மாட்டார்கள்
kashfa
كَشْفَ
(to) remove
நீக்குவதற்கு
l-ḍuri
ٱلضُّرِّ
the misfortunes
துன்பத்தை
ʿankum
عَنكُمْ
from you
உங்களை விட்டு
walā taḥwīlan
وَلَا تَحْوِيلًا
and not (to) transfer (it)"
இன்னும் திருப்புவதற்கும்

Transliteration:

Qulid 'ul lazeena za'amtum min doonihee falaa yamlikoona kashfad durri'ankum wa laa tahweelaa (QS. al-ʾIsrāʾ:56)

English Sahih International:

Say, "Invoke those you have claimed [as gods] besides Him, for they do not possess the [ability for] removal of adversity from you or [for its] transfer [to someone else]." (QS. Al-Isra, Ayah ௫௬)

Abdul Hameed Baqavi:

(நபியே! இணைவைத்து வணங்குபவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ்வையன்றி (வேறு தெய்வங்கள் இருப்பதாக) நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்களே அவைகளை நீங்கள் (உங்கள் கஷ்டங்களை நீக்க) அழையுங்கள். (அவ்வாறழைத்தால்) அவை உங்களுடைய யாதொரு கஷ்டத்தை நீக்கி வைக்கவோ அல்லது (அதனைத்) தட்டிவிடவோ சக்தியற்றவை (என்பதை) அறிந்து கொள்வீர்கள். (பனீ இஸ்ராயீல், வசனம் ௫௬)

Jan Trust Foundation

அவனையன்றி (வேறு தெய்வங்கள் இருப்பதாக) நீங்கள் எண்ணிக்கொண்டிருப்பவர்களை அழைத்துப்பாருங்கள்; அவர்கள் உங்களுடைய கஷ்டத்தை நிவர்த்திக்கவோ அல்லது திருப்பிவிடவோ சக்தி பெறவில்லை (என்பதை அறிவீர்கள்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! அவனையன்றி (தெய்வங்கள் என) நீங்கள் கூறியவற்றை (உங்கள் துன்பத்தில் அவர்களிடம் உதவிகோரி) அழையுங்கள். அவை உங்களை விட்டுத் துன்பத்தை நீக்குவதற்கும் (அதை விட்டுத்) திருப்புவதற்கும் ஆற்றல் பெற மாட்டார்கள்.