குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௫
Qur'an Surah Al-Isra Verse 5
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاِذَا جَاۤءَ وَعْدُ اُوْلٰىهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَّنَآ اُولِيْ بَأْسٍ شَدِيْدٍ فَجَاسُوْا خِلٰلَ الدِّيَارِۗ وَكَانَ وَعْدًا مَّفْعُوْلًا (الإسراء : ١٧)
- fa-idhā jāa
- فَإِذَا جَآءَ
- So when came
- வரும்போது
- waʿdu
- وَعْدُ
- (the) promise
- வாக்கு
- ūlāhumā
- أُولَىٰهُمَا
- (for) the first of the two
- அவ்விரண்டில் முதல்
- baʿathnā
- بَعَثْنَا
- We raised
- அனுப்பினோம்
- ʿalaykum
- عَلَيْكُمْ
- against you
- உங்கள் மீது
- ʿibādan
- عِبَادًا
- servants
- அடியார்களை
- lanā
- لَّنَآ
- of Ours
- நமக்குரிய
- ulī
- أُو۟لِى
- those of great military might
- உடையவர்கள்
- basin
- بَأْسٍ
- those of great military might
- பலம்
- shadīdin
- شَدِيدٍ
- those of great military might
- கடுமையானது
- fajāsū
- فَجَاسُوا۟
- and they entered
- ஊடுருவிச் சென்றனர்
- khilāla
- خِلَٰلَ
- the inner most part
- நடுவில்
- l-diyāri
- ٱلدِّيَارِۚ
- (of) the homes
- வீடுகளுக்கு
- wakāna
- وَكَانَ
- and (it) was
- இருந்தது
- waʿdan
- وَعْدًا
- a promise
- ஒரு வாக்காக
- mafʿūlan
- مَّفْعُولًا
- fulfilled
- நிறைவேற்றப்பட்டது
Transliteration:
Fa-izaa jaaa'a wa'duoolaahumaa ba'asnaaa 'alykurr 'ibaadai-lanaaa ulee baasin shadeedin fajaasoo khilaalad diyaar; wa kaana wa'dam maf'oolaa(QS. al-ʾIsrāʾ:5)
English Sahih International:
So when the [time of] promise came for the first of them, We sent against you servants of Ours – those of great military might, and they probed [even] into the homes, and it was a promise fulfilled. (QS. Al-Isra, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
அவ்விரண்டில் முதல் தவணை வந்த சமயத்தில் (நீங்கள் செய்து கொண்டிருந்த குற்றங்களுக்குத் தண்டனையாக இரக்கமற்ற) பெரும் பலவான்களாகிய மனிதர்களை உங்கள் மீது ஏவிவிட்டோம். அவர்கள் (பைத்துல் முகத்தஸிலிருந்த உங்கள்) வீடுகளுக்கு ஊடுருவிச்சென்று (தங்கள் கைக்குக் கிட்டியதையெல்லாம் இடித்தழித்து நாசமாக்கி) விட்டார்கள். (அதனால் பைத்துல் முகத்தஸிலிருந்த ஆலயமும், அவ்வூரும் அழிந்து நாசமாயின. இவ்வாறு நம்முடைய முந்திய) வாக்குறுதி நிறைவேறியது. (பனீ இஸ்ராயீல், வசனம் ௫)
Jan Trust Foundation
எனவே, அவ்விரண்டில் முதலாவது வாக்குறுதி (நிறைவேறும் காலம்) வந்த போது, உங்களுக்கு எதிராக (போரில்) கொடிய வலிமையுடைய நம் அடியார்களை ஏவி விட்டோம்; அவர்கள் உங்கள் வீடுகளில் புகுந்து (உங்களையும். உங்கள் பொருள்களையும்) தேடி (அழித்து) விட்டார்கள்; (இவ்வாறு முதல்) வாக்குறுதி நிறைவேறியது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவ்விரண்டில் முதல் (முறையின்) வாக்கு வரும்போது கடுமையான பலமுடைய நமக்குரிய (சில) அடியார்களை உங்கள் மீது அனுப்பினோம். அவர்கள் (உங்கள்) வீடுகளுக்கு நடுவில் ஊடுருவிச் சென்றனர். (அது) ஒரு நிறைவேற்றப்பட்ட வாக்காக இருந்தது.