குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௫௨
Qur'an Surah Al-Isra Verse 52
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَوْمَ يَدْعُوْكُمْ فَتَسْتَجِيْبُوْنَ بِحَمْدِهٖ وَتَظُنُّوْنَ اِنْ لَّبِثْتُمْ اِلَّا قَلِيْلًا ࣖ (الإسراء : ١٧)
- yawma yadʿūkum
- يَوْمَ يَدْعُوكُمْ
- (On) the Day He will call you
- நாள்/அழைப்பான்/உங்களை
- fatastajībūna
- فَتَسْتَجِيبُونَ
- and you will respond
- பதில் அளிப்பீர்கள்
- biḥamdihi
- بِحَمْدِهِۦ
- with His Praise
- புகழ்ந்து அவனுடைய
- wataẓunnūna
- وَتَظُنُّونَ
- and you will think
- இன்னும் எண்ணுவீர்கள்
- in labith'tum
- إِن لَّبِثْتُمْ
- not you had remained
- நீங்கள் தங்கவில்லை
- illā qalīlan
- إِلَّا قَلِيلًا
- except a little (while)
- தவிர/சொற்பமாக
Transliteration:
Yawma yad'ookum fatastajeeboona bihamdihee wa tazunnoona il labistum illaa qaleela(QS. al-ʾIsrāʾ:52)
English Sahih International:
On the Day He will call you and you will respond with praise of Him and think that you had not remained [in the world] except for a little." (QS. Al-Isra, Ayah ௫௨)
Abdul Hameed Baqavi:
(இன்றைய தினம் நீங்கள் இறைவனை வெறுத்தபோதிலும் அவன்) உங்களை (விசாரணைக்காக) அழைக்கும் நாளில் நீங்கள் அவனைப் புகழ்ந்துகொண்டே அவனிடம் வருவீர்கள். (இறந்த பின்) வெகு சொற்ப (நேர)மே அன்றி தங்கியிருக்கவில்லை என்றும் (அன்றைய தினம்) நீங்கள் எண்ணுவீர்கள்! (பனீ இஸ்ராயீல், வசனம் ௫௨)
Jan Trust Foundation
உங்களை (இறுதியில்) அவன் அழைக்கும் நாளில், நீங்கள் அவன் புகழை ஓதியவர்களாக பதில் கூறுவீர்கள்; (மரணத்திற்குப் பின்) சொற்ப(கால)மே தங்கியிருந்ததாக நீங்கள் நினைப்பீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்களை அவன் அழைக்கிற நாளில், நீங்கள் அவனுடைய ஆற்றல் கொண்டு பதில் அளிப்பீர்கள். சொற்ப (கால)ம் தவிர நீங்கள் (உலகிலும் மண்ணறையிலும்) தங்கவில்லை என்று (அந்நாளில்) எண்ணுவீர்கள்!