குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௫௧
Qur'an Surah Al-Isra Verse 51
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَوْ خَلْقًا مِّمَّا يَكْبُرُ فِيْ صُدُوْرِكُمْ ۚفَسَيَقُوْلُوْنَ مَنْ يُّعِيْدُنَاۗ قُلِ الَّذِيْ فَطَرَكُمْ اَوَّلَ مَرَّةٍۗ فَسَيُنْغِضُوْنَ اِلَيْكَ رُءُوْسَهُمْ وَيَقُوْلُوْنَ مَتٰى هُوَۗ قُلْ عَسٰٓى اَنْ يَّكُوْنَ قَرِيْبًا (الإسراء : ١٧)
- aw
- أَوْ
- Or
- அல்லது
- khalqan
- خَلْقًا
- a creation
- ஒரு படைப்பாக
- mimmā
- مِّمَّا
- of what
- உள்ளவற்றில்
- yakburu
- يَكْبُرُ
- (is) great
- பெரியதாக
- fī ṣudūrikum
- فِى صُدُورِكُمْۚ
- in your breasts"
- உங்கள் நெஞ்சங்களில்
- fasayaqūlūna
- فَسَيَقُولُونَ
- Then they will say
- அவர்கள் கூறட்டும்
- man
- مَن
- "Who
- யார்?
- yuʿīdunā
- يُعِيدُنَاۖ
- will restore us?"
- மீட்பார்/எங்களை
- quli
- قُلِ
- Say
- கூறுவீராக
- alladhī
- ٱلَّذِى
- "He Who
- எவன்
- faṭarakum
- فَطَرَكُمْ
- created you
- படைத்தான்/உங்களை
- awwala
- أَوَّلَ
- (the) first
- முதல்
- marratin
- مَرَّةٍۚ
- time"
- முறையாக
- fasayun'ghiḍūna
- فَسَيُنْغِضُونَ
- Then they will shake
- ஆகவே ஆட்டுவார்கள்
- ilayka
- إِلَيْكَ
- at you
- உம் பக்கம்
- ruūsahum
- رُءُوسَهُمْ
- their heads
- தலைகளை/தங்கள்
- wayaqūlūna
- وَيَقُولُونَ
- and they say
- பிறகு கூறுவார்கள்
- matā
- مَتَىٰ
- "When (will)
- எப்போது
- huwa
- هُوَۖ
- it (be)?"
- அது
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- ʿasā
- عَسَىٰٓ
- "Perhaps
- கூடும்
- an yakūna
- أَن يَكُونَ
- that (it) will be
- இருக்க
- qarīban
- قَرِيبًا
- soon"
- சமீபமாக
Transliteration:
aw khalqam mimmaa yakburu fee sudoorikum; fasa yaqooloona mai yu'eedunaa qulil lazee fatarakum awwala marrah; fasa yunghidoona ilaika ru'oosahum wa yaqooloona mataa huwa qul 'asaaa any yakoona qareeba(QS. al-ʾIsrāʾ:51)
English Sahih International:
Or [any] creation of that which is great within your breasts." And they will say, "Who will restore us?" Say, "He who brought you forth the first time." Then they will nod their heads toward you and say, "When is that?" Say, "Perhaps it will be soon – (QS. Al-Isra, Ayah ௫௧)
Abdul Hameed Baqavi:
அல்லது மிகப் பெரிதென உங்கள் மனதில் தோன்றும் வேறொரு பொருளாகவாகிலும் ஆகிவிடுங்கள். இவ்வாறு மாறிய பின்னர் "எங்களை எவன் உயிர்ப்பிப்பான்?" என்று அவர்கள் கேட்கட்டும். (அவ்வாறு கேட்டால் நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "உங்களை முதலாவதாக எவன் படைத்தானோ அவன்தான் (நீங்கள் மரணித்த பின்னும் உங்களை எழுப்புவான்)" என்று கூறுங்கள். அதற்கவர்கள் தங்கள் தலையை உங்கள் அளவில் சாய்த்து "அந்நாள் எப்பொழுது (வரும்)?" என்று கேட்பார்கள். அதற்கு நீங்கள் (அவர்களை நோக்கி "அது தூரத்தில் இல்லை) வெகு சீக்கிரத்தில் வந்துவிடலாம்" என்று கூறுங்கள். (பனீ இஸ்ராயீல், வசனம் ௫௧)
Jan Trust Foundation
“அல்லது மிகப் பெரிதென உங்கள் நெஞ்சங்களில் தோன்றும் வேறொரு படைப்பாய் ஆகுங்கள்;” (எப்படியானாலும் நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்). “எங்களை எவன் (மறுமுறையும் உயிர் கொடுத்து) மீட்டுவான்?” என்று அவர்கள் கேட்பார்கள். “உங்களை எவன் முதலில் படைத்தானோ, அவன் தான்!” என்று (நபியே!) நீர் கூறும்; அப்போது அவர்கள் தங்களுடைய சிரசுகளை உம் பக்கம் சாய்த்து, (பரிகாசமாக) அது எப்போது (நிகழும்)? என்று கேட்பார்கள். “அது வெகு சீக்கிரத்தில் ஏற்படலாம்” என்று கூறுவீராக!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லது உங்கள் நெஞ்சங்களில் பெரியதாக உள்ளவற்றில் ஒரு படைப்பாக ஆகிவிடுங்கள். “எங்களை (உயிருள்ள மனிதர்களாக) யார் மீட்பார்?” என்று அவர்கள் கூறட்டும். (அப்போது நபியே!) கூறுவீராக! “உங்களை முதல் முறையாகப் படைத்தவன்தான் (உங்களை மீட்பான்).” உடனே, (கேலியாக) தங்கள் தலைகளை உம் பக்கம் ஆட்டுவார்கள். பிறகு, “அது எப்போது (வரும்)?” என்று கூறுவார்கள். “அது (தூரத்தில் இல்லை) சமீபமாக இருக்கக்கூடும்” என்று கூறுவீராக.